Subscribe Us

Header Ads

Nature Poems in Tamil

NATURE POEMS IN TAMIL


Nature Poems in Tamil



வணக்கம் நண்பர்களே, இயற்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த மிக பெரிய பரிசு. நாம் இன்றைய நவீன யுகத்தில் வாழ்ந்தாலும் இயற்கை இன்னும் நம் வாழ்வில் பெரும்  பங்கை வகிக்கின்றது. நாம் இயற்கைக்கு நிறைய தீமைகளைச்  செய்தாலும் இயற்கை அன்னை எப்பொழுதும் நம்மை  அன்பாய் அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். நாம் தினமும் நம் வாழ்வில்  சிறிது நேரம் ஒதுக்கி இயற்கையின் அழகை ரசிப்போம்,  இயற்கையை நன்கு  பாதுகாப்போம். இந்த பதிவில் தமிழில் எழுதிய Nature Poems-யை பதிவிட்டிடுள்ளோம்.



Nature Poems In Tamil




1. இரவு முழுக்க
மண்ணின் மேல் உறங்கிவிட்டு
காலையில் விடிந்தவுடன் 
சூரியன் ஒளியால் எழுந்து
விண்ணில் மறைந்து போகிறது
பனித்துளிகள்



2. பூமியில்  வாழும் 
எல்லா உயிருக்கும் 
தண்ணீர் தந்து வாழ 
வைக்கிறாள்
மழை அன்னை



3. அழகான மாலை நேரம் பொழுதில் 
அந்த மஞ்சள் நிறம் வானில் 
உடலைத் தீண்டும் தென்றல் 
உல்லாசப் பறவைகளின் கூச்சல் 
செவிகளில் சென்ற பாடல்களோடு 
செழிப்பாக வளர்ந்த பூக்களோடு 
கடற்கரையில் வந்த அலைகளோடு 
கடந்து போகும் கார்மேகத்தோடு 
ஒரு பயணம் தொடரட்டும் 



4. வாழ்கை பயணம் 
அனுபவத்தைக் காட்டும் 
இயற்கை பயணம் 
அதிசயத்தைக் காட்டும் 



5. மின்னல் மிரட்டியதால்   
இடி இடித்ததால் 
மேகம் அழுகிறது 



6. அனைவரும் உறங்கும் வேளையில் 
ஊர் அமைதியில் 
இருக்கும் நேரத்தில் 
இருள் சூழ்ந்த இரவில் 
நட்சத்திர காவல்காரர்களோடு 
வானில் ஊர்வலம் வருகிறாள் 
நிலா



7. காலையில்
செடியில் மலர்ந்த பூக்கள் 
இந்த மண்ணில்
இரவில்
வானில் தோன்றிய நட்சத்திரங்கள் 
அந்த விண்ணில்



8. என் மேனியை 
உரசி செல்கிறது 
மழை காற்று
என் உள்ளதை 
உறைய வைக்கிறது 
மழைத்துளிகளின் சத்தம்



9. மேகம் எழுதிய
பாடல்களைப் பூமியில் 
பாடியது மழை 



10. கதிரவன் காலையில் 
என்னை அழைத்து 
செல்ல காத்திருக்கிறது  வாசலில் 
சந்திரன் மாலையில் 
என்னை அனுப்பி மெல்ல 
காவல்காக்கிறது வானத்தில் 



11.மழைக்கும் எனக்கும் 
இடையில் இந்த 
குடை ஏன் குறுக்கே? 



12. தூரத்தில் வான் 
உயரத்தில் மேலே 
வர்ணமான  வானவில் 
என்னை அழைக்கிறது 
தூறலில் என் 
உடலின் மேலே 
வர்ணமில்லா மழை  
என்னை அணைக்கிறது 



13. தரணியின் தாகம் 
தணிய நாங்கள் 
வானிலிருந்து 
தண்ணீர் தருகிறோம் 
இப்படிக்கு மேகங்கள் 



14. விண்ணிலிருந்து 
மேகங்களோடு உல்லாசப்
பயணம் செல்லலாமா? 
மண்ணிலிருந்து 
மேகங்கள் ஊற்றும்
மழையோடு  நனையலாமா? 



15. இந்த வழிப்போக்கனுக்கு 
இரவில் வழிகாட்டியாய் 
வந்த நிலவு 



16. காலையில் வான்
திரும்பும் கதிரவனுக்கு 
விளக்கில்லா வானில் 
தனியே காத்திருந்து நிலா 



17.  உடைந்த மனதில்
உற்சாகத்தை  நிறைத்து
சோர்ந்த முகத்தில்
சந்தோசத்தைச்  சேர்த்து
நம்மை புதிதாய் பிறந்த
குழந்தையைப்  போல
மாற்றுகிறாள் இயற்கை தாய்



18. மரங்களும் அசைந்து  
நடனமாடுகிறது 
தென்றல் மெல்ல 
இசை இயற்றும் வேளையில்
கிளிகளும் மகிழ்ந்து 
விளையாடுகிறது
மரக்கிளைகள் மெதுவாய்
ஊஞ்சலாக மாறும் நேரத்தில்



19. தொடர்ந்து பெய்யும் 
மழையின் தூறலோடு 
தொலைந்து போனேன்
நானும் தூக்கத்தோடு 



20. இரவின் மடியில் 
மழையின் தாலாட்டில் 
நான் உறங்கினேன் 
நிம்மதியில் 



21. நட்சத்திர  காட்டில் 
நான் கண்ட அழகு 
தேவதையின் பெயர் 
வெண்ணிலா 



22. மேகத்தில் வரைந்த 
வண்ண வண்ண கோலம் 
தானோ இந்த வானவில் 



23. வானிலிருந்து இறங்கி 
வறண்ட  இடமெங்கும் குளிராக்கி
குடையில்லா என் தேகத்தைக் 
கொஞ்சி முத்தமிட்டு 
சென்றது மழை தேவதை 



24. இருள் என்ற ஊரில் 
நட்சத்திரம் என்ற கூட்டத்தில் 
யாரையோ காண 
கண்விழித்து காத்திருக்கிறாள் 
தொலைவில் ஒரு தேவதை 
அவள் பெயர் நிலவு 



25. இயற்கை ரகசியம் 
நிறைந்த அதிசயம் 
இயற்கையின் இசையில் 
இதயம் இறகானது 



26. எங்கிருந்து வந்தாள் என்பதும்  
தெரியவில்லை 
எங்கு செல்ல இருக்கிறாள் 
என்பதும் அறியவில்லை 
கடந்து போகும் பாதையில் 
கொஞ்சம் நம் உடலை மட்டும் 
குளிராக்கி செல்கிறாள்
தென்றல்



27. பூக்களின் மேல் 
வண்டுகளின் ரீங்காரம்
வானின் மேல்
பறவைகளின் உல்லாசம்
இயற்கையின் அதிசயத்தை 
உணர்கிறேன்
இந்த தருணத்தில் 
மகிழ்கிறேன்



28. நாம் அனைவரும்
இயற்கை தாயின் மடியில்
பிறந்தோம்
அவள்  கண்கலங்காமல் 
கடைசி வரை அவளை 
பாதுகாப்போம்
அவளின் மேல் 
அன்பு கொள்வோம்



29. விண்ணும் மண்ணும் 
ஒன்றாய் இணையும் 
இன்னேரத்தில் ஆனந்த 
கண்ணீராய் மழை 
பெய்யும் இப்பொழுதில் 
என் உள்ளமும் மகிழ்ந்தது 
என் உடலும் குளிர்ந்தது 



30. மனிதர்கள் செய்யும் 
கொடுமைகளை 
எல்லாம் அனுசரித்து 
கொண்டிருக்கும் 
பூமி தாயின் பொறுமைக்கு 
ஈடாக வேறெதுவுமில்லை 



31. நம் மனதில் 
நல்ல எண்ணங்கள் பிறக்க
நாம் பார்க்கும் இடமெல்லாம்
நல்ல வர்ணங்களால் 
இந்த பூமியை அலங்கரித்து
வைத்திருக்கிறாள்
இயற்கை தேவதை



32. வானில் பல நட்சத்திரங்கள் 
இருந்தாலும்
பலரையும் தன் அழகால் 
வியக்க வைக்கிறாள் நிலா



33. மழை தூறலில்  
விண் மண்ணுக்கு 
தூது சொன்னது 



34. மேகம் எங்கும்  கருக்க 
என் மேனி எல்லாம் சிலிர்க்க
மழை துளிகள் மண்ணில் இறங்க 
மனமும் பாடலில் மயங்க 
கடந்தது இந்த நேரம் 
கவலைகளும் கொஞ்சம் தூரம் 



35. அழகாய் தன்னை  
அலங்கரித்து கொள்கிறாள் 
அன்பாய் என்னை 
அரவணைத்து கொள்கிறாள் 
இயற்கை அன்னை 



36. அழகிய இயற்கை காட்சிகளை
ரசிக்கும் போது
பாரமான என் இதயம் கூட
இப்போது இறகானது



37. காட்டுக்குள் நடக்கும் போது
நம் கண்ணில் விழும் 
காட்சிகளும் அழகே
நம் காதில் விழும்
இசையும் இனிமையே 



38. உயிரில்லை என 
தூக்கி போட்ட விதை
மரமாக மறுபிறவி எடுப்பது 
இயற்கையின் அதிசயமே



39. தூறல் போடும் மழையில்
மழலையாய் நான்  மாறி 
சற்று நேரம் விளையாட
என் உள்ளமும் ஏங்குதே



40. இலவசமாக இருக்கும் 
இயற்கையை 
மறந்து விட்ட மனிதன் 
இன்று செலவழித்து 
செயற்கையை 
உருவாக்கி கொண்டிருக்கிறான்



41. இயற்கையின் அதிசயத்தைக்
கவிதையாய் எழுதும் போது
எழுத்துக்களும் போதவில்லை
இயற்கை அழகினை
கண்டு ரசிக்க எனக்கு 
இரு கண்களும் போதவில்லை



42.  புல்வெளியில் படுத்து கொண்டு
சில்லென்ற காற்றை 
அணைத்து கொண்டு
மரங்களின் அசைவோடு
பறவைகளின் கூச்சலோடு
சற்று நேரம் என் இமைகள் மூட
இயற்கையின் மடியில் 
என் மனம் நிம்மதியாக 
உறங்க வேண்டும்



43. மஞ்சள் நிற வானத்தின் நிழல்
அழகாக ஆற்றில் படும் போது
ஒரு அதிசய ஓவியமாக உருவாகிறது
ஒரு நொடி நம்மை வியக்க வைக்கிறது



44. குளிர்ச்சியில் நடுங்கிய மலைகளும் 
பசுமை போர்வையை 
அணிந்து கொண்டது
சூரியனின் வெப்பத்திற்க்காக
காத்திருந்தது



45. சிலு சிலு வென 
இயற்கையான காற்று இருந்தும்
செயற்கை காற்றை பெற்று 
வாழ்ந்து கொண்டிருக்கும் 
உலகம் இன்று



46. சல சல வென 
ஊற்றும் அருவிக்கும்
சிலு சிலு வென 
வீசும் காற்றுக்கும்
சங்கீதம் சொல்லி தர வேண்டுமோ?
இயற்கையின் இசைக்கு 
இணையில்லை இவ்வுலகில்



47. பறவைகளை வாங்கி 
கூட்டில் அடைத்து வைத்து 
ரசிக்கின்ற மனிதன்
ஒரு மரத்தை நட்டு 
அதில் நாளும் பல பறவைகள் 
உல்லாசத்தோடு வாழ்வதைக் 
காண மறுக்கிறான்



48. மலையின் உச்சியில் 
இருந்து விழும் 
நீர்விழ்ச்சிக்கு மட்டும் 
என்றும் மரணம் இல்லை



49. தூறல் போடும் மழைத்துளிகள் 
பூமிக்கு வருவது 
மண்ணில் வாழும் 
உயிரங்களின் தாகத்தை தீர்க்க தானே



50. கருப்பு நிற மாளிகையில்
வெள்ளை நிற உடை அணிந்து
அனைவரையும் 
இரவில் காவல்காக்கிறாள்
நிலா தேவதை



51. எல்லோருக்கும் நன்மை 
மட்டுமே செய்யும் இயற்கைக்கு 
பரிசளிக்க நம்மிடம் ஒன்றுமில்லை
அதனால் இயற்கையை
அன்பாக பராமரிப்போம்



52.  அன்பையும் பாசத்தையும் 
அள்ளி கொடுக்கும் இயற்கை
மனிதனின் சுயநலத்தால் 
கொஞ்சம் கோபம் கொள்கிறது



53. இயற்கையை வளர்ப்போம்
செயற்கையை குறைப்போம்
இயற்கையில் மகிழ்வோம்
செயற்கையை மறப்போம்



54. வானத்தில் இருந்து 
பொழியும் மழை 
மற்றவர்க்கு ஏனோ வெறும் மழையே
ஆனால் ஒவ்வொரு விவசாயிக்கும் 
அது கடவுள் தந்த வரமே



Post a Comment

0 Comments