Subscribe Us

Header Ads

Nature Poems and Quotes in Tamil

NATURE POEMS AND QUOTES IN TAMIL


Nature Poems and Quotes in Tamil


வணக்கம் நண்பர்களே, உங்களுக்கு இயற்கையோடு இருக்க பிடிக்குமா? நாம் இயற்கையோடு இருக்கும் போது மன அமைதியைப்  பெறலாம். இதனால் நம் மனதில் நல்ல எண்ணங்கள் பிறக்கும். தினமும் கொஞ்சம் நேரமாவது நாம் இயற்கையோடு நம் நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையின் அழகை பார்த்து ரசிக்க வேண்டும். அதோடு, இயற்கையைப் பேணி காக்க பல முயற்சிகளைச் செய்திட வேண்டும். இயற்கை அன்னையின் அன்பு நம்  வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். இதோ இந்த பதிவில் தமிழில் எழுதிய Nature Poems and Quotes -யை பதிவிட்டுள்ளோம்.



Nature Poems and Quotes In Tamil


1. பெண் வண்ண வண்ண
வளையல்களை அணிவது போல்
வான் வானவில்லை 
அணிந்து கொள்கிறது


2. பல நாட்களுக்குப் பிறகு 
மழை பூமிக்கு வந்தாலும்
ஆசையாய் அணைத்து 
கொள்கிறது மண்


3. மேகங்கள் பஞ்சு மிட்டாய் போல 
வானில் நிறைந்து இருக்கிறது
அதனை கையில் எடுத்து கொள்ள 
என் மனமும்  ஆசைப்படுகிறது



4. கொஞ்சம் நேரம் தெரிந்து
கொஞ்சம் நேரம் மறைந்து
என்னோடு கண்ணாமூச்சி 
விளையாடுகிறது நிலவும்
அதனை ரசித்த என் கண்களும் 
மெல்ல உறங்கியது



5. கதிரவனின் ஒளியில்
மலர்களும்
கூச்சம் கொண்டு
சிரித்து மகிழ்கிறது
அதுவே மலர்கள் மலரும்
காட்சியாகிறது



6. பூங்காவில் தனியே இருக்கும் 
வண்ண வண்ண மலர்களுக்குப் 
பல கதைகளைச் சொல்ல 
காற்றும் விரைந்து வந்தது
அந்த காற்றின் கதைகளும் 
நம் காதுகளுக்கு 
இன்னிசையாக இருந்தது
நம் மேனியைச் 
சிலிர்க்க வைத்தது


7. கரையை காண
நிமிடமும் அலைகள்
வந்து போகிறது
கரையின் கன்னத்தில்
முத்தமிட்டு செல்கிறது



8. கடல் நீரும் 
நீல நிறமாய்
மாலையில் வானமும்
மஞ்சள் நிறமாய்
காடுகளும் மலைகளும் 
பச்சை நிறமாய்
பூமியின் மண்துகள்களும் 
செம்மண் நிறமாய்
குளிர்ச்சியான நீர்விழ்ச்சியும் 
வெள்ளை நிறமாய்
இரவில் வானும் 
கருப்பு நிறமாய்
எல்லா நிறங்களும் சேர்ந்து
அழகிய ஓவியமாக இருக்கும் 
இந்த இயற்கை
இறைவன் நமக்கு கொடுத்த 
ஒரு அன்பளிப்பு



9. தினமும் பறவைகள் 
மகிழ்ந்து விளையாடவே
விளையாட்டு பூங்காவாக 
வானமும் அமைந்தது
பறவைகளின் உல்லாசத்தை
ரசித்து கொண்டே
மெல்ல நடைப்போட்டு 
மேகங்களும் நகர்ந்தது



10. இரவு பொழுதில் 
கருமேகங்களின் மேடையில்
இளவரசியாக நிலவு அமர்ந்திருக்க 
அவளின் தோழிகளான
நட்சத்திரங்களும் உடன் இருக்க
அவர்களை ரசித்தவாறே 
என் கண்களும் மெய்மறக்க
என் கரங்களும் கவிதைகளை
எழுத தொடங்கியது



11. நட்சத்திரங்களை 
எண்ண ஆரம்பித்த நான்
கடைசியில் அந்த 
மின்னும் நட்சத்திரங்களின் 
அழகை கண்டு வியந்து போனேன்



12. இரவின் பூங்காவில்
பூத்திருக்கும் நட்சத்திரங்களின் நடுவில்
வெள்ளை உடையணிந்து
கொள்ளை அழகுடன்
நிலா தேவதை 
நமக்காக காத்திருக்கிறாள்



13. உயரத்திலிருந்து 
ஊற்றும் நீர்விழ்ச்சியில்
குளித்த பிறகு
என் உடல் எல்லாம் 
குளிரால் சிலிர்த்தது
என் உள்ளம் எங்கும் 
மகிழ்ச்சியால் நிறைந்தது



14. பூக்களின் வாசமும்
நிறங்களும் வேறுபட்டிருந்தாலும்
ஒரே பூங்காவில்
ஒற்றுமையாகத்தான் 
பூக்கள் வசிக்கிறன
அவைகள் ஒன்றாய் 
சேர்ந்து இருக்கும் போது 
நம் கண்களுக்கு 
அழகிய காட்சியாகத் தெரிகிறது



15. மரங்களின்
அடர்த்தியான கிளைகளில்
வசதியாக அமர்ந்து
வண்ண கிளிகள்
கொஞ்சி பேசிக்கொண்டிருக்கிறது
பறவைகள்
வசிக்கும் இடத்தை அமைக்கிறது
அணில்கள்
வயிற்றுக்கு உணவாக 
பழங்களை உண்ணுகிறது


16. உலக மலர்களின்
அழகை  ரசிப்பதற்கு
அங்கும் இங்கும் பறந்து
ஆனந்தமாக
உலா வருகிறது 
வண்ணத்துப்பூச்சிகள்



17. சின்ன சின்ன 
மழை தூறல்களின்
இசையோடு
மழைகாற்றும் இதமாய் 
தாலாட்டு பாடுகிறது
நம்மை ஆழ்ந்த தூக்கத்தில்
உறங்க வைக்கிறது



18. பௌர்ணமி நிலவோடு
குளு குளு பனித்துளிகளோடு
சிலு சிலு காற்றோடு
வானில் மின்னும் நட்சத்திரங்களை 
ரசித்து கொண்டு
மனதில் பிறக்கும் ஆசைகளை
எண்ணி கொண்டு
என் இதயம் 
அதனை 
ஒவ்வொன்றாய்  சொல்ல சொல்ல
என் கரங்கள் மெல்ல மெல்ல
காகிதத்தில் எழுதுதியது



19. காலையில் சூரியன் உதயமாகிறது
நாமும் உழைக்க புறப்படுகிறோம்
இரவில் நிலவு உலா வருகிறது
நாமும் உறங்க செல்கிறோம்



20. இதமான காற்றில்
இதயமும் மயங்கியது
இரவின் அழகில்
இமைகளும் மூடியது



21. தண்ணீரில் 
மூழ்கி போவாமல்
தலை நிமிர்ந்து
மிதக்கிறாள் தாமரை



22. விண்ணுக்கு மேல்
பறவைகள் பறந்து
உலா வருகிறது
மண்ணுக்கு கீழ்
உயிரனங்கள் 
ஊர்ந்து உயிர் வாழ்கிறது



23. வளைந்து நெளிந்த
காடு மலைகளுக்குள்
வானோடு உயர்ந்து அடர்ந்து
இருக்கும் மரங்களின்
மருத்துவ பயன்களும் 
எண்ணிலடங்கா
உறவுகளோடு 
இணைந்து மகிழ்ந்து 
வாழும் உயிரினங்களின்
ஆனந்த காட்சிகளும் 
சொல்லிலடங்கா 



24. பறவைகளின் கூச்சலோடு
சேவலின் கூவலோடு
கதிரவனும் உதிக்க 
பூக்களும் பூக்க 
காலையும் பிறந்தது
கண்களும் திறந்தது



25. துளி துளியாய் 
மழையும் பொழிய 
நானும் அந்த மழையில்
துள்ளி குதித்து விளையாடினேன்



26. இரவில் பெய்யும் மழை 
கொஞ்சம் பேரழகு தான்



27. மழைத்துளிகள் 
என்னை முத்தமிட்டு போக
என் உடலும் உள்ளமும்
ஈரமானது



28. மழையை நானும் ரசிக்க
சிறு வயதில் ஓடும் நீரில் 
காகித கப்பல் விட்டு 
விளையாடிய ஞாபகங்கள் 
அழகிய நினைவுகளாக 
என் மனதில் 
மீண்டும் தோன்றியது



29. விவசாயின் முகத்தில் 
சிரிப்பை வரவைக்கும் 
இயற்கை நிகழ்வு தான்
மழை



30. உலகை பார்க்கும் 
பொறுப்பை நிலவிடம் 
ஒப்படைத்து விட்டு 
மறைந்து போகிறது சூரியன்



31. நான் கொடுக்கும் 
காற்றை சுவாசித்து 
என்னையே நீ அழிக்கிறாய்
இப்படிக்கு மரங்கள்



32. மனிதன் மரங்களை 
அழிப்பதால் தங்களின் 
இருப்பிடத்தைத் தொலைத்து 
அகதிகளாக அலைகிறது 
பறவைகள்



33. இயற்கையை 
ரசிக்க தெரிந்து வாழ்ந்தால்
வாழ்க்கையையும் 
நாம் சிறப்பாக வாழலாம்



34. இயற்கையை அழித்து விட்டு 
நாம் இந்த மண்ணை 
நரகமாக மாற்றுகிறோம்



35. எத்தனை யுகம் கடந்தாலும்
இறைவனின் அற்புதமான படைப்பு 
இயற்கை அழகு தான்



36. பூமி குளிர பயிர்கள் வளர
உலக மனிதர்கள் வாழ
மழையும் பொழிகிறது



37. உதிர்ந்து போக தான் 
போகிறோம் என்று தெரிந்தும்
காலையில் அழகிய 
சிரிப்புடன் மலர்கிறது மலர்கள்



38. இயற்கையில் 
ஒவ்வொரு விஷயத்திற்கும் 
ஒரு தனி சிறப்பு இருக்கிறது



39. அழகான இயற்கையை
நாளும் நாம் பாதுகாப்போம்
இயற்கையை அழிக்கும்
செயல்களைத் தவிர்ப்போம்



40. வளைந்து ஓடும் ஆற்றில்
நான் ஆனந்தமாக குளித்த 
அழகிய காலங்கள் அன்று



41. மனிதர்களின் மனசு 
மாறுவது போல் 
இயற்கையும் 
மாறிக்கொண்டே இருக்கிறது



42. நம் முன்னோர்கள் 
நமக்கு கொடுத்த 
மிகப்பெரிய பரிசு தான் 
இந்த இயற்கை
அதனை நன்கு பாதுகாத்து 
அடுத்த தலைமுறைக்கு 
நாம் விட்டு செல்வோம்



43. வீழ்ந்தாலும் மீண்டும் 
எழுந்து மரங்களாக 
உயர்ந்து காட்டுகிறது விதை



44. தன்னை பாதுகாப்போரை
இயற்கை என்றும்
கைவிட்டதில்லை



45. காலை முதல் மாலை வரை 
இயற்கையோடு தான் 
நாம் பயணிக்கிறோம்
ஆனால் இயற்கையைப் 
பாதுகாக்க மறுக்கிறோம்



46. நாம் இந்த மண்ணில் வாழும் வரை
இயற்க்கையைப் பராமரிக்க 
எதாவது ஒரு செயலைச் 
செய்து விட்டு போவோம்



47. இயற்கை என்பது 
அனைவருக்கும் சொந்தமே
அதனால் அதை எல்லோரும்
அன்பாக பாதுகாப்போம்

Post a Comment

0 Comments