Subscribe Us

Header Ads

Love Feeling Poems and Quotes In Tamil

LOVE FEELING POEMS AND QUOTES 

IN TAMIL


Love Feeling Poems and Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே.சில நேரங்களில் நம் மனதில் தோன்றும் காதலின் உணர்வுகளை நாம் உணர்ந்தாலும்,நம்மால் அதனை வார்த்தைகளால் பிறரிடம் சொல்ல முடியாது.இந்த உணர்வுகள் எல்லாம் எழுத்துக்கள் வடிவில் உருவமாய் இருப்பது தான் காதல் உணர்வு கவிதைகள். நம்முடைய அழகிய இந்த காதல் உணர்வுகளை நம் அன்பானவர்களிடம் கவிதையாகவும் பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள். 


Love Feeling Poems and Quotes in Tamil



1. காகிதத்தில் சொற்களை 
சேகரித்தும் எழுதவில்லை 
கண்களில் கண்ணீர் துளிகளைச்
சேர்த்தும் அழவில்லை 
மனதில் சொல்லமுடியாத 
சோகங்கள் குவிந்தும் 
கவலையில்லை 
மன நிம்மதிக்கு பாடல்கள் 
இருந்தும் கேட்கவில்லை 
என் இதய கவர் கள்வனைத் 
தேடவில்லை 
எங்கோ அவன் எனக்கும்
தெரியவில்லை 



2. என் காதல் விடுகதைக்கு 
விடை நீ தந்தால் 
என்னை நோக்கி 
என் கடைசி 
மூச்சும் விடைபெறும் 
விண்ணை நோக்கி 



3. மழைதுளியும் பூமியை தொட
மாலைதென்றலும் கடந்து போக 
வானமும் அமைதி பெற 
வானவிலும் அழகாய் தோன்ற 
உன் நினைவுகள் மட்டும் மறையாமல் 
என் நெஞ்சில் மீண்டும் 
மலர்கின்றது



4. கண்ணெதிரில் நீ இருந்த 
பொழுது தோன்றவில்லை 
கண்கள் தொலைவில். 
நீ இருந்த பொழுது
தோன்றியதே காதல் 



5. நெருக்கத்தில் நீ யாரோ 
என்றே நினைத்தேன் 
அப்பொழுது 
நிமிடமும் நீ வேண்டும் 
என்றே நினைக்கிறேன்
இப்பொழுது என் மனதில் 



6. கண்ணே 
உன்னிடமிருந்து ஒரு காதல் 
கடிதம் வேண்டாம் 
உன்கண்களிருந்து 
ஒரு காதல் பார்வை வேண்டும் 



7. என் உள்ளம் அலைபாயுதே 
உன் கையில் கரையேறுமோ 
என் மனசு தடுமாறுதே 
உன் மடியில் தலைசாயுமா 



8. உன் சொந்தம் ஒன்றை 
உணர்ந்தபின் 
சொர்கம் என்ற ஒன்றை 
அடைந்தேன் 




9. கண்கள் கலங்குதும் 
இதயம் இயங்குவதும் 
உன்னால் மட்டுமே 
நான் உனக்கு மட்டுமே 



10. என் இருக்கண்கள்  
கனவோடு உறங்கிறது 
என் இதயகண்கள்
கண்மணியோடு உரையாடுகிறது



11. இனிமையான இரவும் 
தனிமையான இதயமும் 
அமைதியான உள்ளமும் 
நிம்மதியான உறக்கமும் 
இருந்தும் இருக்கண்கள் 
தேடும் தேவதை
கண்ணெதிரில் காட்சி 
தருவாளா தாலாட்டுவளா 
என்னை எப்பொழுதும் 
காதலிப்பாளா கடைசிவரை 



12. என் கண்கள் கண்டுபிடித்த 
ஓவியம் நீயடி 
என் இதயம் காதலித்த
காவியம் நீயடி



13. கண்கள் ஊமையில் 
கரங்கள் மட்டுமே 
உன்னுடன் இணையட்டும் 
உயிர் உறைகளில் 
உள்ளம் மட்டும் உன்னுடன் 
உரையாடட்டும் 



14. மரணம் வரை 
என் மனம் மனனம் 
செய்தது ஒரு உயிரை  
அது உன்னுடைய பெயரை  



15. கடலின் அலைகள் எத்தனை 
முறை அழைத்தும் கரை 
செல்வதில்லை 
காதல் நினைவுகள் 
எத்தனை முறை அழித்தும் 
கண்ணீர் நிற்கவில்லை 



16. இரு உயிரில் ஏற்படும்
மோதல் 
இடையில் உணர்வில் 
ஏற்படும் தேடல் 
இறுதியில் உள்ளத்தில் 
ஏற்படும் காதல் 



17. தூரமாய் நீ போகையில் 
கொஞ்சம் பாரமாய் என் நெஞ்சம் 
நீண்ட நேரமாய் நீ இல்லாமல் 
மரமாய் நானும் நிற்கையில் 
மீண்டும் உன் கரம் பிடிக்கும் 
வரம் வேண்டுமே 
என் கண்மணியே 



18. உந்தன் உள்ளம் 
உணர்தேன் 
நொடியில் 
நீதான் உலகம் 
நினைத்தேன் இறுதியில் 



19. உலகம் கண்டு கொண்டேன் 
என்றது உன்னை கண்டுபிடித்த
எனது கண்கள் 



20. என் கண்களும் கரு
மேகங்களாய் கண்ணீர் பொழிகிறது 
உன் வார்த்தைகள் வறண்டு போகையில் 



21. உலகத்தில் 
கோடி பெண்கள் இருந்தும் 
என் உள்ளத்தில் கோபுரமாய் 
இருப்பவள் நீயடி 



22. நீண்ட இரவோடு நிலா 
அங்கு வானில் 
நீயில்லா நினைவோடு 
நான் இங்கு வாசலில் 



23. என் பார்வையில் விழுந்த 
பறவையாய் நீ என் இதயக்கூண்டில் 
இருந்து பறந்து போனாய் 



24. உன் விழியில் விழுந்து 
உன் இதயத்தில் இருக்கும் எனக்கு 
சிறை ஒன்று நீ கொடுத்து 
என்னை அடைத்து வைத்திடு 
சிறகு ஒன்று நீ கொடுத்து 
என்னை அனுப்பி வைக்காதே 



25. கரையும் காலத்திற்கு 
கலங்கும் கண்களுக்கு 
உருகும் உள்ளத்திற்கு 
உறையும் உயிருக்கு 
வாடும் வாழ்வுக்கு 
வருந்தும் வார்த்தைக்கு 
என் இதயம் காத்திருக்கும் 
என்றும் உன் பதிலுக்கு 



26. உதடுகள் ஊமையாகிறது
உள்ளம் ஊஞ்சலாடுகிறது 
என் முன் அவள் 
தோன்றிய பொழுது 



27. யாரோ நீ என்று அழைத்த 
உதடுகள் அன்று 
யாவும் நீ என்று
நினைத்த உள்ளம் இன்று
 


28. உன் கண்களை பார்த்து 
பேச முடியவில்லை 
உன் கரங்களைப் பிடித்து 
பேச முடியவில்லை 
உன் அருகில் நெருங்கி 
பேச முடியவில்லை 
உன் அழகில் மயங்கி 
பேச முடியவில்லை 
இருந்தும் இனியவளை 
நினைத்து நித்தமும் 
எண்ணுகிறேன் எழுதுகிறேன் 
காதல் கவிதையில் 



29. அவள் அருகில் அமர்ந்த போது 
என் அகம் அமைதியாகிறது 
அவள் தொலைவில் இருந்த போது 
என் அழுகை அருவியாகிறது 



30. காதல் கதை எழுதியது 
இருவரின் இதயங்கள் 
அவர்கள் அறியாமலே 
காதல் கதை படிக்கிறது 
காதலர்களின் கண்கள் 



31. காதல் தோன்றியதற்கும் 
காரணம் இல்லை 
காதல் தோல்விக்கும் 
காரணம் இல்லை 
விடையில்லா விதியோடு 
விடைபெறுகிறது காதல் 



32. நீ என்னை 
விட்டு பிரிந்து விட்டாய்
நீ தான் வேண்டும் என
அடம் பிடித்து கண்ணீர் விடும்
என் இதயத்திற்கு
இனி நான் என்ன 
ஆறுதல் சொல்வேன்




33. காதலும் அன்பும்
நம் இருவரையும் 
இணைய வைத்து 
காலமும் தூரமும் 
நம் இருவரையும்  
பிரிய வைத்தது 



34. உன்னை மறக்க வேண்டும் 
என எண்ணும்  போதெல்லாம்
மீண்டும் மீண்டும் வந்து போவது 
உன்னுடைய நினைவுகளே



35. என் காதலை 
உன் இதயத்தில் 
சேர்க்க தெரியாமல்
தினமும் கண்ணீர் கடலில் 
நான் மூழ்கிறேன் 



36. நாம் இருவரும் 
பிரிந்து விட்டோம்   
ஆனாலும் நம் இரு இதயமும் 
அதனை ஏற்க மறுகின்றது
இன்னும் நம் காதலை சுமக்கின்றது



37. சிறப்பாக உன்னோடு 
வாழ்ந்த இந்த வாழ்கை கூட
இப்போது நீயின்றி 
வெறுப்பாய் ஆனது



38. உன் இதயத்தில் வாழ 
தகுதியற்றவனாய் 
நானும் இப்போது இருக்கிறேன்
என் மனதின் வலியைத்  
தாங்க  முடியாமல் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
உயிர் இழக்கிறேன்



39. உன்னை ஒரு நொடி 
பார்க்கவில்லை என்றாலும் 
என் இதயம் பதறி போகிறது
என் இதயம் என்னுடையது 
ஆனால் அது 
துடிப்பது என்றும் உனக்காக



40. அன்று உன் காதலை எனக்கு 
அன்பாக கொடுத்தாய் 
இன்று நீ  
எனக்கு கண்ணீரை 
அள்ளி கொடுக்கிறாய்



41. உன் பிரிவிற்கு பின்
பிணமாக தான் 
நான் இருக்கிறேன்
என் உயிர் உன்னிடத்தில்
இருப்பதால்



42. உன்னோடு சேர்ந்து வாழ 
எனக்கு பாக்கியம் இல்லை
உன்னை நித்தம் நினைத்து
காலமெல்லாம் 
உன் நினைவுகளோடு 
வாழ்கிறேன் 



43. காதல் என்ற சொல்லை கேட்டாலே 
என் இதயம் உன்னை நினைக்கிறது
இந்த பிறவியில் 
என் காதலுக்கு அர்த்தம் நீயே



44. என் உயிரை மட்டும் 
என்னிடம்  விட்டு 
நீ சென்று விட்டாய்
உன் நினைவுகள் 
எனக்கு மரண வலியை 
ஏற்படுத்தி என்னை 
நாளும் கொல்கிறது 



45. என் வாழ்க்கையே  
நீதான் என்று இருக்கிறேன் 
நீ என்னை விட்டு  பிரிந்தால்
என் வாழ்க்கையும் 
அர்த்தமில்லாமல் போய் விடும்
நானும் அனாதையாகிவிடுவேன்


Post a Comment

0 Comments