Subscribe Us

Header Ads

One Side Love Poems and Quotes In Tamil

ONE SIDE LOVE 

POEMS AND QUOTES IN TAMIL


One Side Love Poems and Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நாம் நேசிப்பவர்கள் நம்மை காதலிக்கவில்லை என்றாலும் நாம் அவர்களை தொடர்ந்து காதலிப்போம். அதிலும் சிலர் தங்களின் காதலை வெளிப்படுத்தாமால் மனதிலே வைத்திருப்பார்கள். இது போன்ற காதல் உணர்வுகள் மிகவும் அழகானது. நம் அன்பானர்களிடம் நம் காதலை சொல்லாமல் இருந்தாலும் அவர்களின் மேல் அதிக அன்பு செலுத்துவோம். அவர்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதும் உண்டு. 
நீங்கள் நேசிப்பவர்களிடம் உங்கள் மனதில் உள்ள காதலை இன்னும் சொல்லவில்லையா ? இந்த பதிவில் தமிழில் எழுதிய One Side Love Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.


One Side Love Poems and Quotes In Tamil


1. என் தனிமையிலும் 
உன் நினைவுகளே
எனக்கு துணையாக இருக்கிறது
என் இதயமும் உன்னை
நினைத்தபடுயே வாழ்கிறது



2. உன் அழகால் 
என் இதயமும் 
காதலில் விழுந்து மயங்கியதே
உன் மௌனத்தால் 
என் மனமும் 
காதலை சொல்ல தயங்கியதே



3. உன்னோடு சேர்ந்து 
வாழ முடியாதா என்ற 
ஏக்கத்திலே காலமெல்லாம்
உனக்காகவே காத்திருப்பேன்
உன்னையே காதலிப்பேன்



4. உன்னை சந்திக்கும் 
போதெல்லாம் என் இதயம் 
உன்னுடன் சென்று விடுகிறது



5. உன் அழகிய 
கண்களைக் கண்டவுடனே
என் உதடுகளும் 
மௌனமாகி விட்டது
என் உள்ளமும் 
உறைந்து போனது



6. உன்னை காணாமல்
என் கண்ணீர்துளிகளும்
வற்றாத அருவியாய் 
மாற ஆரம்பித்தது



7. உன் அன்பால் 
என்னை கொஞ்சி செல்கிறாய்
உன் அன்பிற்காக என்றும் 
என்னை கெஞ்ச விடுகிறாய்



8. வார்த்தைகளால் பேசாமல்
உன் மௌன விழியால் பேசி 
என்னை விழ்த்துகிறாய்
என் மனதில் 
கொஞ்ச கொஞ்சமாய் 
இடம் பிடிக்கிறாய்



9. உன்னக்காக 
காத்திருப்பதில் தான் 
உணர்ந்தேன் 
உன்னால் தான் 
நான் இன்னும் 
உயிர் வாழ்கிறேன் என்று



10. ஒரு முறை தான் 
உன்னை பார்த்தேன்
நீ தான் என் உலகம் என்று
என் இதயம் முடிவு செய்தது



11. இரவில் வரும் நிலவு போல 
என் இதயத்தில்
உன் முகமே உலா வருகிறது



12. நீ இல்லாத இந்த வாழ்க்கை 
எனக்கு வேண்டாம்
உன்னோடு சேராத 
என் உயிரும் 
இனி வாழ வேண்டாம்



13. எத்தனை கவிதைகள் 
எழுதினாலும் கிடைக்காத 
மகிழ்ச்சி எனக்கு
இப்போது உன்னை பற்றி 
ஒரு வரி எழுதினாலே 
என் மனமும்
மகிழ்ச்சியில் நிரம்புகிறது



14. கதிரவன் ஒளியால்
பூக்கள் மலர்ந்தது
உன் சிரிப்பின் ஒலியால்
என் இதயமும் மகிழ்ந்தது



15. என் கற்பனைகளும் கனவுகளும் 
கூட சொர்க்கமானது
அங்கும் நீயே வந்து
என் அருகில் இருந்தபோது



16. எனக்காக நீயிருப்பாயா 
என்று தெரியவில்லை
உனக்காக என்றும் 
நான் இருப்பேன்



17. உன் அன்பை
எனக்கு  கொடுக்காவிட்டாலும் 
பரவாயில்லை
நான் தருகின்ற 
என் அளவற்ற அன்பை 
மட்டும் ஏற்று கொள்



18. வாழ்க்கை அழகானது என்றாலும்
என் வாழ்க்கை இருளில் தான் 
சூழ்ந்திருந்தது உன்னை 
காணும் வரை



19. என்னுடைய 
இன்பத்திலும் துன்பத்திலும்,
என் கண்களுக்கும்
என் இதயத்திற்கும் 
உன் முகத்தைத் தவிர 
வேறு யாரையும் தெரியவில்லை



20. உன்னை பற்றி 
எழுதும் போதெல்லாம்
நான் என்னையே மறந்து
உன் நினைப்பிலே 
தொலைந்து விடுகிறேன்



21. என் இதயத்தை 
இயங்க செய்வதும் நீ தான்
என்னை முழுதாய் 
ஆட்சி செய்வதும் 
உந்தன் அன்பும் தான் 



22. என் எண்ணமெங்கும் 
நீயே இருந்த போது
வண்ணமுள்ள வனவில்லாக
என் மனமுமாகியது



23. உதிராத மலராய்
உன் முகமும்
என் இதயத்தில் வாழ்கிறது
கணக்கில்லாத மழைத்துளிகளாய்
உன் ஞாபகங்களும்
என் மனத்தில் இருக்கிறது



24. என்னருகில் நீ இல்லாத 
தருணத்தில் கூட
உன் குரலே
எனக்கு ஆறுதலாய் இருந்தது



25. உன் அருகில் இருந்து
வாழ்வதை விட
உன் இதயத்தில் இணைந்து
உன் உயிரில் கலந்து
நான் உயிர் வாழ வேண்டும்



26. என் இதயம் உனக்காக தான் 
துடிக்கிறது என்று நினைக்கையில்
என் இதய துடிப்பின் ஓசை கூட
இனிய இசையாய் ஆகிவிட்டது எனக்கு



27. ஏதோ பிறந்ததிற்க்காக 
மட்டுமே இதுவரை
வாழ்க்கையை வாழ்ந்தேன்
உன்னை பார்த்த நாள் முதல்
வாழ்க்கையை ரசித்து 
வாழ ஆரம்பித்தேன்



28. உன்னை நான் காதிலிக்கிறேன்
என்று நினைக்கும் போதே
என் மனதில் தனி சுகம் தான்
நீயும் என்னை காதலிக்கிறாய் 
என்று கூறிவிட்டால்
என் வாழ்க்கையும் இனி
சொர்க்கம் தான்



29. நீ என் அருகில் இருந்தும் 
என் காதலை 
சொல்லாமலே இருக்கிறேன்
உனக்கே ஒரு நாள் புரியும் வரை
என் காதலை நீ உணரும் வரை
என் உள்ளத்திலேயே 
பூட்டி வைக்கிறேன்



30. ஒரு கணம் உன்னோடு 
இருந்தால் கூட
ஒரு யுகம் வாழ்ந்த 
ஆனந்தம் எனக்கு கிடைக்கிறது



31. உன் எதிரில் 
நிற்க பயந்தேன்
ஆனால்
உன் ஏக்கத்தில் வாழ 
விரும்பினேன்



32. நீ போட்ட பாச வலையில்
சிக்கி விட்டேன்
இனி அதிலிருந்து 
வெளியேற முடியாமல் 
தவிக்கிறேன்
உன்னிடம் என் காதலை 
சொல்ல துடிக்கிறேன்



33. இனி கவிதைகள் எழுத 
ஆசையில்லை எனக்கு
என் காதல் கவிதையாய் 
நீ இருக்கும் பொழுது



34. என் இமை முடிய போது
இருளிலும் கூட
அவள் ஒளியாய் வருகிறாள்
என் கனவில்



35. என் மனதில் நீ  இருக்கும் வரை
மறைந்து போகாது உன் உருவம்
நிம்மதியாய் வாழும் என் உயிரும்



36. நான் நிமிடமும் உரையாடுகிறேன்
என் மனதில் இருக்கும் 
உன்னோடு மட்டும்



37. இறுதி வரை
வாழ்க்கை பயணத்தில்
உன்னோடு சேர்ந்து
காதல் எனும்
பாதையில் பயணிக்கவே
இது வரை இந்த வாழ்வை
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்



38. உன் தோளில் சாயும் போதெல்லாம் 
காதல் உணர்வில் 
மெல்ல தொலைந்து போகின்றேன்



39. நிழல் போலவே
என் அருகில்
நீ இருக்க வேண்டும்
நினைக்கும் நேரமெல்லாம் 
என் கண்ணெதிரில் 
நீ தோன்றிட வேண்டும்



40. என்னிடம்
சண்டை போட்டது நீ என்றாலும்
உன்னை விட்டு பிரியவே கூடாது 
என்பதற்காக
நானே சமாதானமாக போகிறேன்



41. தூரத்தில் இருந்தே 
உன்னை கண்டு ரசிக்கிறேன்
என் இதயத்தில் 
உன்னை வைத்து காதலிக்கிறேன்



42. உன்னை மட்டுமே 
நினைக்கும் என் இதயத்திற்கு
என்ன பதில் 
நீ சொல்ல போகிறாய்?



43. இன்று நீ என் காதலை 
புரிந்து கொள்ளவில்லை
என்றாவது ஒரு நாள் 
என்னுடைய 
உண்மையான காதல் 
உனக்கு நிச்சயம் புரியும்



44. என் வாழ்க்கையின் 
இறுதி வரை 
நான் உன்னை 
மறக்க மாட்டேன் 
உன்னை காதலிப்பதை 
நிறுத்த மாட்டேன்



45. உன்னை கண்ட நாள் முதல் 
உன் காதலுக்காக 
ஏங்கி தவிக்கிறேன்
என்னை ஒரு முறையாவது 
பாரடி என் கண்ணே!



46. உன் அன்பிற்கு 
நான் அடிமையாகியதால்
உன்னை விட்டு செல்ல 
எனக்கு மனமில்லை
என் காதலை 
நீயும் ஏற்கவில்லை



47. ஒவ்வொரு நாளும் 
புதிய மாற்றங்களை 
என் வாழ்க்கையில் 
கொண்டு வருகிறது
உன் நினைவுகள் 
மட்டும் என்றும் மாறாதது



48. உன் மீது 
நான் கொண்ட 
காதல் உண்மை
காலம் நம்மை சேர்க்கும்
இல்லையென்றாலும் 
காலம் முழுவதும் 
என் மனதில் 
நீ வாழ்ந்து கொண்டிருப்பாய்



49. உன் அழகில் நானும் 
என் இதயத்தைத் 
தொலைத்து விட்டேன்



50. உன் அன்பில் தொலைந்தது 
நான் மட்டும் அல்ல
என்னுடைய கோபங்களும் தான்



51. உன்னை நன்கு 
புரிந்து கொண்ட 
என் இதயத்தால் 
உன்னை நெருங்க முடியவில்லை
தூரத்திலிருந்தே 
அது உனக்காக துடிக்கிறது



52. உன்னை பற்றி 
நினைக்கும் போது 
என் காதல் இன்னும் 
அழகாகிறது



53. உன்னை காதலித்த பின்பே 
எனக்கு புரிந்தது 
காதல் உணர்வு 
மிகவும் சுகமானது
உன் மேல் 
நான் வைத்திருக்கும் 
காதல் ஆழமானது என்று



54. எப்போது என் காதலை 
நீ ஏற்று கொள்வாய் 
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் நீ ஏற்கும் வரை 
என் காதல் 
உனக்காக காத்திருக்கும் 


Post a Comment

0 Comments