Subscribe Us

Header Ads

Peace Quotes In Tamil

PEACE QUOTES IN TAMIL


Peace Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே, நாம் அமைதியான சூழலில் வாழ்வது நமக்கு மிகவும் அவசியம். அமைதியான சூழலில் நாம் வாழும்போது நம் மனதில்
நல்ல எண்ணங்கள் பிறக்கும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். சிலர் அமைதியான இயற்கை சூழலில் யோகா மாற்றும் உடற்பயிற்சிகளைச் செய்ய விரும்புவார்கள். இதனால், மனதின் அமைதியைப்  பெறலாம். நாம்  அனைவரும் அமைதியான சுற்றுசூழலில் மன நிம்மதியோடு வாழ வேண்டும். இதோ இந்த பதிவில் தமிழில் எழுதிய Peace Quotes-யை கொடுத்துள்ளோம்.



Peace Quotes In Tamil


1. மன அமைதியோடு வாழ்வதே
நம் வாழ்க்கையில் நமக்கு 
கிடைத்த பெரும் மகிழ்ச்சியாகும்



2. கோபம் கொள்ள வேண்டிய
இடத்தில் கூட பொறுமையாக 
இருக்கும் நிதானம் இருந்தால்
வாழ்கையில் அனைத்தையும் 
சுலபமாக கடந்து செல்லலாம்



3. வாழ்க்கையில் 
பணம்,பதவி,வசதி
இருந்த போதிலும்
மன நிம்மதி இல்லாத 
ஒரு மனிதனின் வாழ்க்கை
நிறைவு பெறாது



4. வாழ்க்கையில்
அனைவரும்
ஆசைப்படுவது
மன நிம்மதியை தான்



5. மன அமைதி பெற்ற 
ஒருவரின் மனதில் 
பல நல்ல எண்ணங்கள் பிறக்கும்
அவர் வாழ்க்கையில் 
மகிழ்ச்சிகளும் பெருகும்



6. மனிதன்
புன்னகையையும் மௌனத்தையும் 
கொண்டிருந்தாலே
வாழ்க்கையில் எல்லாவற்றையும்
கடந்து போக முடியும்



7. மனதில் நிம்மதி
இருந்தால் உறக்கம் கூட
சொர்க்கம் தான்



8. நம்மிடம் இருப்பதை எண்ணி
சந்தோசம் கொள்ளாமல்
அளவுக்கு மீறி 
ஆசைப்படுவதால் தான்
மன நிம்மதியையும் 
இழந்து விடுகிறோம்



9. உடல் ஆரோக்கியமும்
மன அமைதியும்
நம் வாழ்க்கையில்
கிடைத்த மிகப்பெரிய 
பாக்கியமாக
கருத வேண்டும்



10. வாழ்க்கை நெறிகளை
கடைப்பிடித்து
நல்ல செயல்களைச்  
செய்யும் மனிதனின் வாழ்க்கையில்
மன நிம்மதி 
தானாகவே அமைந்து விடும்



11. சிலருக்கு
வறுமையிலும் இருக்கும்
மன அமைதி
ஏனோ தெரியவில்லை
வசதி அடைந்த பின் 
காணாமல் போகிறது



12. பணத்தை கொண்டு
எல்லாவற்றையும் வாங்கி மகிழும் 
மனிதன் மன நிம்மதியை 
வாங்க முடியாமல் அழுகிறான்



13. பணம் மட்டுமே 
வாழ்கை இல்லை
பாசம், மன அமைதி, 
ஆரோக்கியம், மகிழ்ச்சி 
என அனைத்தை விஷயங்களும்  
அடங்கியதே வாழ்கை



14. சிலர் வாழ்க்கையை 
எப்படி 
வேண்டுமானாலும் வாழலாம் 
என்ற எண்ணத்தில் 
வாழ்க்கையில் தவறான 
பாதையில் சென்று 
மன நிம்மதியையும் 
தொலைத்து விடுகிறார்கள்



15. மனதில் அமைதி இல்லாமல்
என் இமைகளும் மூடாமல்
என் உறக்கத்தையும் 
நான் இழந்து விட்டேன்



16. நம் மனசாட்சியைத் தவிர 
இங்கு நமக்கு சிறந்த நண்பன் 
வேறு யாருமில்லை
மனசாட்சி சொல்வதை 
கேட்டால் 
மனமும் சாந்தமாகும்



17. மனிதன் மனதில் நிம்மதி பிறக்க
உலகம் எங்கும் அமைதி இருக்க
எல்லோரும் இன்பமாக வாழ
எந்நாளும் இறைவனை 
பிரார்த்திப்போம்



18. என்றும் தூங்குவதற்கு முன்
உன் கஷ்டங்களை 
எல்லாம் கடவுளிடம் கூறி விட்டு
மன அமைதியோடு உறங்க செல்



19. என் எதிர்காலத்தை
ப் பற்றி
நினைத்தபடியே 
என் மனமும் அலைபாய்கிறது
என் நிம்மதியும்
என்னிடம் இல்லை



20. சில உறவுகளின் பிரிவால்
என் மனதில் வலிகளும் நிறைய
என் மனதின் அமைதியும் குறைய
என் வாழ்வும் இருளானது
என் இதயமும் அழுதது



21. சில சமயங்களில்
நாம் மனம் விட்டு அழுவதால்
நமக்கு மன அமைதியும்
கிடைக்கிறது
நம் உள்ளத்தில் தெளிவும்
பிறக்கிறது



22. நமக்கு மன நிம்மதி கிடைக்க
எல்லோரிடமும் அன்பாகவும்  
மரியாதையுடன் பேச வேண்டும்
பிறரின் மன நிம்மதியை 
அழிக்காமல் இருக்க 
நாம் அவர்கள் மனம் நோகாதபடி 
பேச வேண்டும்



23. கோபம், பொறாமை, ஆணவம் 
இருக்கும் மனதில்
மன நிம்மதி இருப்பதில்லை



24. ஒரு மனிதனின் வாழ்க்கையில் 
பொன் பொருளை விட
விலை மதிக்க முடியாத
செல்வம் அவனின் 
மன நிம்மதி தான்



25. பேராசையால்
சில மனிதர்கள்
தங்களின்
மன அமைதியைத் 
தொலைத்து விட்டு
பிறகு வாழ்நாள் முழுவதும்
வருந்துகிறார்கள்



26. குடிசையில் வாழும் 
ஏழை தன்னிடம்
எதுவுமில்லை என்றாலும் 
இருப்பதை எண்ணி மகிழ்ந்து
மன நிம்மதியோடு
வாழ்க்கையை வாழ்கிறான்
சொகுசு வீட்டில் வாழும் பணக்காரன்
எல்லாம் இருந்தும்
இன்னும் பற்றவில்லை 
என நினைத்து வாழ்நாள் முழுவதும்
தன் மன நிம்மதியை 
இழந்து விடுகிறேன்



27. நிறைவோ குறைவோ
என்றும் உங்களிடம் இருப்பதை 
எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்
இல்லாததைப் பெற முயற்சி செய்யுங்கள்



28. கடவுள் நம்பிக்கை
கொண்ட மனிதனின் வாழ்வில்
மன துயரங்கள் நீங்கி 
மன நிம்மதியும் கூடும்



29. யாருடைய வாழ்க்கையையும்
உங்களின் வாழ்க்கையோடு 
ஒப்பிடுவதைத் தவிர்த்து கொண்டால்
மன நிம்மதியோடு
உங்கள் வாழ்க்கையும் நிறைவாகும்



30. சிலரின் 
கடுமையான வார்த்தைகளும் 
தீய செயல்களும் கூட 
நம் மன நிம்மதியைப் பறிக்கின்றன
யார் மனதையும் புண்படுத்தாமல் 
வாழ பழகி கொள்ளுங்கள்



31. வாழ்க்கையும் குறுகிய காலம் தான்
எந்நாளும்
மகிழ்ச்சியோடும்
மன அமைதியோடும் 
வாழ்வோம்



32. சில சமயங்களில்
மகிழ்ச்சியானதை நினைப்பதாலும்
துயரத்தை மறப்பதாலும்
நிம்மதி பிறக்கின்றது



33. அவமானம் படும் இடத்திலும் 
கோவப்பட வேண்டிய இடத்திலும்
அமைதியாக இருப்பது 
பிறரின் மனம் 
உடைந்து போக கூடாது 
என்பதற்காகவும் நம்முடைய 
மன நிம்மதியை 
நாம் பாதுகாத்து கொள்ளவும் தான்



34. யார் என்ன சொன்னாலும் 
நம்முடைய வாழ்க்கையை 
நாம் நன்கு வாழ்ந்தாலே 
நமக்கு மன அமைதி கிடைக்கும்



35. சிலர் அமைதியாக 
இருப்பது கூட 
பலரின் பார்வைக்கு 
அவர்கள் திமிராக 
இருப்பதை போல தெரியும்



36. மன அமைதி பெறும் போது
நாம் நிம்மதியாக உறங்க முடியும்



37. நம்முடைய தன்னடக்கமும் 
அமைதியும் நம்மை 
வாழ்க்கையில் உயர்த்தும்



38. அமைதியாக 
இருப்பவர்கள் தான் 
அதிகம் சிந்திப்பார்கள்
வாழ்க்கையில் பல சிறந்த 
முடிவுகளையும் எடுப்பார்கள்



39. ஆடம்பர வாழ்க்கை 
அமைந்தாலும் இன்று 
பலரும் மன அமைதியைத் தேடி
பல இடங்களுக்கு செல்கிறார்கள்



40. தினமும் சிறிது நேரம் 
அமைதியான சூழலில் 
நாம் அமர்ந்து 
நம்முடைய மனதை 
அமைதியாக்க வேண்டும்



41. இன்ப வாழ்விற்கும்
மகிழ்ச்சியான மனதிற்கும் 
தேவை அமைதி



42. அதிகம் பேசுபவர்களைக் 
காட்டிலும் அமைதியாக 
இருப்பவர்கள் 
தெளிவாக யோசிப்பார்கள்



43. வாழ்க்கையில் 
நாம் நினைத்த படி 
எதுவும் நடக்கவில்லை 
என்றாலும்
நாம் நினைத்தால் நம்மால் 
மன நிம்மதியோடு வாழலாம்



44. பிறர் நமக்கு எத்தனை 
துன்பங்கள் கொடுத்தாலும்
அதனை நாம் எவ்வாறு 
சமாளிக்கிறோம் 
என்பது தான் மிகவும் முக்கியம்



45. கடந்த விஷயங்களைப் பற்றி 
யோசித்தால் நம்மால் 
வருவதை எதிர் கொண்டு 
வாழ முடியாது
நம்முடைய மன நிம்மதியும் 
அழிந்து விடும்



46. வயதான காலத்தில் கூட 
சிலர் மன நிம்மதி 
இல்லாமல் வாழ்கிறார்கள்



47. இன்னும் நடக்காத 
ஒன்றை நினைத்து 
நம்முடைய மன நிம்மதியை 
நாமே அழித்து விடுகிறோம்



48. பேராசை இல்லாமல்
வாழ்பவர்கள் 
மன அமைதியோடு 
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்



49. பிறருடைய 
வாழ்க்கையைப் 
பற்றி பேசாமல் நம்முடைய 
வாழ்க்கையை முதலில் 
சிறப்பாக வாழ வேண்டும்
பிறரை பற்றி பேசுவதால் 
நம்முடைய மன அமைதியும் 
காணாமல் போகிறது



50. என்னுடைய மன நிம்மதி 
என்னிடத்தில் இல்லாததால் 
வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் 
எதுவும் இல்லாதது போல் 
நான் உணருகிறேன் 



51. எல்லோரிடமும் 
அளவாக பழகுவது 
நம்முடைய 
மன நிம்மதிக்கு நல்லது


Post a Comment

0 Comments