Subscribe Us

Header Ads

Love Poems and Quotes In Tamil

   LOVE POEMS AND QUOTES IN TAMIL


Love Poems and Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே. காதல் என்பது ஓர் அழகிய கவியமாகும். நம்முடைய காதலின் எண்ணங்களை எழுத்துகளின் வழியாக சொல்வது தான் காதல் கவிதைகள். இதனால் தான் நம் மனதில் காதல் வந்தால் கவிதையும் சேர்ந்தே வரும் என்று சொல்வார்கள். உங்கள் அன்பானவர்களுக்கு நீங்களும் காதல் கவிதைகளை அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கு அழகான காதல் கவிதைகளைத் தமிழில் கொடுத்துள்ளோம். உங்கள் அன்பானவர்களுக்கு உங்களது காதலை அழகிய கவிதைகளாக சொல்லுங்கள்.



Love Poems and Quotes In Tamil



1. காதல் 
இரு இதயம் இயற்றும் 
ஒரே ஓசை கேட்கும் 



2. நீ வந்தாய் என் வாழ்வில் 
நீ வர்ணம் என் வானவில்லில் 
நீ கவிதை என் காதலில் 
நீ சந்தோசம் என் சோகத்தில் 
நீ முத்தம் என் கன்னத்தில் 
நீ மட்டும் என் மூச்சில் 



3. மனதில் ஒரு சத்தம்
கன்னத்தில் ஒரு முத்தம் 
என் வாழ்வில் ஒர் அர்த்தம் 
நம் காதல் ஒரு சித்திரம் 



4. என் வாழ்க்கையில்
துன்பம் சூழ்ந்த நேரத்தில்
நீ இன்பங்களைச்  சேர்த்தாய்
கஷ்டங்கள் வந்த வேளையில்
நீ சந்தோசங்களைத்  தந்தாய்
உன் காதலை பெற்ற 
பாக்கியசாலியாய் வாழ்கிறேன்
உன் காதலோடு 
வாழ்க்கையை வெல்வேன்



5.  உலகில் பல பெண்கள் இருந்தும்
என் கண்ணில் விழுந்த 
உன்னையே 
நான் காதலிப்பது 
என்ன அதிசயமா  இல்லை 
அந்த ஆண்டவனின் முடிவா



6. நான் இறகினால் கவிதை எழுத 
நீ இமைகளால் காதல் சொல்ல 
நம் இதயங்கள் நமக்காக 
விழித்திருக்கும் இரவுகளில்



7. என் இதயத்தில் உன் இமைகளால்
ஒரு கவிதை எழுதிடுக 
என் உள்ளத்தில் உன் உயிரால் 
ஒரு காதல்  சொல்லிடுக
என் எதிரில் உன் எழிலால்
ஒர் ஓவியம் வரைந்திடுக 
என் வாழ்வில் உன் வருகையால் 
ஒரு வானவில் செய்திடுக 



8.  உன் காதலை நீ சொல்லாமலே
நான் புரிந்து கொள்வேன்
உன் பார்வையின் அர்த்தத்தை 
நான் உணர்ந்து கொள்வேன்



9. என்னை மறந்து
நான் உன்னை  
அதிகம் நேசிக்கும் போது தான் 
தெரிகிறது 
உன் மேல் எனக்கு  காதல்  
தோன்றி விட்டது என்று



10. நான் இயற்றும் காதல் கவிதைக்கு 
வார்த்தைகளே நீயாக 
நான் வாழும் இன்ப வாழ்க்கைக்கு 
கிடைத்த வரமே நீயாக 
நானே உன் இதயமாக 
வாழ்வேன் என்றும் என் உயிராக 



11. உன்னிடம் என்ன பிடிச்சிருக்கு 
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் உன்னை 
மட்டுமே எனக்கு பிடிக்கும்



12. முரடனாய் இருந்த என்னை
இப்போது முயல் குட்டியைப்  போல
மாற்றியது உன் காதல்



13. நம் காதல் மொழியால்
பல கவிதைகளை எழுதுகிறது 
என் கரங்கள்
நம் காதல் உணர்வால்
பல பாடல்கள் பாடுகிறது 
என் உதடுகள்



14. உன் அன்பில் அரக்கனும் 
அடிமை தான் 
உன் அழகில் அதிசயமும் 
மௌனம்  தான் 
உன் விழியில் இயற்கையும் 
மயங்கியது தான் 
உன் காதலில் இதயமும் 
உயிரிழந்தது தான் 
உன் மனதில்
நானும் காதல் தான் 



15. உன் கண்களில் இருக்கும் 
கவிதையை நான் வாசிக்க 
என் மனதில் இருக்கும் 
காதலில் நீ வசிக்க 
நம் காதலில் இருக்கும் 
கனவுகளில் நம் உயிர் சுவாசிக்க 
இருவரும் வாழ்வோம் 
முதுமை எல்லை வரை 
இணையட்டும் நம் காதல் 
மூச்சி இருக்கும் வரை 



16. இனி உன்னை 
நான் ரசித்து கொண்டே
இருக்க வேண்டும்
இறுதி வரை உன்னை
நான் சிரிக்க வைத்து கொண்டே
இருக்க வேண்டும்



17. உன் பெயரை  சொல்ல 
என் உதடுகளுக்கு ஆசை
உன் முகத்தை பார்க்க
என் கண்களுக்கு  ஆசை
உன் கைகளைப்  பிடிக்க
என் கை விரல்களுக்கு ஆசை
உன் இதயத்தின் காதலை 
நேசிக்க என் உள்ளத்திற்கு ஆசை



18. நீயும் நானும் ஒன்றாய் போவோம் 
நிமிடங்கள் கடந்து போகும் 
நீயும்  நானும் புரிந்து வாழ்வோம் 
நிம்மதி பிறந்து வளரும்  



19. மேகம் போகையில் 
மேனி சிலிர்த்தது 
மழை பொழிகையில்
மனம் மகிழ்ந்தது 
சாரல் வீசுகையில் 
சாந்தம் நிறைந்தது 
காற்று கடக்கையில் 
காலம் கடந்தது 
உன்னை பார்க்கையில் 
உள்ளம் உரையாடியது 



20. சின்ன சின்ன நட்சத்திரம் வானில் 
வண்ண வண்ண எண்ணங்கள் 
என் மனதில் 
மின்னும் மின்னும் உன் கண்கள் 
என் எதிரில் 
இன்னும் இன்னும் என்ன வேணும்
நான் தூங்கிட 



21. இந்த உலகில்
எனக்கு தெரிந்த ஓர் அழகிய 
பெண்மணி நீயே
நான் காதலிக்கும் 
என் கண்மணி நீயே



22. உதடுகள் பேச  துடிக்கிறது
இதயம் மௌனத்தில்  தவிக்கிறது
இதற்கு இடையில்
தோன்றியது தான் 
காதல்



23. என் கண்கள் தான் உறங்குகிறது
என் இதயம் என் காதலியை
நினைத்து கொண்டே துடிக்கிறது



24.  அழகான இவ்வுலகில் 
ஆயிரம் உயிர்களில்
இந்நேரம் இப்பொழுதில் 
ஈடு இல்லாமல் 
உன்னை மட்டும் நினைக்கையில் 
ஊரே அமைதியாய் உறங்குகையில் 
என்னை நானே தேடுகையில் 
ஏன் இந்த நள்ளிரவில் 
ஐயமின்றி நான் எழுதுகையில் 
ஒரு பேனாவும் போதவில்லை 
ஓராயிரம் வார்த்தைகளும் பற்றவில்லை 
ஒளவியம் வந்ததே உன்னை நினைக்கையில் 
(ஃ) என்ற ஆயுத எழுத்து போல 
நீயும் அதிசயம் 



25.  மஞ்சள் வானத்தில் பறவைகள் 
மனமெங்கும் உன் நினைவுகள் 
மயிலில் உள்ளது வண்ணங்கள் 
மலரும் உன் நினைவுகள் 



26. நீ என் அருகில் 
இல்லாத வேளையில் கூட
உன் நினைவுகள் 
எனக்கு சந்தோசத்தைக்  
கொடுக்கிறது
காதலால் இத்தனை
பேரின்பம் இருக்கிறது என்று
எனக்கு புரிய வைக்கிறது 
உனது அளவற்ற அன்பு



27. நாளுக்கு நாள் 
என் தோற்றம் மாறலாம்
உன் மேல் எனக்கு 
தோன்றிய காதல் 
ஒரு போதும் மாறாது



28. இதயம் காதலை எழுத
கண்கள் காதலை படிக்கிறது
இருவருக்கும் அது 
என்னவென்று புரிகிறது
இருவரின் கால்களும்
காதல் பாதையில் செல்கிறது



29. நான் உன்னை 
காதலிப்பதும்  நேசிப்பதும்  
உன்னோடு வாழ்வதற்காக தானே 
உன்னக்காக மட்டும் வாழ தானே



30. மரணம் என்னை வென்றாலும்
நாம் காதலை வெல்ல முடியாது



31. மரணம் வரை 
உன் தோளில் சாய்ந்து 
இருக்க வேண்டும்
உன் கைகள் கோர்த்து
வாழ்க்கை பயணத்தைத் 
தொடர வேண்டும்



32. நான் இந்த 
உலகில்  வாழும் வரை
நீ என் உயிராய் சுவாசமாய்
என்றும் என்னுள்  இருப்பாய்



33. உன் நினைவுகள் 
என் தனிமையைக்  கூட 
இனிமையாக்கிறது
என்னை கொஞ்ச நேரம்  
சிரிக்க வைத்து ரசிக்கின்றது



34. உன் மீது 
எனக்கு எப்போது காதல் வந்தது 
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் உன் மீது 
நான் கொண்ட  காதல் 
என்றும் மாறாது 
என்று எனக்கு நன்கு தெரியும்



35. காலம் முழுவதும் 
உன் காதலுக்காக 
நான் உனக்காக காத்திருப்பது 
எனக்கு கிடைத்த வரமே



36. எத்தனை சோகங்கள் 
எனக்குள்  இருந்தாலும் 
என் முகத்தில் 
புன்னகை மலர்களைப்  
பூக்க செய்பவள் நீயடி



37. உன்னை காண முடியாத  
தொலைவில் நான்  இருந்தாலும்
நான் காணும் இடமெங்கும் நீ 
என் அருகில் இருப்பது போல் 
நான் உணருகிறேன்
உன்னை நினைத்தபடியே 
நாளும் வாழ்கிறேன்



38. உணவையும் உறக்கத்தையும்
மறந்து உந்தன் நினைப்பில் 
என் மனம் இருக்கிறது
உன்னை காண 
என் கண்கள் உன்னையே தேடுகிறது



39. கனவும் காதலும் ஒன்று தான்
சிலருக்கு பலிக்கும் 
சிலருக்கு கலைந்து விடும்



40. நம் இரு விழிகளில் 
காணும் ஒரே கனவு காதல்
நம் இரு மனம் பேசும்
ஒரே மொழி காதல்



Post a Comment

0 Comments