Subscribe Us

Header Ads

Heart Broken Quotes In Tamil

HEART BROKEN QUOTES IN TAMIL


Heart Broken Quotes In Tamil




வணக்கம் நண்பர்களே,நாம் அனைவரும் வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சில கஷடங்களினால் நம் மனம் உடைந்து போகிறது. சில சமயங்களில் நமக்கு என்ன செய்வேதென்று புரியாமல் நாமும் கவலையில் இருப்போம். ஒரு சிலரால் அந்த மனதின் வலியை ஏற்று கொள்ள முடியாமல் தவறான வழிகளில் செல்வதும் உண்டு. நம் மனம் உடைந்து போகும் போதெல்லாம் நம்முடைய அன்பானவர்களின் ஆதரவு நமக்கு பக்க பலமாக இருக்கும். அதோடு மனம் தளராமல், நம்முடைய தன்னம்பிக்கையால் நம் வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும். இந்த பதிவில் தமிழில் எழுதிய Heart Broken Quotes-யை பதிவிட்டுள்ளோம்.



Heart Broken Quotes In Tamil

1. வாழ்க்கை முழுவதும் 
உன்னருகில் இருப்பேன் 
என்று கூறி விட்டு
பாதியிலே நம்மை 
அனாதையாக்கி செல்கிறது
சில உறவுகள்



2. பிறரின் அன்பு கிடைக்காமல் 
இருக்கும் போது கூட 
மனம் வலிக்கவில்லை
பொய்யான பாசத்தைக் கண்டு 
ஏமாறும் போது தான் 
மனம் உடைந்து போகிறது



3. சிலர் வாழ்ந்து 
விட்டு இறக்கிறார்கள்
சிலர் வாழும் போதே 
மன துயரங்களால் 
உயிரிழந்தது போல்
இருக்கிறார்கள்



4. உன் மேல் நான் கொண்ட 
அன்பை என்னால் 
மறக்க முடியவில்லை
உடைந்த என் இதயத்தில் கூட
எங்கும் உன் நினைவுகளே



5. என்னருகில் இருந்து
என்னை சிரிக்க வைத்தாள்
இப்போது
என் தொலைவில் இருந்து
என்னை அழ வைக்கிறாள்



6. என் இதயத்தை
உன்னோடு எடுத்து 
சென்று விட்டாய்
இனியும் நான் உயிர் 
வாழ்வது எதற்காக



7. சிலரின் கேலி நகைச்சுவை கூட 
நம் இதயத்தைக்
காயப்படுத்துகிறது



8. யார் மனதையும் 
மகிழ்ச்சி படுத்தாவிட்டாலும்
பரவாயில்லை
யார் மனதையும் 
உடைத்து விடாதீர்கள்



9. ஒரு நொடி போதும் ஒருவரை 
தவறான வார்த்தைகளைகளால் 
காயப்படுத்தி விட
ஆனால் அவரின் மனதில் 
அந்த காயம் 
காலம் முழுவதும் இருக்கும்



10. சில நேரங்களில்
யாரும் நம்மை 
காயப்படுத்தாமல் இருக்க
தனிமையிலே இருந்து விடலாமா
என தோணும்



11. உடைந்த மனதிற்கு ஆறுதலாகவும்
இனி யாரும் 
நம்மை 
காயப்படுத்தாமல் இருக்கவும்
என்றும் தனிமையில்
இருப்பதே சிறப்பு



12. சில நேரங்களில் நம்முடைய 
சொல்லும் செயலும் 
பிறரின் மனதை 
எவ்வாறு காயப்படுத்தும் 
என்று நமக்கு தெரியாது
என்றும் சிந்தித்து 
பேசுவதும்
செயல்படுவதும் வேண்டும்



13. உனக்காகவே துடித்த 
என் இதயத்தை ஏமாற்றி விட்டு
என் மனதை உடைத்து விட்டாயே



14. நீ எத்தனை முறை 
என் மனதை காயப்படுத்தினாலும்
உன்னையே என்றும் நேசிப்பேன்
ஏனென்றால் என் மனத்திற்கு 
உன்னை தவிர வேறு 
யாரையும் தெரியாது



15. நம் எல்லோரின் மனமும்
யாரோ ஒருவரால்
ஏதோ ஒரு சூழ்நிலையால்
உடைந்து போயிருக்கும்
காலமே அதற்க்கு மருந்தாகும்



16. என் கண்ணீர் மட்டுமே 
எனக்கு ஆறுதலாக இருக்கிறது
ஒவ்வொரு முறையும் 
என் மனம் உடைந்து 
போகும் போது



17. ஒருவரின் உதட்டில் 
உள்ள புன்னகை 
மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது
ஆனால்
ஒவ்வொருவரின் 
உடைந்த இதயம் 
யாருக்கும் தெரிவதில்லை



18. சிலர் குறுகிய காலம் 
மட்டுமே 
நம்மோடு வாழ்ந்தாலும்
காலத்தால் அழியாத காயங்களை 
நம்  இதயத்தில் பதித்து
விட்டு செல்கிறார்கள்



19. நம்முடைய 
வாழ்க்கை பயணத்தில்
சிலரின் வருகையால் 
நம் வாழ்க்கை
வனவில்லாக மாறுகிறது
சிலரின் வருகையால்
நம் வாழ்க்கை 
கண்ணீரால் நிரம்புகிறது



20. நம் மனம் உடைந்து 
போகும் போது தான்
நாம் யார் என்று நமக்கு புரிகிறது
நமக்கான சரியான வாழ்க்கையை 
மீண்டும் நாம் அமைத்து 
கொள்ள முடிகிறது



21. உன்னை நீ நேசிக்க 
ஆரம்பித்தால் மட்டுமே
உன் உடைந்த மனதிற்கு
நீயே ஆறுதலாகவும் மருந்தாகவும்
இருக்க வேண்டும்



22. சில சமயங்களில் நமக்கு 
ஆறுதல் கூற கூட யாருமில்லை
நாம் தான் நம் இதயத்திற்கு 
ஆறுதல் கூற முடியும்
நம்முடைய தனிமை மட்துமே 
நமக்கு என்றும் துணை



23. இன்பம் நிறைந்த 
என் இதயத்தை 
உன்னிடம் கொடுத்தேன்
கடைசியில்
என் இதயத்தை
காயப்படுத்தி 
சிதறிய துண்டுகளாக்கி
என்னிடம் கொடுத்து விட்டாய்



24. பிறரின் மேல் 
அதிக 
நம்பிக்கையையும் 
எதிர்பார்ப்புகளையும் 
வைத்தால் கடைசியில் 
ஏமாற்றமும் காயங்களும்
உங்கள் இதயத்திற்கே 
வந்து சேரும்



25. உடைந்து போன மனமும்
நாளடைவில் உறுதியாகி விடும்
நம்பிக்கை இழக்காதே
சிரிக்க மறக்காதே



26. தன் வலிகளை வார்த்தைகளால்
சொல்ல தெரியாத
நம்முடைய உடைந்த மனதும்
கண்ணீரால் அழுகிறது


27. சில நேரத்தில்
என் முகத்தில் 
புன்னகைகளைச் சேர்க்கிறாய்
சில நேரத்தில்
என் மனதை புண்படுத்
துகிறாய்
உன்னை புரிந்து 
கொள்ளவே முடியவில்லை
உன் தவறுகளை 
நீ உணருவுமில்லை



28. ஒருவரின் மேல் நாம்
வைத்த அதிக அன்பு
நமக்கு அதிக மகிழ்ச்சிகளையும் 
கொடுக்கலாம்
நமக்கு அழியாத
மன காயங்களையும் ஏற்படுத்தலாம்



29. தங்களின் உடைந்த 
மனதை சரி செய்யாமலே
பலரும் வாழ்க்கையைக்
கடந்து போவதற்கு
காரணம் எல்லாம் ஒரு நாள்
சரியாகிவிடும் என்ற
நம்பிக்கை தான்



30. மீண்டும் ஒரு முறை 
தன் மனம் உடைந்து போவதை 
தன்னால் ஏற்று கொள்ள முடியாது
என்ற பயத்திலே
இப்போதெல்லாம்
யாரும் யாரோடும்
நெருக்கமாக பழகுவதில்லை



31. மனதில் பல 
காயங்களையும் கவலைகளையும் 
கொண்டிருந்தாலும்
பிறரிடம் அதனை 
காட்டிக்கொள்ளாமல் 
எல்லோரிடமும் 
அன்பாய் பழகும் 
மனிதர்களின் உள்ளம் 
என்றும் போற்றத்தக்கது



32. உங்கள் மனதில் காயங்களை
ஏற்படுத்தியவர்களுக்காக 
அழுந்து கொண்டு
உங்களின் கண்ணீர்துளிகளை 
வீணாக்காதீர்கள்



33. வாழ்க்கையின்
துன்பங்களை எல்லாம்
பார்க்கும் போது
மீண்டும் சோகங்களே
இல்லாத மழலையாகி விட 
மனமும் ஏங்குகிறது



34. நம்மை அதிகம் அலட்சியம் 
படுத்துவோருக்காகத்தான்
நாம் அதிகம் 
கண்ணீர் சிந்துகிறோம்



35. கவலைகளை 
நினைக்கும் போதே 
கண்ணீரும் 
தானாகவே வருகிறது



36. நானும் தனிமையில் 
மௌனமாக இருந்தேன்
ஆனால் என் கண்கள் 
மட்டும் கண்ணீர் சிந்துகிறது



37. நம்முடைய கவலைகளை 
இந்த உலகம் கவனிக்காது
அதனால் நாம் எல்லாவற்றையும் 
கடந்து மகிழ்ச்சியாக வாழ 
கற்று கொள்ள வேண்டும்



38. கருவறையிலும் 
கல்லறையிலும் மட்டுமே 
கவலைகள் இல்லை



39. பொய்யான அன்பால் 
ஏற்படும் காயங்கள் 
காலம் கடந்தும் மாறாது



40. என் கவலையை மறக்கவே 
உறக்கத்தை 
நான் அதிகம் விரும்புகிறேன்



41. வாழ்க்கையின் 
பயணம் எப்படி போகும் 
என ஆராய்வதை விட 
அது எப்படி போகுதோ 
அப்படியே நாமும் 
பயணிக்க வேண்டும்



42. வாழ்க்கையில் முதலில் 
பல துன்பங்கள் வரும் 
பிறகு பல 
இன்பங்களும் வந்தடையும்



43. நடந்து முடிந்ததை 
எண்ணி கவலைப்பட்டால் 
நம்முடைய எதிர்காலமும் 
இருளாகிவிடும்



44. சில நேரங்களில் நம்மை 
அழ வைத்தும் 
சில சமயத்தில் நம்மை 
சிரிக்க வைத்தும் 
ரசிக்கின்றது இந்த வாழ்க்கை



45. நம்முடைய வலிகள் 
பிறருக்கு புரியாது
நாம் தான் நம்முடைய 
காயங்களைக் 
குணப்படுத்த வேண்டும்



46. வாழ்க்கையில் சிலவற்றை 
இழக்கும் போது 
நம் மனம் வலிமையாகிறது



47. மனதில் வலிகள் 
நிறைந்து விட்டது
சிந்தனையில் குழப்பங்கள் 
வந்து விட்டது
இதற்கு இடையில் தான் 
என் வாழ்க்கை 
மெல்ல நகர்கின்றது



48. எத்தனையோ வலிகளைக் 
கடந்து தான் 
இந்த நொடி வரை 
நாம் இன்னும் உயிர் வாழ்கிறோம்



49. ஒவ்வொரு சூழ்நிலையையும் 
கடந்து போகும் போதும் 
ஒரு துன்பம் வருகிறது 
அதிலிருந்து ஒரு வாழ்க்கை 
பாடத்தையும் கற்று கொள்கிறோம்



50. காரணமில்லாமல் 
கண்ணீர் வருவதில்லை
வருகின்ற கண்ணீரை 
நிறுத்த வழிகளும் இல்லை



51. எனக்கென்று யாருமில்லை 
என்று நினைக்கும் போதெல்லாம் 
னக்கு துணையாக நிற்பது 
என் கண்ணீர் துளிகள் தான்



52. ஒருவருக்கு ஆறுதல் 
கூறாவிட்டாலும் பரவாயில்லை
யார் மனதையும் 
காயப்படுத்தாமல் இருங்கள்



53. நான் எனக்காக சிந்திய 
கண்ணீரை விட 
பிறருக்காக சிந்திய 
கண்ணீர்த்துளிகள் தான் அதிகம்



54. நம்முடைய
சோகத்தை மறைக்காத போது 
அழுகிறோம்
சோகத்தை மறைக்கும் போது 
சிரிக்கிறோம்



55. ஒருவர் கண்ணீர் சிந்துவதை 
பார்த்து மகிழும் உலகம் இது 


Post a Comment

0 Comments