Subscribe Us

Header Ads

Sweet Good Night Messages In Tamil

SWEET GOOD NIGHT 

MESSAGES IN TAMIL



Sweet Good Night Messages In Tamil



வணக்கம் நண்பர்களே, இரவு பொழுது ஒரு இதமான பொழுதாகும். இரவின் குளிர்ச்சியோடு நிலவின் வெளிச்சத்தோடு இரவு நேரம் மிகவும் அழகாய் இருக்கும்.
நாம் அனைவரும் இரவின் அமைதியோடும்  பல கனவுகளோடும்   
உறங்குவோம். இரவு வேளையில் நம் உள்ளமும் நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் இனிதாய் இரவோடு நிறைவு பெறுகிறது. இரவு வேளையில் நாம் அனைவருக்கும் இரவு வணக்கதைக் கூறுவோம். இந்த பதிவில் தமிழில் எழுதிய பல இனிய Good Night Messages -யை கொடுத்துள்ளோம்.


Sweet Good Night Messages In Tamil


1. அமைதி சூழ்ந்த இரவில்
நிலவை ரசிக்கும் வேளையில்
கண்கள் உறங்கட்டும்
கனவுகள் பிறக்கட்டும்
இனிய இரவு வணக்கம்



2. இருளின் அமைதியோடும்
நிலவின் வெளிச்சத்தோடும்
மன நிம்மதியோடும்
இந்த இரவு பொழுதில் 
நன்றாக உறங்குங்கள்
இனிய இரவு வணக்கம்



3. வானில் நிலவு உலா வர
என் மனதில் பல நினைவுகள்
ஊஞ்சலாட
இனிய பாடல்களோடு
இந்த இரவும்
என் தனிமையை
இனிமையாக்
குகிறது
இனிய இரவு வணக்கம்



4. இந்த இரவு நம்மோடு
இணைந்திருக்க
ஊரில் அமைதியும் சூழ்ந்தது
அழகிய நினைவுகள்
நமக்கு துணை நிற்க
உள்ளத்தில் மகிழ்ச்சியும் கூடியது
இனிய இரவு வணக்கம்



5. நாள் முழுதும் விழிக்கும்
கண்களுக்கு கொஞ்சம் 
ஓய்வு கொடுப்போம்
நிம்மதியாக உறங்குவோம்
இனிய இரவு வணக்கம்



6. நிலவின் அழகோடு
இன்றைய நாளும் 
நிறைவு பெறுகிறது
நல்ல எண்ணங்களோடு
உறங்க செல்வோம்
நாளைய பொழுதில் சந்திப்போம்
இனிய இரவு வணக்கம்



7. தூரத்திலிருந்து
நிலவு உனக்கு தாலாட்டு பாட
உன் துன்பத்தை எல்லாம் மறந்து
நீ தூங்கிடு
இனிய இரவு வணக்கம்



8. இரவின் மடியில் நமக்கு 
தாலாட்டு பாடுகிறது தென்றல்
இன்னும் நமக்கு என்ன வேணும்
இந்த வாழ்க்கையில்
போதும் என்ற மனதோடு
நிம்மதியாய் உறங்குவோம்
இனிய இரவு வணக்கம்



9. இன்றைய நாள்  இனிதாய் அமைந்தற்கு
இறைவனிடம் நன்றி கூறி
இரவின் மடியில்
உடலுக்கும் உள்ளத்துக்கும்
ஓய்வு கொடுப்போம்
இனிய இரவு வணக்கம்



10. மன வலிகளையும்
வாழ்க்கையின் துன்பங்களையும்
மறக்க செய்யும் 
ஒரு சிறந்த மருந்து
உறக்கம்
இனிய இரவு வணக்கம்



11. இரவின் தேவதை உன்னை ரசிக்க
குளிர் காற்றும் உன் மேனியை
மெல்ல சிலிர்க்க வைக்க
உள்ளத்தில் நிம்மதியோடு
கண்களில் கனவுகளோடு 
நீ அமைதியாக உறங்கு
இனிய இரவு வணக்கம்



12. என் கனவுகளில் கூட
நான் உன்னோடு வாழ்வதால்
என் உறக்கம் கூட
இப்போது இனிதானது
இனிய இரவு வணக்கம்



13. நிலவையும் நட்சத்திரங்களையும் 
அழகாய் ரசிக்க தெரிந்தவனுக்கு
கருமை வானம் கூட இனிமை தான்
கஷ்டங்களையும் துன்பங்களையும்
சாமர்த்தியமாக கடந்து செல்பவனுக்கு
வாழ்க்கையில் என்றும் 
ஆனந்தம் தான்
இனிய இரவு வணக்கம்



14. இன்றைய நாளின் 
வருத்தமும் வேண்டாம்
நாளைய பொழுதின் 
எண்ணமும் வேண்டாம்
எல்லாம் ஒருநாள் மாறிவிடும்
என்ற நம்பிக்கை மட்டும் 
மனதில் இருக்க
நாம் நிம்மதியாக உறங்குவோம்
இனிய இரவு வணக்கம்



15. கவலைகளை நினைத்து கொண்டு
உறக்கத்தைத் தவற விடாதே
உறக்கமும் மனிதனுக்கு
முக்கியமான ஒன்று
என்பதை மறந்து விடாதே
இனிய இரவு வணக்கம்



16. இனிய இரவு பொழுதை
நீ கண்ணீரில் கரைக்காதே
வானத்தில் உனக்காக 
காத்திருக்கும் நிலவை
நீ ரசிக்க மறக்காதே
இனிய இரவு வணக்கம்



17. அம்மாவாசையும் பௌர்ணமியும்
நிலவுக்குப் புதிதல்ல
இன்பமும் துன்பமும் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை
இனிய இரவு வணக்கம்



18. இரவு வரும் வரை 
நிலவு காத்திருக்கிறது
உன் வாழ்க்கையில் 
வெற்றி பெரும் வரை உழைத்திரு
இனிய இரவு வணக்கம்



19. மின்னும் நட்சத்திரங்கள் 
வானில் ஜொலிக்க
மின்மினி பூச்சிகள் 
மண்ணில் பறக்க
இரவின் அழகை 
ரசிப்போம்
இயற்கையின் அதிசயத்தை 
உணருவோம்
இனிய இரவு வணக்கம்



20. இதமான இரவை வர்ணித்து
நீ இனிய பாடல்களைப் பாடிடு
அழகான நிலவை ரசித்து
நீ புதிய கவிதைகளை எழுதிடு
இனிய இரவு வணக்கம்



21. வானில் அங்கு 
தன் துணையைத் தேடியவாறே 
நிலவும் தனிமையில் இருந்தது
மண்ணில் இங்கு 
என்னுடைய  துணையும் 
தூரத்தில் வாழவே
அவளது நினைவுகளோடு 
என் தனிமையும் கடந்தது
இனிய இரவு வணக்கம்



22. என் கனவுகளிலும் கூட
நீயே வருவதால்
என் உள்ளத்தில்
எந்த கவலையுமில்லாமல்
நான் நிம்மதியாய் உறங்குவேன்
இனிய இரவு வணக்கம்



23. என் இதயத்திலும்
நீயே வாழ்கிறாய்
என் இதய ராணியே
என் நித்திரையில் வரும்
கனவுகளிலும் நீயே வருகிறாய்
என் கண்மணியே
இனிய இரவு வணக்கம்



24. என்னால் உன்னை நேரில்
பார்க்க முடியவில்லை
என் கனவுகளிலாவது 
உன்னை சந்திக்க வேண்டும் 
என்ற ஆசையோடு
நான் உறங்குகிறேன்
என் இதய தேவதையே
இனிய இரவு வணக்கம்



25. நீ அங்கே
நானும் இங்கே
இரவின் மடியில் உறங்குவோம்
அழகிய கனவுகளில் சந்திப்போம்
இனிய இரவு வணக்கம்



26. உறவுகளோடு வாழுங்கள்
ஆனால் என்றும் 
உங்கள் உழைப்பை 
நம்பி மட்டும் இருங்கள்
இனிய இரவு வணக்கம்



27. பல மாற்றங்களைக் 
கடந்து வந்து தான் 
இன்று ஜொலிக்கிறது 
இந்த பௌர்ணமி நிலவு
இனிய இரவு வணக்கம்



28. வாழ்க்கையில் 
நாம் கடந்து செல்லும் 
ஒவ்வொரு நாளும் 
நமக்கு ஒரு பாடத்தைக் 
காற்று கொடுக்கிறது
இனிய இரவு வணக்கம்



29. பல காரணங்களைச் 
சொல்வதை காட்டிலும்
நாம் செய்யும் காரியத்தில் 
கவனமாக இருக்க வேண்டும்
இனிய இரவு வணக்கம்



30. கஷ்டங்களைக் கடந்து 
செல்வதால் தான் 
நாம் உயர்கிறோம்
நம் வாழ்க்கையில்
பல மாற்றங்களும் 
ஏற்படுகிறது
இனிய இரவு வணக்கம்



31. மண்ணில் பிறந்து விட்டோம்
இனி சிறப்பாக 
வாழ்ந்து விடுவோம்
இனிய இரவு வணக்கம்



32. ஒவ்வொருவரின் 
வாழ்க்கை பயணமும் வேறு
நம் வாழ்க்கைக்கு 
தேவையானதை செய்து 
வாழ்க்கையில் உயருவோம்
இனிய இரவு வணக்கம்



33. நம் மனதில் இருக்கும் 
அனைத்து பிரச்சனைகளுக்கும் 
ஒரு தீர்வு இருக்கிறது
அதனால் எதையும் 
யோசிக்காமல் 
நிம்மதியாக உறங்குவோம்
இனிய இரவு வணக்கம்



34. வாழ்க்கை என்பது 
கடவுளின் பரிசு
அதனுடைய அர்த்தத்தை 
நாம் தான் 
தீர்மானிக்க வேண்டும்
இனிய இரவு வணக்கம்



35. நம்மை சோதிப்பது காலம் தான்
இறுதியில் சாதிப்பது நாம் தான்
இனிய இரவு வணக்கம்



36. எதையும் இயல்பாக 
ஏற்று கொள்ளுங்கள்
வாழ்க்கை இனிதாகும்
இனிய இரவு வணக்கம்



37. வெற்றி பெற்றவனுக்கு
ஆனந்தம் கிடைக்கும்
தோல்வி பெற்றவனுக்கு 
அனுபவம் கிடைக்கும்
இவ்வளவு தான் வாழ்க்கை
இனிய இரவு வணக்கம்



38. ஒவ்வொரு நல்ல செயலும் 
நம்முடைய பழக்கமாகும் போது
நம்முடைய எதிர்காலம் 
பிரகாசமாகும்
இனிய இரவு வணக்கம்



39. எதிர்காலத்தைப் பற்றி 
சிந்தித்து பார்ப்பவன்
தனக்கான தேவையை 
முன்கூட்டியே செய்து விடுவான்
இனிய இரவு வணக்கம்



40. மனிதனின் மனதை 
திருப்தி படுத்தவே முடியாது
இருப்பதை கொண்டு 
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
இனிய இரவு வணக்கம்



41. வாழ்க்கையில் 
பொறுமை இருந்தால்
நாம் அனைத்தையும் பெறலாம்
பொறுமை இல்லாதவன் 
இருப்பதையும் இழப்பான்
இனிய இரவு வணக்கம்



42. துன்பங்கள் தான் 
மனிதனை செதுக்குவின்றன
உறுதியான மனிதராய் 
உருவாகும் வரை
நாம் போராடுவோம்
இனிய இரவு வணக்கம்



43. அடுத்தவரை போல 
வாழ வேண்டும் என்று 
நினைக்காத வரை
வாழ்க்கை ஒன்றும் 
கஷ்டம் இல்லை
இனிய இரவு வணக்கம்



44. உடலுக்கு நல்ல உணவையும்
உள்ளத்துக்கு நல்ல 
நிம்மதியையும் கொடுப்போம்
இனிய இரவு வணக்கம்



45. இரவில் பெய்யும் மழை 
நமக்கு கிடைத்த பரிசு தான்
நம்மை தாலாட்டி 
உறங்க வைக்கிறது
இனிய இரவு வணக்கம்



46. உறங்க சென்ற நான்
உறங்காமல் 
உன்னையே நினைக்கிறேன்
உன் நினைவுகள் 
என் உறக்கத்தைத் 
தூரமாக்கியது
இனிய இரவு வணக்கம்



47. இரவுக்கு அழகு சேர்ப்பது 
நிலவு மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்
இனிய இரவு வணக்கம்



48. நம் அனைவரையும் 
உறங்க வைத்து 
விடியும் வரை 
வானில் தனிமையில் 
இனிமை காண்கிறது நிலா
இனிய இரவு வணக்கம் 


Post a Comment

0 Comments