Subscribe Us

Header Ads

Humanity Quotes In Tamil

HUMANITY QUOTES IN TAMIL


Humanity Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே, தற்போதைய நவீன காலத்தில் பணம் நம்மை ஆட்சி செய்கின்றது. மனிதர்கள் பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்  குணத்திற்கு கொடுக்கிறார்களா?நாம் இந்த மண்ணில் வாழும் வரை பிற உறவுகளோடு மனிதநேயத்துடன் பழகுவது நம்முடைய கடமையாகும். சிறந்த மனிதராய் வாழ்வோம். நம் மனதில் மனிதநேயதை வளர்ப்போம்.  உங்களுக்காக தமிழில் எழுதிய Humanity Quotes.



Humanity Quotes In Tamil



1. நிறங்களைப் பார்த்தால் மனிதர்களிடம்
நிம்மதி பிறக்குமா மண்ணில்
குலங்கள் பார்த்தால்
குறைகள் நீங்குமா 
ஒவ்வொரு ஊரில்
ஜாதிகள் பார்த்தால் நம்மிடத்தில்
ஜெயம் வாழுமா நீதியில்
மேல் இடம் பார்த்தால்
ஏழைகளிடம் மேம்பாடு 
இருக்குமா ஏழ்மையில்
மதங்கள் பார்த்தால்
மனிதரிடத்தில் மனிதநேயம்
இருக்குமா மண்ணில்



2. கருமை நிறைந்த வானம்
இயற்கை என்றால்
கருமை உடலோடு
பிறந்த வாழ்வு இழிவா?



3. மனிதனாய் வாழ்வதை விட
மனித நேயத்துடன் 
வாழ்வதே சிறப்பு



4. அழகிய முகங்களை நம் 
பார்வையில் தெரிந்து கொள்கிறோம்
அழகிய அகங்களை நாம்
பழகியதில் புரிந்து கொள்கிறோம்



5. இறப்பால் ஒருவரை 
உலகில் இருந்து 
அழித்து விட முடியும் ஆனால்
நம் உள்ளத்தில் இருந்து அல்ல



6. மனிதர்களிடம்
அனுசரித்து செல்ல வேண்டியது
குறைகளை மட்டுமே தவிர 
அவர்கள் செய்த குற்றங்களை அல்ல



7. வாழ்கை பயணம் 
எப்போது எங்கு 
மர்மமாய் முடியும் என்று
யாருக்கும் தெரியாது
ஆனால்
வாழும் தருணம் எப்படி
அன்பாய் பண்பாய் வாழ்வது  
என்று எல்லோரும் பழகிட முடியும் 



8. சுதந்திரதிற்குப் போராடிய
மன்னர்கள் அன்று
சுவாசத்துக்குப்  போராடும்
மருத்துவம் இன்று



9. பிறருக்கு உதவி செய்யவில்லை 
என்றாலும் பரவாயில்லை
உதாசீனம் பண்ணாமல்
இருந்தாலே போதும்



10. நம் வாழ்க்கையில் என்னவெல்லாம்
இருக்கிறது என்பது முக்கியமில்லை
எத்தனை நல்ல உள்ளம் கொண்ட 
மனிதர்கள் நம் அருகில் 
இருக்கிறார்கள் 
என்பது தான் முக்கியம்



11. உன் வலியை நீ உணரும்
போது நீ உயிரோடு வாழ்கிறாய்
பிறர் வலியை நீ உணரும்
போது மனிதனாய் வாழ்கிறாய்



12. அழகான முகங்களைத் தேடாதே 
உன்னை நீ ஏமாற்றி கொள்வாய்
அன்பான உள்ளதைத் தேடு
உன்னில் நீ மாற்றத்தை அடைவாய்



13. பசி என்பது ஒரு உணர்வு தான்
பணமில்லாமல் ஏற்படும் பசி
உலகத்திலே கொடுமையான
உணர்வாகும்



14. மண்ணில் மனிதநேயத்தோடு இரு
மனதில் மகிழ்ச்சிகளைச் சேரு
முடிந்த வரை பிறருக்கு உதவ பாரு
எப்போதும் பிறர் மதிக்க வாழு



15. இன்று உலக பொருளாதாரம் 
வளர்ச்சி அடைந்து விட்டது
ஆனால்
உலக மக்களின் உள்ளத்தில் 
மனிதநேயம் குறைந்து வருகிறது



16. வாழ்க்கையில் 
பணத்தை மட்டும் 
தேடுபவனுக்கு
பிறரின் துன்பம் 
என்னவென்று புரியாது
பிறருக்கு உதவும்
மனமும் கிடையாது



17. உங்களை புரிந்து கொள்ள 
போவதில்லை இவ்வுலகம்
உன்னை பற்றி உலகுக்கு 
நீ புரிய வைக்க நினைக்காதே
உன்னை தினமும் நேசிக்க மறக்காதே



18. காரணத்தோடு வரும் அன்பும்
காரணமில்லாமல் வரும் வெறுப்பும்
கடைசியில் காயங்களை ஏற்படுத்துகிறது



19. நீ எதையும் எதிர்பார்க்காமல்  
பிறருக்கு உதவி செய்தால்
நீ எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்களைக்  
கடவுள் உனக்கு கொடுப்பார்



20. ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்து
மனிதநேயத்தோடு வாழ்ந்தாலே போதும்
உலகத்தில் அமைதி பெருகும்
உள்ளத்தில் நிம்மதி பிறக்கும்



21. பொய்களைப்  பேசாத்தவர்களையும்
போலியாய் நடிக்காதவர்களையும்
மனிதனாய் மனித நேயத்துடன் 
வாழ்பவர்களையும்
பலருக்கும் தெரியவில்லை



22. நீ செய்யும் நம்மையை
யாரும் பார்ப்பதில்லை
நீ செய்யும் தீமையை
யாரும் விமர்சிக்காமல்
விடுவதில்லை



23. நாம் செய்த புண்ணியங்கள்
நம்மை வாழ வைக்கிறது
நாம் செய்த பாவங்கள்
நம் வாழ்க்கையை வீழ்த்துகிறது



24. உணவு அளித்த பிராணிகளிடம் 
இருக்கும் அன்பான உள்ளம் கூட
உதவிய மனிதர்களிடம்
இருப்பதில்லை



25. பசி என்று வந்தவனுக்கு 
நீ வயிறார உணவு பரிமாறினால்
உன் கருணையைப்  
பார்த்து மகிழ்ந்து
உன்னை மனசார 
வாழ்த்தி செல்வான்



26. உனக்கு 
அறிமுகமில்லாதவனுக்கும்  
அன்னதானம் செய்
உன்னை 
தெரியாதவனுக்கும்
ரத்த தானம் செய்



27. நீ பிறருக்கு செய்த நல்லது
உன்னை ஒருநாள் தேடி வரும்
என்றும் நல்லதை மட்டும் செய்



28. மண்ணில் மனிதர்கள் 
வளமுடன் வாழ வேண்டும்
மனிதர்களின் மனதில்
மனிதநேயம் வளர வேண்டும்



29. எல்லா உறவுகளின் 
பிரிவுக்கு பின்னால் 
ஒரு முற்றுப்புள்ளி இருக்கிறது
ஆனால்
யாரோ ஒருவர் மீண்டும் அதில் 
ஒரு புள்ளியை வைத்து நம்மை
மீண்டும் வாழ்கை பயணத்தில் 
அழைத்து செல்கிறார்கள்



30. ஏழை பணமில்லாமல் 
வாழ்ந்தாலும் 
ஆனால் பாசக்காரனாக 
இருப்பான்



31. பணம் உள்ளவனை 
பாராட்டியும்
பாசம் உள்ளவனை
அலட்சியப்படுத்தியும் 
பலர் வாழ்கிறார்கள்
இவர்கள் மண்ணில் 
மனிதநேயத்தை 
அழித்து விடுகிறார்கள்



32. யாரென்று அறியாத 
ஒருவரின் துன்பத்தில்
வரும் கண்ணீரைக்  கண்டு
ஏனென்று புரியாமல் 
உன் கண்களிலும்
கண்ணீர் வருவதே மனிதநேயம்



33. குடிசையில் வாழும் 
ஏழையிடம் 
பணம் இல்லாமல்
இருக்கலாம்
ஆனால் அந்த ஏழையிடம் 
இரக்கம் குணம் இருக்கும் 
 


34. இறைவன் தனக்கு கொடுத்த 
செல்வத்தைப் பிறருக்கும் 
பகிர்ந்து கொடுத்து 
வாழ்வதில் கிடைக்கும் 
மகிழ்ச்சிக்கு  
நிகர் வேறுதுவுமில்லை 



35. மற்றவர்கள் நம்மிடம் 
மனிதநேயத்தோடு 
பழகவில்லை என்றாலும் 
நாம் பிறரிடம் 
மனிதநேயத்தோடு பழகுவது 
நம் குணத்தை 
மேலும் அழகாக்கும்



36. மனிதன் பணத்தைச் 
சம்பாரிக்கும் ஆர்வத்தில் 
குணத்தை மறந்து விடுகிறான்



37. தேவைக்கு மட்டும் பழகும் 
இந்த உலகில் 
மனிதர்கள் நன்றியை 
மறந்து வாழ்கிறார்கள்



38. இறுதியில் நாம் 
சேர்த்து வைத்த 
பணமும் பொருளும் 
நம்மை காப்பாத்துமா 
என்று தெரியாது
ஆனால் உண்மையான 
மனிதநேயம் கொண்ட 
மனிதர்கள் நமக்கு 
உதவுவார்கள்



39. மனிதநேயம் என்ற 
நல்ல குணத்தால் தான் 
மனிதர்கள் மண்ணில் 
ஒற்றுமையாக வாழ்ந்து 
உலகில் அமைதியைச் 
சேர்க்க முடியும்



40. மனிதநேயத்தின் 
முக்கியத்துவத்தைச் 
சிறு வயதிலிருந்தே 
குழந்தைகளுக்கு 
நாம் கற்று கொடுக்க வேண்டும்



41. எல்லாவற்றிலும் குறையையும் 
வேற்றுமையையும் பார்க்கும் 
மனிதர்களின் மத்தியில் 
சிலர் மனிதநேயத்தோடு 
வாழ்கிறார்கள்
பிறருக்கு உதவ முன் 
வருகிறார்கள்



42. மனிதநேயம் கொண்ட மனிதர்கள் 
வாழும் நாட்டில் 
அமைதியும் இன்பமும் பெருகும்



43. சிறியோரிடம் 
அன்பாக பழகுவோம்
முதியோரிடம்
மரியாதையாக பேசுவோம்



44. மனிதநேயத்தைப் பற்றி 
பேசுவதோடு மட்டுமல்லாமல் 
ஒவ்வொருவரும் அதை 
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்



45. காலங்கள் மாறும் வேகத்தில்
மனிதர்களிடம் 
வேற்றுமைகள் அதிகரித்து 
ஒற்றுமை குறைந்து விட்டது



46. இன்று நாம் 
பிறருக்கு செய்யும் உதவியும் 
பிறர் மேல் நாம் 
செலுத்தும் பாசமும் 
ஒரு நாள் நம்மை வாழ வைக்கும்



47. உயர்ந்தவர் தாழ்ந்தவர்
என்று யாருமில்லை
இந்த உலகில் வாழும் 
அனைவரும் ஒன்று தான்



48. பிறரிடம் இருக்கும் குறைகளைச் 
சுட்டி காட்டும் மனிதர்கள் 
அவர்களிடம் இருக்கும் 
நிறைகளைப் பார்ப்பதில்லை



49. எல்லோரிடமும் அளவோடு
பழக வேண்டும் 
அதே சமயத்தில் 
அன்பாகவும் பழக வேண்டும்



50. மனிதன் ஒருவர்க்கொருவர் 
சண்டை போட்டு கொள்ளாமல் 
ஒருவர்க்கொருவர் 
ஒற்றுமையாக வாழ்ந்தாலே 
மண்ணில் மனிதநேயம்
வாழும்



51. பிராணிகள் எல்லாம் 
ஒரே காட்டில் 
ஒன்றாக வாழ்கிறது
ஆனால் மனிதர்கள் 
ஒரே நாட்டில் 
பிரிந்து வாழ்கிறார்கள்



52. மனிதர்களோடு 
வாழ்ந்தால் கடினம் 
என நினைத்து 
இன்று பலரும் 
பிராணிகளோடு வாழ 
விரும்புகிறார்கள்



53. நல்லவர் கெட்டவர் 
யார் என்று 
கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு 
உலகில் மனிதர்கள்
நன்கு நடிக்க கற்று கொண்டார்கள்



54. நம்முடைய நெருங்கிய உறவுகள் 
செய்ய முடியாத உதவியைச் 
சில சமயங்களில் 
யாரோ ஒருவர் 
மனிதநேயத்தோடு 
நமக்கு உதவி செய்கிறார்கள்



55. ஒருவர் சேமித்து வைத்த 
செல்வம் அவரை 
சிறந்தவராக காட்டுவதில்லை
ஒருவரின் நல்ல குணமே 
அவரை உயர்த்தி காட்டுகிறது



56. மனிதனால் மனிதன் 
வாழ்வதை காட்டிலும் 
மனிதனால் மனிதன் 
அழிவதை தான் 
இன்றைய உலகில் 
நாம் பார்க்கிறோம்



57. மனிதநேயம் கொண்ட 
மனிதர்களைத் தேடுகிறோம் தவிர 
மனிதநேயம் கொண்ட
மனிதர்களாக முதலில் 
நாம் வாழ்வதில்லை  


Post a Comment

0 Comments