Subscribe Us

Header Ads

Life Advice Poems and Quotes In Tamil

LIFE ADVICE POEMS AND

 QUOTES IN TAMIL


Life Advice Poems and Quotes In Tamil




வணக்கம் நண்பர்களே. வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த பரிசாகும். நல்ல வாழ்கை நெறிகளைப் பின்பற்றி வாழ்க்கையை நன்கு சிறப்பாக வாழ்வது நம்முடைய கடைமையாகும். இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் பகுதியாகும். சில சமயங்களில் நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் தோல்விகளையும் கடந்து வாழ நமக்கு பிறரின் ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் ஊக்குவிப்பும் தேவைப்படுகிறது. உங்களின் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானம் 
செய்ய வேண்டும்.உங்கள் வாழ்க்கையை  நீங்கள் சிறப்பாக மகிழ்ந்து வாழ, இந்த  பதிவில் தமிழில் எழுதிய Life Advice Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம். 



Life Advice Poems and Quotes In Tamil


1. கடந்த காலத்தில்
நடந்த துன்பங்கள் எல்லாம் 
ஒரு அனுபவம்
அதில் இருந்து பாடங்களைக் 
கற்று கொள்
இனி வரும் காலங்களில்
மீண்டும் அந்த 
தவறுகளைச் செய்வதைத் 
தவிர்த்து கொள்



2. வறுமையிலும் சரி
வசதியிலும் சரி
நல்ல பண்புகளைக் 
கடைப் பிடி
நல்ல செயல்களைச் செய்   
நல்லவராய் இரு
மனிதராய் வாழு



3. முகத்தின் அழகை
பார்த்து யாரிடமும் பழகாதே
அகத்தின் அன்பை பார்த்தே
எல்லோரிடமும் பண்பாய் இரு



4. நினைப்பது ஒன்று 
நடப்பது இன்னொன்னு என்றாலும்
நடப்பது எல்லாம் நம் நலனுக்கே
என்று நினைத்து கொள்வோம்
வருவதைக் கடந்துபோவோம்



5. வாழ்க்கையின் துன்பங்களினால்
முதலில உன் மனம்
பல வலிகளை 
அனுபவிக்கலாம்
பிறகு உன்
மன வலிமையும்
அதிகரிக்கும்



6. வாழ்நாள் முழுவதும் 
என்ன நடக்கும் என்பதை
யோசித்து கவலை பட்டு
காலத்தை கடத்தாமல்
இருக்கின்ற பொழுதில்
புன்னகையோடு இருப்போம்
புதிய முயற்சிகளைச் செய்வோம்



7. நம்முடைய கடந்த 
காலத்திற்கு சென்று 
எதையும் மாற்ற முடியாது
இன்றிலிருந்து நம் எதிர்காலத்திற்கு 
தேவையானதை 
உருவாக்கி கொள்ள முடியும்



8. வாழ்க்கையின் அர்த்தம் என்பது 
அனைவருக்கும் வேறு தான்
உனக்கான வாழ்க்கையின் அர்த்தத்தை 
உன் அறிவாலும் ஆற்றலாலும் 
நீ உருவாக்கி கொள்



9. வெட்டி பேச்சு  பேசுவதை 
குறைத்து விட்டு
விவேகமாக செயல் படுவதே
சிறந்தது



10. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்
என்று வாழாதே உன் மனசாட்சிக்கு 
உண்மையாய் வாழு
உனக்கு சரியான வழியை 
தேர்தெடுத்து வாழு



11. மாற்றம் என்பதற்கு 
முற்றுப்புள்ளி கிடையாது 
வாழ்க்கையில் 
பல மாற்றங்கள் வந்து 
கொண்டு தான் இருக்கும்



12. நீ யாரையும் மாற்ற முடியாது
உன்னையும் 
யாரும் மாற்ற முடியாது
அவரவரின் மாற்றத்திற்கு
அவரவரின் மனமே காரணமாகும்



13. நீ கற்று கொண்ட அறிவை 
வாழ்க்கையில் 
செயல் படுத்த முயற்சி செய்



14. உனக்கு பிடித்த படி 
உன் வாழ்க்கையை நீ வாழலாம்
ஆனால்
உன்னையும் வருத்திக்கொள்ளாமல்
பிறருக்கும் துன்பம் தராமல் 
வாழ வேண்டும்



15. வாழ்கை அனுபவத்தில்
பல கருத்துகள் இருக்கும்
அதில் இருக்கும் 
நல்லதையும் தீயத்தையும் 
நீ தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
உன் வாழ்க்கைக்கான
நல்லதை எடுத்து கொள்
தீயத்தை விலக்கி கொள்



16. வாழ்க்கையில்
நீ தவறு செய்திருந்தால் 
தயங்காமல்
மன்னிப்பு கேட்டு விடு
பிறர் செய்யும் தவறை
மன்னித்து விடு



17. உங்கள் வாழ்க்கைக்கான 
சிறப்பான மாற்றங்கள்
நீங்கள் அன்றாடம் செய்யும் 
சின்ன சின்ன 
செயல்களில் தான் உள்ளது
சின்ன செயலாக இருந்தாலும்
செம்மையாகச் செய்திடுங்கள்



18. வாழ்க்கை 
பல துன்பங்களை
உனக்கு தந்தாலும்
அந்த துன்பத்திலும் 
சிரிப்புடன் வாழ 
நீ கற்று கொண்டால்
துன்பமும் மறைந்துவிடும்
இன்பமும் நிறைந்துவிடும்



19. நீ ஒரு முறை தான் 
வாழ போகிறாய்
உன் வாழ்க்கையை 
முறையாக 
சிறப்பாய் வாழ்ந்தால்
இந்த ஒரு வாழ்கை 
உனக்கு போதுமானது



20. வாழ்க்கையில் வரும் 
துன்பங்களைக் கண்டு 
வாழ்க்கையைச் சகித்து
கொள்ள வேண்டாம்
அதனை கடந்து வாழ வேண்டும்



21. எல்லோரிடமும் அன்பு 
மலர்களைத் தூவுங்கள்
உங்கள் அன்பு கூட 
சிலருக்கு ஆறுதலாக மாறலாம்



22. நீ செய்த தவறுகளால் 
உன்னை நீ  தண்டித்து கொள்ளாமல்
செய்த தவறுகளைத் திருத்தி கொண்டு 
நீ தலை நிமிர்ந்து வாழ்வதே நல்லது



23. கடந்த காலத்தின்
தீயதை மட்டும் விட்டுட்டு
நல்லதை எல்லாம் எடுத்து கொள்
எதிர்காலத்தை நோக்கி 
உன் பயணத்தைத்  தொடரு



24. வாழ்க்கை என்பது சுலபம் அல்ல 
இருந்தும்
உன் வாழ்க்கையை சுவாரஸ்யமாக 
அமைத்து கொள்வது 
உன் கையில் தான் இருக்கிறது



25. வாழ்க்கையில் என்ன 
வேண்டுமானாலும் நடக்கலாம்
எது நடந்தாலும் 
நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்
நல்லதையே எண்ணுங்கள்
நல்லதையே செய்யுங்கள்



26. உங்களை 
முழுமனதுடன் நேசியுங்கள்
உங்கள் வாழ்க்கையைப் பற்றி 
நிதானமாக யோசியுங்கள்



27. வாழ்க்கையில் தேடுவதற்கு 
ஒன்றும் இல்லை
நமக்கு தேவையானதை 
நாம் தான் உருவாக்க வேண்டும்
நமக்கு பிடித்த வாழ்க்கையை 
அமைத்திட முயற்சி செய்திட வேண்டும்




28. என்னால் முடியாது
என்று சொல்லாதீர்கள்
இந்த நிமிடம் வரை
எல்லாவற்றையும் கடந்து 
எதையும் துணிந்து போராடி
மன வலிமையோடு
வாழும் தைரியசாலி நீங்கள்
என்பதை மறந்து விடாதீர்கள்



29. எளிமையான வாழ்க்கையை 
வாழ்ந்தால் வாழ்வும் எழிலாகும்



30. பிடிக்காதவர்களிடமிருந்து 
தள்ளி இருப்போம்
பிடித்தவர்களோடு 
கூடி வாழ்வோம்
வாழ்க்கை குறுகிய காலம் தான் 
என்பதை உணர்வோம்
வாழ்க்கை பயணம் முடியும் வரை 
இன்பமாய் வாழ்வோம் 



31. கடந்து போனதை நினைத்து
இனி இருப்பதை 
எதையும் இழந்து போகாதே



32. அனைவரையும் திருப்திபடுத்த 
நினைத்து உன் நிம்மதியை 
இழந்து விடாதே



33. நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு
நல்ல பண்புகளை 
நாம் கடைப்பிடிக்க வேண்டும்



34. வாழ்க்கையில் 
தோல்விகளைக் கண்டு 
பயம் கொண்டால் 
வெற்றியைப் பெற முடியாது



35. உன் மனதில் 
தைரியம் இருக்கும் வரை
நீ வாழ்க்கையில் 
எதையும் வெல்ல முடியும்



36. உன்னிடம் இருப்பதை 
எண்ணி மகிழ்ச்சியாக இரு 
ஏனென்றால் எதுவுமே 
இல்லாமல் கூட 
இங்கு பலரும் கஷ்டம் படுகிறார்கள்



37. வாழ்க்கையில் 
ஒவ்வொரு சூழ்நிலையையும் 
கடந்து போகும் போது 
நம் மனம் 
மேலும் வலிமையாகிறது



38. வாழ்க்கையில் நாம் 
எந்த உயரத்திற்கு சென்றாலும் 
என்றும் நமக்கு தன்னடக்கம் வேண்டும்



39. மகிழ்ச்சி என்பது 
நம்முடைய 
எண்ணங்களையும் செயல்களையும்
பொறுத்தே அமையும்



40. உன்னை பற்றி அதிகம் 
பிறரிடம் கூற வேண்டாம்
யாரையும் பற்றி அதிகம் 
நீ தெரிந்து கொள்ளவும் வேண்டாம்
இரண்டும் உன் 
மன நிம்மதியை அழித்து விடும்



41. இவனால் எப்படி செய்ய முடியும் 
என்று சொன்னவர்களுக்கு முன் 
நாம் வெற்றிகரமாக 
ஒரு செயலை 
செய்து காட்டுவது தான் 
உண்மையான வெற்றி



42. மனதில் எவ்வளவு 
துன்பங்கள் இருந்தாலும்
புன்னகைக்க மறக்காதே
நாளடைவில் துன்பங்கள் 
எல்லாம் இன்பங்களாக 
மாறி விடும்



43. கடந்த காலத்திற்கு சென்று 
நடந்ததை நம்மால் மாற்ற முடியாது
எதிர் காலத்தில் 
நம் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ
நிகழ்காலத்தில் பல சிறப்பான 
செயல்களைச் சிந்தித்து செய்வொம்




44. உன் முயற்சிகளை 
இந்த உலகம் கவனிக்காது
உன்னுடைய வெற்றிகளை 
மட்டுமே பாராட்டும்



45. வாழ்க்கையில் 
விரைந்து வெற்றி பெற்றேன் 
என்பதை விட 
வீழ்ந்தாலும் மீண்டும் 
எழுந்து வெற்றி பெற்றேன் 
என்பதில் தான் நமக்கு பெருமை



46. சரியான பாதையில் 
மெதுவாக சென்றாலும்
ஒரு நாள் நிச்சயமாக 
நீ வெற்றி பெறுவாய்



47. நீ நல்ல செயலை 
செய்யும் போது 
யாரும் உனக்கு 
உதவாவிட்டாலும் பரவாயில்லை
உன் செயலில் மட்டும் 
உறுதியாக இரு
ஒரு நாள் இந்த உலகம் 
உன்னை புரிந்து கொள்ளும்



48. யார் சொல்வது என்று
கவனிக்காதீர்கள்
எது சரி என்பதையே 
என்றும் கவனியுங்கள்



49. வார்த்தைகளை மட்டும் 
தேர்தெடுத்து பேசுங்கள்
அது உங்களை 
உயர்த்தவும் செய்யும்
தாழ்த்தவும் செய்யும்

Post a Comment

0 Comments