Subscribe Us

Header Ads

Life Poems and Quotes In Tamil

LIFE POEMS IN TAMIL


Life Poems and Quotes In Tamil



வாழ்கை ஒரு அழகான பயணம். வாழ்க்கையில் நாம் பல மனிதர்களுடன் பயணம் செய்வோம். அவர்கள் பல அழகிய நினைவுகளையும் சிலர் புது  வாழ்க்கை பாடங்களையும் நமக்கு காற்று கொடுத்து செல்வர். வாழ்க்கையும் ஒரு கவிதையை போல, அதனை உணர்ந்து எழுதினால் தான் அது நமக்கு காலத்தில் அழியாத காவியமாக அமையும்.உங்கள் வாழ்க்கை பயணமும் அழகாக தொடர இதோ உங்களுக்காக தமிழில் எழுதிய Life Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.



Life Poems and Quotes in Tamil


1. எல்லாம் ஒரு நாள் 
மாறிவிடும் என்ற நம்பிக்கையோடு 
நாமும் நாட்களை நகர்த்தி 
கொண்டிருக்கிறோம் 


2. எதிர்பாராமல் நிகழ்ந்து 
முடிந்த நிகழ்வுகளே 
என்றும் மறக்க முடியாத 
நினைவுகளாக மாறும் 


3. சோகமும் உண்டு 
சோதனையும் உண்டு 
இன்பமும் உண்டு 
இனிமையும் உண்டு 
வாழ்க்கையில் பல தருணம் 
அதனை ரசிப்போம் 
வாழ்க்கையும் ஒரு பயணம் 
அதனை தொடருவோம்



4. வாழ்க்கை பயணம் 
முடியும் வரை 
முடிந்த வரை 
மனம் மகிழ்ச்சியோடு 
வாழ்வோம் வளருவோம் 



5. வாழ்க்கை பயணத்தில் 
வாழும் தருணத்தில் 
சில சமயத்தில் 
சிறு விஷயத்தில் 
நம் மனதில் 
நல்ல எண்ணத்தில் 
மலரும் இன்பத்தில் 
மகிழ்வோம் இனிமையில் 



6. அனைத்தையும் கொண்டு 
அன்பை பெற முடியாது 
அன்பை கொண்டு 
அனைத்தையும் பெறலாம் 



7. பாதம் தரையில் இருக்கும் வரை 
பணம் தான் எல்லாம் என்று வாழ்கின்றோம் 
படுக்கையில் இருக்கும் போது
பாசம் தான் எல்லாம் என்று வருந்துகிறோம் 



8. இப்பிறப்பில் பிரசவத்தின் 
இயற்கையில் மண்ணில் நிஜமாய் 
பிறப்பது ஒரு முறை தான் 
இறப்பில் பிறரின் 
இதயத்தில் மறுபடியும் நினைவாய்
பிறப்பது பல முறை தான் 



9. உயிரை விட்டு பிரிகிறோம் 
என்று பயமில்லை 
உறவுகளை விட்டு பிரிகிறோம்
என்பதே வேதனை 
உறவுகளே உயிராகிறது 
உயிர் மூச்சாகிறது 



10. வாழ்க்கை பாதையை 
அழகாய் தேர்ந்தெடுத்து
பாத்தை வைத்தால் 
வாழ்க்கை பயணமும் 
இங்கு அழகே 
பாதை அழகானால் 
பயணமும் அழகுதான் 



11. வானின் விடியல் 
உலகுக்கு தேவை 
வாழ்வின் விடியல் 
உனக்கு தேவை 



12. என் வாழ்க்கை புத்தகத்தில் 
பல எழுத்துப்பிழைகள் இருக்கிறது
அதனை கண்டறிந்து  
மீண்டும் சரியாக எழுதிட 
நான் முயற்சிக்கிறேன்



13. செடியில் இலைகள் 
அதிகம் தான் ஆனால் 
பூக்களைத் தான் 
எல்லோரும் பறிக்கிறார்கள்
வாழ்க்கையில் துயரங்கள் 
நிறைய தான் ஆனால் 
இன்பங்களைத் தான் 
மனமும் தேடுகிறது



14. நாம் இறந்த பின் 
உடல் மண்ணுக்கு 
சொந்தமாகிறது 
உயிர் விண்ணுக்கு 
சென்றடைகிறது 
நம் உள்ளம் மட்டும் பல 
மனிதர்களின் மனதுக்குள் வாழ்கிறது 



15. உன் முயற்சிகள் அனைத்தும் 
வெற்றியில் முடியுமா 
என்று தெரியாது
ஆனால் நிச்சயம் உன்னை
வாழ்க்கையில் முன்னேற வைக்கும்



16. வாழ்க்கையில் 
பிறப்பையும் இறப்பையும் மட்டுமே 
நம்மால் மாற்ற முடியாது
மாற்ற அனைத்தையும் 
நம்முடைய உழைப்பால் 
நாம் மாற்றி கொள்ளலாம்
அல்லது புதிதாய் உருவாக்கலாம்



17. உள்ளத்தின் உணர்வுகள் 
உல்லாசமாவதும் உறைந்துபோவதும் 
உலகத்தின் உறவுகளுக்காக



18. துன்பம் தாண்டி வரும் 
இன்பத்திற்கு ஈடு 
எதுவுமில்லை 



19. நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு 
எதிராக அமைவது தான் 
எதிர்காலம் 


 
20. துன்பங்களைத் தூரத்தில்  
தூக்கி போடு 
இன்பங்களை இதயத்தில்
இணைத்து விடு 
வாழ்வோம் அமைதியாக 
வளர்வோம் அன்பாக 



21. துன்பங்கள் வந்த போது 
துணிந்து எழ தயங்காதே 
இன்பங்கள் வந்த போது 
மகிழ்ந்து வாழ மறக்காதே 



22. அன்பின் உணர்வில் 
அகில உறவுகளுடன் 
பழகுவோம் பயணிப்போம் 
அமைதியான உலகத்தில் 
அழகிய உள்ளதோடு 
வாழ்வோம் வளருவோம்



23. சிந்தியுங்கள்  நல்ல 
அறிவு பிறக்கும் 
நேசியுங்கள் நல்ல 
அன்பு பிறக்கும் 



24. இப்பிறப்பில் அன்னையின் 
கருவறையில் பிறப்போம் 
இறுதியில் அனாதையாய் 
கல்லறையில் மடிவோம் 
இடையில் அன்பின் 
அரண்மனையில் வாழ்வோம் 



25. பூக்கள் மலர உரம் தேவை 
புன்னகை மலர உறவுகள் தேவை 



26. கடலை சேர்ந்ததும் 
நதிகளும் தொலைந்தது 
கண்ணீர் சிந்தியதும் 
பாரங்களும் தூரமானது 
ஆதவன் வந்ததும் 
நிலவும் மறைந்தது 
ஆறுதல் சொன்னதும் 
நிம்மதியும் நிறைந்தது 
மழை பொழிந்ததும் 
கோடையும் குளிர்ந்தது 
மகிழ்ச்சி பிறந்ததும் 
கவலைகளும் குறைந்தது



27. சிறகுடன் இருக்கும் 
பறவைகள் விண்ணில் 
சிந்தனைகள் இருக்கும் 
மனிதர்கள் மண்ணில் 
உயரத்தை தொடுவார்கள் 



28. மலர்களும் இலைகளும் 
உதிர்ந்தாலும் 
செடி உயிருள்ளவரை 
வாழ்கின்றது 
இன்பங்களும் துன்பங்களும் 
கடந்தாலும் 
வாழ்க்கை முடிவுள்ளவரைப் 
பயணிக்கிறது 



29. வாழ்க்கை ஒரு முறை தான் 
இப்பிறப்பில் 
வாய்ப்புகள் பல முறைகள் 
இவ்வுலகில் 
வாழ்வோம் இன்பமாக 
வளர்வோம் இயற்கையாக 
வாழ்த்துவோம் இனிதாக 



30. வாழ்க்கை எனும் புத்தகத்தில் 
நாம் சந்திக்கும் ஒருவரும் 
வயதாகி முதுமை நேரத்தில் 
நம் கடைசியில் எழுதும் 
வரிகளின் முற்றுப்புள்ளியில் 
இருப்பதில்லை பலரும் 
நாம் செல்கிறோம் தனிமையில் 
கடைசியில் மரணத்தில் நாமும் 



31. கவலைகளை மறைக்கும் 
கருவி புன்னகை 
மனதின் மகிழ்ச்சி 
அருவி புன்னகை 
காலமெல்லாம் வேண்டும் 
சிறிய புன்னகை 
முகம் மலர தேவை
நிறைய புன்னகை 
அனைவரும் வாழ்வில் 
தேடும் புன்னகை 
அன்பின் உருவில் 
கொடுப்போம் புன்னகை



32. சிறு விதை கூட 
விதைத்தவன் முன் 
உயரமாக வளர்ந்து 
மரமாக மாறி நிற்கிறது
நீயும் உன்னை தாழ்த்தியவன் முன்
தலை நிமிர்ந்து வெற்றியாளராக 
மாறி வாழ வேண்டும் 



33. வாழ்க்கையில் நடக்கும் 
அனைத்தும் சரியான நேரத்தில்
சரியான இடத்தில் 
சரியான காரணத்துடன் நடக்கும்



34. வாழ்க்கையில் நீ உன் 
மனசாட்சிக்கு உண்மையாக 
இருந்து விட்டாலே போதுமானது



35. வாழ்க்கையில் யாருக்கும் 
சந்தோசங்கள் தானாக 
அமைவதில்லை
நாம் தான் நமக்கான 
சந்தோசத்தை 
அமைத்து கொள்ள வேண்டும்



36. நிறைவான நிம்மதியான 
வாழ்க்கையை வாழ
நாம் நல்ல சிந்தனைகளோடு 
நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்



37. வாழ்க்கையில்
அமைதியும் 
பொறுமையும் வேண்டும்



38.  மற்றவர்கள் வாழும் 
வாழ்க்கைக்கு ஆசைப்படாமல்
தனக்கு பிடித்த வாழ்க்கையை
அமைத்து கொண்டு 
அதை சிறப்பாக வாழ்வது நல்லது



39.  வாழ்க்கையில் பலரிடம் 
பணம் இருக்கிறது
ஆனால் நிம்மதி இருப்பதில்லை
பணம் வந்தபின் 
நல்ல குணம் மறைந்து போகிறது



40. வாழ்க்கையில் 
எதிர்பார்ப்புகளைக் 
குறைத்து விட்டு
வாழ்க்கையை எதிர்கொள்ளும் 
ஆற்றலை கற்று கொண்டால்
அனைத்தையும் எளிதாக 
சமாளித்து சந்தோசமாக வாழலாம்



41. நாம் வாழ்க்கையை 
வாழ்வது சிறிது காலம் தான்
அதிலும் வாழ்க்கையைப் 
பற்றிய கவலைகளே நமக்கு அதிகம்



42. வாழ்கையில் 
குறிக்கோள்கள் வேண்டும்
இல்லையெனில் 
வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும்



43. நம்மை பற்றி யார் 
என்ன நினைத்தாலும் 
நமக்கான வாழ்க்கையை 
நாம்தான் வாழ வேண்டும்
அந்த வாழ்க்கையை 
நலமாக வாழ வேண்டியது 
நமது பொறுப்பு
வாழும்போது நல்ல செயல்களைச் 
செய்வது மேலும் சிறப்பு



44. பிறரிடம் குறை காணாமல்
நம்முடைய குறையை 
நாம் திருத்தி கொண்டாலே போதும் 
நம் வாழ்க்கை இனிதாகும்



45. வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது
ஆனால் சிலர் அதனை 
சுமையாக பார்க்கிறார்கள்



46. வாழ்க்கையில் பல 
பிரச்சனைகளைச் 
சந்திக்கும் போது 
அதற்கான முடிவுகளை 
மட்டும் யோசியுங்கள்
அந்த பிரச்சனைகளை 
நினைத்து கவலை படாதீர்கள்



47.  கடந்த நிகழ்வுகளை 
எண்ணி கவலைப்பட்டு இருந்தால்
உங்களின் எதிர்கால 
கனவுகள் நிறைவேறாது



48.  வாழ்க்கையின் 
இறுதியில் நாம் சேமித்த 
அன்பும்  நினைவுகளுமே 
நாம் வாழ்ந்த 
வாழ்க்கையின் அர்த்தத்தை 
நமக்கு உணர்த்தும்



Post a Comment

0 Comments