Subscribe Us

Header Ads

Family Bonding Quotes In Tamil

FAMILY BONDING QUOTES IN TAMIL


Family Bonding Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, அனைவரின் வாழ்க்கையிலும் குடும்பம் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தின் அன்பும் ஆதரவும் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் .நம்முடைய கஷ்ட நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களே நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே  கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயல்பாகும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து, அக்கறை கொண்டு, அன்பை பரிமாறி குடும்பத்தோடு ஒன்றாய் இணைந்து வாழ்ந்தால் அந்த குடும்பத்தில் இன்பங்கள் நிறைந்திருக்கும். உங்கள் குடும்பத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி என்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சி படுத்த முயற்சி செய்யுங்கள். இதோ இந்த பதிவில் தமிழில் எழுதிய Family Bonding Quotes-யை கொடுத்துள்ளோம்.



Family Bonding Quotes In Tamil


1. அன்பையும் 
ஆறுதலையும் தந்து
இன்பங்களையும் 
துன்பங்களையும் பகிர்ந்து
ஒருவர்க்கொருவர் புரிந்து
சிரிப்பும் புன்னகையும் 
முகத்தில் மலர்ந்து
ஒரு வீட்டில் ஒன்றாய்
வாழும் எங்கள் குடும்பத்தில்
என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க
இறைவனை நாளும் 
பிரார்த்திக்கின்றோம்



2. கூடி வாழும் 
எங்கள் குடும்பத்தில்
சண்டைகள் இல்லை
பொறாமை இல்லை
கோபம் இல்லை
எங்களின் உறவுகளுக்குப்  
பிரிவுமில்லை
எங்களின் அளவற்ற 
அன்பிற்கு முடிவிவுமில்லை



3. குடும்பத்தை விட்டு
தூரம் செல்லும் போது தான் 
குடும்பத்தின் அருமையும் 
புரிகிறது
கண்களில் கண்ணீரும் 
வழிகின்றது



4. குடும்பத்தை விட்டு 
எங்கு சென்றாலும்
என்றும் குடும்பத்தின் 
நினைவுகளையும் பாசத்தையும் 
மறக்கவே முடியாது
மீண்டும் தன் 
குடும்பத்தைச் சந்திக்க 
இதயமும் ஆவலுடன் 
காத்திருக்கும்



5. நல்ல குடும்பம்
அமைவது கூட 
கடவுளின் வரம் தான்
குடும்ப உறுப்பினர்களின் 
உள்ளதை புண்படுத்தாமல்
அவர்களை புரிந்து
வாழ பழகி கொள்ளுங்கள்



6. குடும்ப நலனுக்காகவும்
பிள்ளைகளின் ஆசைகளை
நிறைவேற்றவும் 
தங்களின் வாழ்நாளை 
அவர்களுக்காகவே உழைத்து
தியாகம் செய்யும் 
கணவன் மனைவியின் 
அர்ப்பணிப்புகளைப் 
போற்ற வேண்டும்



7. நம் குடும்ப உறுப்பினர்களுக்கு
நம்மால் முடிந்த
சிறிய பரிசுகளை 
வாங்கி கொடுத்து 
நல்ல வாழ்த்துகளைத் தெரிவித்து
என்றும் அவர்களை மகிழ்ச்சியாக 
வைத்திருப்பது சிறப்பாகும்



8. குடும்பம் என்பது 
கோவில் என்றால்
அம்மாவும் அப்பாவும் 
அதில் வாழும் தெய்வங்களே



9. தாத்தா பாட்டியின் 
நன்னெறி கதைகளையும் 
அறிவுரைகளையும் கேட்டு 
நல்ல பண்புகளோடு 
பிள்ளைகள் வாழ்வது நன்றாகும்



10. தாத்தா பாட்டியின் 
கதைகளைக் கேட்டு கொண்டு
அவர்களோடு 
செல்ல பிடிவாதம் கொண்டு 
குழந்தைகளின் நேரமும் கழிகிறது
குழந்தைகளின் 
சிரிப்பு சத்தத்தையும்
குறும்பு பேசிச்சுகளையும் 
கேட்டு கொண்டு 
தாத்தா பாட்டியின்
ஒவ்வொரு  நாளும் கடக்கிறது



11. வீட்டில் எல்லா 
வசதிகளும் இருந்து
குடும்பத்தில் 
அன்பு இல்லை என்றால்
வாழ்க்கையில்
இன்பமும் இருக்காது
மனதில் நிம்மதியும் பிறக்காது



12. தனக்கென ஒரு கூட்டை அமைத்து
அதில் ஒன்றாய் கூடி வாழும் 
பறவைகளின் குடும்பம் போல் 
நாமும் கூடி வாழ்ந்து
ஆனந்தமாக வாழ வேண்டும்



13. குடும்ப பொறுப்புகளைச் 
சரியாக செய்து
குடும்ப உறுப்பினர்களிடம்
நல்ல உறவை வளர்த்து
ஒரு சிறந்த
குடும்பத்தை உருவாக்க
அனைவரின் ஒத்துழைப்பும் 
பங்களிப்பும் மிகவும்  அவசியம்



14. குடும்ப உறுப்பினர்களோடு 
மனம் விட்டு பேசினாலே போதும் 
குடும்பத்தில் உள்ள பல 
மன சஞ்சலங்கள் 
காணாமல் போகிவிடும்



15. பல நல்ல குடும்பங்களினால்
ஒரு சிறந்த சமுதாயத்தை 
உருவாக்க முடியும்



16. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும்
தேவையற்ற 
செலவுகளைக் குறைத்து
அளவற்ற 
அன்பை நிறைத்து
மன குறைகளை அழித்து
மன நிம்மதியை அமைத்து
அனைவரையும் அன்பாய் பார்த்து
எல்லோரையும் மதித்து
ஒரு நல்ல குடும்பத்தை
உருவாக்க வேண்டும்
ஊர் வாழ்த்தும் 
குடும்பமாய் வாழ வேண்டும்



17. ஒவ்வொரு பிள்ளைகளும்
தங்களின்
குடும்பத்திலிருந்தே 
நல்ல பழக்க வழக்கங்களையும்
நல்லொழுக்கத்தையும்
கற்று கொள்கிறார்கள்



18. வாழ்க்கையில் 
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்
அதனை மனம் தளராமல் போராடி
வாழ்கை சவால்களைக் 
கடந்து வாழ
குடும்பத்தின் ஆதரவு
நம் வாழ்க்கைக்கு 
அடிப்படையான ஒன்றாகும்



19. குடும்பத்தோடு
சிறிது நேரம் செலவிட்டு
ஒன்று கூடி
வாய் நிறைய சிரித்து
ஒருவர்க்கொருவர்
உணவு ஊட்டி
வாரந்தோறும் விட்டை 
சுத்தம் செய்து
இறைவனின் ஆசியோடும்
இதயத்தின் மகிழ்வோடும்
நாம் வாழ வேண்டும்
நம் குடும்பமும் 
செழிக்க வேண்டும்



20. பகலில் ஒருவரை ஒருவர் 
பார்க்க முடியாமல் 
வேலைக்கு செல்லும்
குடும்ப உறுப்பினர்கள் 
அனைவரும்
இரவில் ஒன்று கூடி 
உணவு உண்டு மகிழும் நேரமே
நம் வாழ்கையில் 
நாம் பேரின்பம் 
அடைந்த தருணமாகும்



21. குடும்பத்தின் 
அன்பும் ஆதரவும் இருந்தால்
வாழ்க்கையில் ஆசைப்பட்ட
இலட்சியதைச் சாதித்து விடலாம்



22. கிடைக்கும் நேரத்தில்
குடும்ப உறுப்பினர்களோடு 
ஒன்றாய் கூடி பேசி
சிரித்து மகிழ்ந்து
நன்னாளில்
பல பண்டிகைகளை
இணைந்து கொண்டாடி
நம்முடைய குடும்பத்தின்
ஒற்றுமையை மேலும் 
பலப்படுத்த வேண்டும்



23. எல்லா குடும்பத்திலும் 
ஒருவர்க்கொருவர்
விட்டு கொடுத்து வாழ்ந்தால்
குடும்பத்தில் 
இன்பங்கள் நிறைந்திருக்கும்
குடும்பம் பிரியாமல் இருக்கும்



24. பண்டிகையின் போது
உடன் பிறப்புகளோடு
புத்தாடை எடுக்க 
கடைக்குச் செல்வது கூட 
ஒரு சுகம் தான்
அனைவரும் ஒன்று கூடி 
இருப்பதில் மன நிறைவு தான்



25. உடன்பிறப்புகள் என்ற 
உறவை பற்றி 
கவிதை எழுத நினைத்தேன் 
அதனை எழுத 
வார்த்தைகளும் போதவில்லை 
என்று உணர்ந்தேன்



26. உடன்பிறப்பிகள் 
ஒருவர்க்கொருவர் 
அதிகம் பேசாவிட்டாலும் 
மனதில் அளவற்ற 
அன்பை வைத்திருப்பார்கள்



27. உடன்பிறப்புகளின் 
அன்புக்கும் அக்கறைக்கும் 
தனி சிறப்பு இருக்கிறது



28. காசு பணம் 
இல்லையென்றாலும் 
பாசம் காட்டும் 
உடன் பிறப்புகள் 
நம் அருகில் இருந்தால் ந
ம் வாழ்க்கை 
என்றும் இனிமை தான்



29. நம்முடைய 
உடன் பிறப்புகளோடு 
வாழ்ந்த அனைத்து
தருணங்களும் 
நம் மனதில் 
நிலைத்திருக்கும் 
அழகிய நினைவுகளே



30. அக்கா என்ற உறவில் 
அனைத்து அன்பையும் 
நான் பெற்றேன்
என்னை உயிருக்கும் 
மேலாக நேசித்தது 
என் அக்காள் தான்



31. தன் தங்கையின் கையில் 
மருதாணியை வைத்து அழகு
பார்ப்பவள் அக்கா



32. அக்காவோடு 
சண்டைகள் போட்டு கொண்டாலும் 
அக்காவை விட்டு 
நான் ஒருபோதும் 
சாப்பிட மாட்டேன்



33. எனக்கு கிடைத்த 
அழகிய உடன் பிறப்பு 
என் அக்காள்
எனக்காக எதையும் 
செய்பவள் என் அக்காள்



34. அக்காவின் பாசத்திற்கு 
பஞ்சமில்லை
அவளை பற்றி நான் 
நினைக்காத நாளில்லை



35. இந்த பிறவியில் 
எனக்கு கிடைத்த 
ஒரே பந்தம் என் அக்கா தான்
அவளை விட்டா 
எனக்கு ஏது சொந்தம்  



36. எவ்வளவு சண்டை
போட்டாலும் 
அடுத்த நொடியே இயல்பாக 
பேசிக்கொள்பவர்கள் தான் 
உடன்பிறப்புகள்



37. தன் அண்ணனிடம் 
அதிகம் சண்டை போடுபவளும் 
தங்கை தான்
அண்ணனின் மேல் 
அதிகம் பாசம் 
வைத்திருப்பதும் 
தங்கை தான்



38. தன் தங்கை ரோஜா மலர் போல் 
என்பதால் முள்ளாக இருந்து 
தன் தங்கையைப் 
பாதுகாக்கிறான் அண்ணன்



39. அண்ணன் தங்கை உறவு 
ஒரு அற்புதமான உறவு



40. அப்பா அம்மாவிற்கு 
அடுத்து ஒரு தங்கை 
அவளது அண்ணனையே 
அதிகமாக நேசிப்பாள்



41. தான் கஷ்டப்பட்டாலும் 
தன்னுடைய தங்கையை 
ஒரு போதும் கஷ்டம் படாமல் 
பார்த்து கொள்வது அண்ணன்



42. அப்பாவின் அன்பையும் 
அக்கறையும் 
அண்ணனிடம் இருந்து பெறலாம்



43. என் முகத்தில் புன்னகை மலர 
என்னை நாளும் 
சிரிக்க வைத்தவன் 
என் அண்ணன்



44. எத்தனை உறவுகள் 
நம் அருகில் இருந்தாலும் 
அண்ணன் என்ற உறவு 
நம் அருகில் இருக்கும் வரை
நாம் வாழ்க்கையில் 
உடைந்து போக மாட்டோம்



45. எத்தனை சண்டைகள் போட்டாலும் 
தன் தங்கையிடம் பேசாமல் 
அண்ணனால் இருக்க முடியாது



46. இந்த பிறவியில் 
எனக்கு கிடைத்த 
மிக பெரிய பொக்கிஷம் 
நீதான் அண்ணா



47. அண்ணனை பெற்ற 
தம்பிகளுக்கு தெரியும் 
அண்ணன் என்பவன் 
இன்னொரு அப்பா என்று



48. அண்ணன் தன் தம்பியிடம் 
வார்த்தைகளால் பாசத்தை 
வெளிப்படுத்தாமல் 
தன் தம்பிக்கு 
வாழ்க்கையில் தேவையானதை 
பூர்த்தி செய்வார்



49. அண்ணனை பற்றி 
நன்கு புரிந்து வைத்திருப்பது 
தங்கையும் தம்பியும் தான்



50. ஆயிரம் சண்டைகள்
போட்டாலும் 
நமக்கு ஒன்று என்றால் 
துடித்து போவது 
நம் அண்ணன் தான்



51. இந்த உலகுக்கு 
நான் வந்த நாள் முதல் 
இன்று வரை 
என்னை அன்பாக 
பார்த்து கொள்ளும் 
என் அண்ணன் தான்
என்றும் என்னுடைய உலகம்


Post a Comment

0 Comments