Subscribe Us

Header Ads

Relationship Quotes In Tamil

RELATIONSHIP QUOTES IN TAMIL



Relationship Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நாம் வாழும் இந்த வாழ்க்கையில் பல உறவுகள் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. ஒவ்வொரு உறவுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. நம்முடைய உண்மையான உறவுகளே நம் வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம். நம்முடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்து கொள்வது நம்மை நேசிக்கும் உறவுகளே. வாழ்கை பயணம் முடியும் வரை பல உறவுகள் நமக்கு உறுதுணையாக இருக்கிறது. உறவுகளின் அன்பாலே இந்த உலகமும் இயங்குகிறது. நம் வாழ்க்கையில் இருக்கும் அணைத்து உறவுகளையும் போற்றுவோம், அவர்களின் அன்போடு நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம். இந்த பதிவில் உங்களுக்காக தமிழில் எழுதிய Relationship Quotes-யை கொடுத்துள்ளோம்.


Relationship Quotes In Tamil


1. எந்த உறவாக இருந்தாலும் 
அதில் உண்மையான 
அன்பும் பாசமும் 
இருந்தால் மட்டுமே
நீ விலகி சென்றாலும் 
அது உன்னை தேடி வரும்



2. சில உறவுகளால் 
நம் மனதிற்கு இன்பம்
சில உறவுகளால் 
நம் மனதிற்கு துன்பம்



3. சில உறவுகள்
வாழ்க்கையின் பாதியில் வந்தாலும்
இறுதி வரை நிலைக்கின்றது



4. நம் வாழ்க்கையின் பயணத்தில் 
யார் முதலில் வருவது 
என்பது முக்கியமில்லை
யார் இறுதி வரை 
நம்மோடு இருக்கிறார்கள் 
என்பதே முக்கியம்



5. தேவையற்ற கோபத்தினால் 
பல உறவுகளைத் தொலைக்கிறோம்
நம்முடைய கோபத்தை 
நிதானமாக கையாள தெரிந்தால்
பல உறவுகளைத் 
தக்க வைத்து கொள்ளலாம்



6. சில பொய்யான உறவுகளோடு 
இருப்பதை விட
காலம் முழுவதும்
நம் மனசாட்சியின் துணையோடு 
தனிமையிலே இருந்து விடலாம்



7. வாழ்க்கையில் பணம் பதவியைத்
தேடுவதை விட
நல்ல உறவுகளைச் 
சம்பாதிப்பதே முக்கியம்



8. உன்னை நேசிக்கும் உறவுகள்
உன் மேல் வைத்த
அளவற்ற அன்பால்
இறுதி வரை 
உன்னை நேசித்து கொண்டு தான் 
இருக்கும்



9. எந்த உறவையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்
நல்ல உறவுகளைத் 
தொலைத்து விட்டு பிறகு 
வருந்தாதீர்கள்



10. வாழ்க்கை கற்று கொடுக்கும் 
பாடத்திற்குப்  பின்னே
சில உறவுகளின் அருமை புரிகிறது



11. உங்களுக்காகவே வாழும் 
உறவுகளின் மனதை 
ஒரு போதும் நோகடிக்காதீர்கள்
உறவுகளின் உண்மையான
அன்பை நாளும் மறக்காதீர்கள்



12. நானே போய் பேச மாட்டேன் 
என்ற நம்முடைய பிடிவாதத்தினால் 
இங்கு தூரமாய் செல்கிறது
பல உறவுகள்



13. சில சமயங்களில்
உறவுகளிடம் தோற்று போவதும்
விட்டு கொடுத்து செல்வதும்
நல்லதே



14. ஒருவருக்கொருவர்கிடையே
புரிந்துணர்வு இல்லாததால் 
பல உறவுகளும் 
இங்கு பிரிவில் முடிகிறது



15. நம்முடைய வாழ்க்கையில் 
உறவுகள் வருவதும் போவதும் 
இயல்பது தான்
சில உறவுகள் மட்டும் 
நிலையாக இருப்பதே 
இங்கு அதிசயமாகிறது



16. உன்னையே உலகம் 
என நினைத்து நாளும் 
உனக்காகவே வாழும் 
ஒரு உறவு கிடைத்தால் 
உன் வாழ்க்கையும் சொர்க்கமே



17. பிரிக்க முடியாத 
உறவுகளைக் கூட 
பிரித்து விடுகிறது 
நம்முடைய கோபமும் பிடிவாதமும்



18. எத்தனை வருடங்கள் 
கழித்து சந்தித்தாலும் 
அந்த உறவில் 
அன்பும் பாசமும் 
மாறாமல் இருக்க வேண்டும்



19. நம்பிக்கையும் அன்பும் 
குறைவதால் 
சில நேரத்தில்
உறுதியான உறவும் கூட 
உடைந்து போகிறது



20. நான் நெருங்கி பழக 
சில உறவுகள் 
என்னை விட்டு விலகி போகிறது
என்னை பிடிக்கவில்லையா?
அல்லது இப்போது
நான் தேவைப்படவில்லையா?
என்று எனக்கும் தெரியவில்லை



21. நமக்கு ஆறுதல் 
தருவதும் உறவுகளே
நம்மை அவமானப்படுத்துவதும் 
உறவுகளே



22. எது பொய்யான உறவு 
எது உண்மையான உறவு 
என்று ஆராய்ந்து பார்த்து 
பழகுவதற்குள் 
வாழ்கையின் குறுகிய காலமும் 
முடிந்து விடுகிறது



23. பொய்யான உறவுகளைத் 
தேடி சென்று
உன் நிம்மதியை 
நீ இழந்து விடாதே
நீ யார் என்று 
மறந்து விடாதே



24. பொய்யான உறவுகளோடு 
பழகினால் காலமெல்லாம்
போலியாய் நாமும் 
நடிக்க வேண்டியிருக்கும்



25. உறவுகளிடம் மனம் விட்டு பேசலாம்
ஆனால் மனதில் நினைத்தை 
எல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
பலர் பிரிந்து செல்வார்கள்



26. உன் உறவுகளின் தவறுகளை 
மட்டும் சுட்டி காட்டாதே
உன் தவறுகளையும்
திருத்தி கொள்



27. நம்முடைய 
உண்மையான உறவுகளே 
நம் முகத்திற்கு நேராக நின்று
நம்முடைய குறைகளை 
வெளிப்படையாக சொல்லும் 
ஆனால்
நம்முடைய வெற்றியை 
பார்த்து மகிழ்ச்சி கொள்ளும்



28. பல உறவுகள் 
உங்களை ஏமாற்றிருந்தாலும்
நீங்கள் எந்த உறவையும் 
ஏமாற்றாமல் பார்த்து கொள்ளுங்கள்



29. மரண வலியை கூட
தாங்கி கொள்ளலாம்
உறவுகள் விட்டு போகும் 
வலியைத்  தாங்கி கொள்ள முடியாது



30. அன்பின் அருமை 
புரியாதவர்களின் மேல் 
நாம் அன்பு வைத்தால் ஒரு நாள் 
ஏமார்ந்து தான்
போய் விடுவோம்



31. நம் உறவுகளை மறுபடியும் 
எப்போது சந்திப்போம் 
என்று தெரியாது
ஒவ்வொரு சந்திப்பையும் 
மகிழ்ச்சியான சந்திப்பாக 
அமைத்து கொள்ளுங்கள்



32. சில உறவுகள் நமக்கு
பல மன காயங்களைக் கொடுத்தாலும்
அந்த உறவுகளை 
வெறுக்கவோ மறக்கவோ 
முடியவில்லை



33. சில உறவுகளால் வாழ்கையில் 
ஆனந்தம் கூடுகிறது
சில உறவுகளால் 
வாழ்க்கையில் இருந்த 
ஆனந்தமும் அழிந்து விடுகிறது



34. நம் வாழ்க்கையில்
எல்லா நிலைகளிலும் 
பல உறவைகளைக் 
கடந்து தான் செல்கிறோம்
உறவுகள் இல்லாமல் 
மனிதனின் வாழ்க்கையும் 
நிறைவாகாது 



35. ஒவ்வொரு உறவும் 
ஒவ்வொரு மாதிரி
நாம் தான் 
ஒவ்வொரு உறவையும் புரிந்து 
அதற்கேற்றபடி 
நடந்து கொள்ள வேண்டும்



36. நம் உறவுகள் செய்யும் 
சிறு தவறுக்காக 
அவர்களை வெறுத்து விடாதீர்கள்



37. யாருக்காகவும் 
உங்களை விட்டு விலகாமல் 
இருக்கும் உறவுகள் கிடைத்தால் 
அவர்களை நீங்கள் 
விட்டு விடாதீர்கள்



38. நீங்கள் நேசிக்கும் 
உறவுகளுக்கு 
உதவாவிட்டாலும் பரவில்லை
அவர்களை 
உதாசீனம் படுத்தாதீர்கள்



39. காலம் மாறுவது போல
நம் வாழ்க்கையில் 
வந்து போகும் உறவுகளும் மாறும்



40. உறவுகளிடம் 
அன்பாக இருக்கலாம்
ஆனால் 
அடிமையாக 
வாழ கூடாது



41. எத்தனை நாள் 
பேசாமல் இருந்தாலும் 
பரவாயில்லை
சில உறவுகளின் 
நெருக்கம் மட்டும் 
என்றும் மாறாது



42. உறவுகளிடம் 
அதிக உரிமையோடு 
பழகுவது ஆபத்து தான்
என்றும் அளவோடு 
பழகுவதே நல்லது



43. ஒரு உறவாவது 
கடைசி வரை நிலைக்காதா 
என்ற ஏக்கத்தில் தான் 
இங்கு அனைவரும் 
வாழ்கிறார்கள்



44. அன்பின் அருமை 
புரிந்தவனுக்கு 
ஏனோ உறவுகள் 
நிலைப்பதில்லை



45. பணத்தை தவறான இடத்தில் 
முதலீடு செய்தால் 
நஷ்டம் நமக்கு தான்
அன்பை பொய்யான 
உறவுகளிடம் கொடுத்தால் 
கஷ்டம் நமக்கு தான்



46. உறவுகள் செய்யும் 
குற்றங்களை மன்னித்து
அவர்களின் குறைகளை 
மறந்து வாழ்ந்தால் 
பல உறவுகள் 
நம்மோடு இருக்கும்



47. நம்மை தேடி வரும் 
உறவுகளை 
நாம் புரிந்து கொள்வதில்லை
நாம் தேடி போகும் 
உறவுகளுக்கு நம்மை 
புடிக்கவில்லை



48. நம்முடைய உறவுகளிடம் 
நாம் அன்பாக இருந்தாலும்
அதே அன்பை 
அவர்களிடமிருந்து  பெறுவதில் 
நாம் தோற்று போகின்றோம்



49. சில உறவுகளுக்கு 
நாம் என்ன செய்தாலும் 
அது குற்றம் தான்
நாம் என்ன பேசினாலும் 
அவர்களின் மனம் 
அதை ஏற்று கொள்ளாது



50. சுயநலத்திற்காக பழகும் 
உறவுகளை அருகில் 
வைத்து கொள்கிறோம்
நம்மை அதிகம் நேசிக்கும் 
உறவுகளைத் தூரத்தில் 
வைத்து விடுகிறோம்



51. என்னை விட்டு விலகி 
சென்ற உறவுகளுக்காக 
நான் ஒரு போதும் 
கண்ணீர் சிந்தியதில்லை



52. சில பொய்யான உறவுகளால் 
நம்முடைய மகிழ்ச்சியை 
நாமே அழித்து விடுகிறோம்




53. மதிக்காத உறவுகளிடம் 
அன்பை செலுத்தி 
நாம் அவமானம் படுவதை 
தவிர்க்க வேண்டும்



54. பொய்யான உறவுகள் 
எப்போதும் 
நம் வாழ்க்கையில் நிலைக்காது



55. நிரந்தரம் இல்லாத 
இந்த உலகில் 
உறவுகளின் அன்பும் 
நிரந்தரம் இல்லை என 
புரிந்து வாழ வேண்டும்



56. சில தவறான வார்த்தைகளால் 
உறவுகள் பிரியலாம்
எல்லோரிடமும் சரியான 
வார்த்தைகளைப் 
பயன்படுத்தி பேசுங்கள்



57. அன்புக்காக நம்மை தேடி
வருபவர்களைக் காட்டிலும்
அவசியம் இருந்தால் மட்டுமே 
பல உறவுகள் 
நம்மை தேடி வருகிறது



58. உறவுகள் விலகி 
செல்லாமல் இருக்க 
நாம் உண்மையாக 
இருக்க வேண்டும்



59. பொய்களைப் பேசி 
நாம் எந்த உறவையும் 
சம்பாதிக்க முடியாது



60. இந்த உலகில் வாழும் வரை 
நம்முடைய உறவுகளை 
நாம் மகிழ்ச்சியாக 
வைத்திருப்போம்
அது தான் நாம் அவர்களுக்கு 
செய்யும் மிகப்பெரிய 
கடமையாகும்



61. உங்களின் பிடிவாத குணம் 
உங்களை பிடித்தவர்களிடமிருந்து 
உங்களை பிரித்து விடும்



62. ஒருவர் இறந்தபின் மட்டும் 
அவருடைய உறவாக 
அவரின் அருகில் சென்று 
கண்ணீர் சிந்தாமல்
அவர் இருக்கும் போதே
அவருக்கு ஒரு நல்ல 
உறவாக இருந்து 
அவரின் வாழ்க்கையில் 
மேலும் மகிழ்ச்சியைச் 
சேர்க்கலாம்


Post a Comment

0 Comments