Subscribe Us

Header Ads

Happy Mother's Day Wishes In Tamil

HAPPY MOTHER'S DAY WISHES IN TAMIL


Happy Mother's Day Wishes In Tamil



வணக்கம் நண்பர்களே, இந்த உலகில் வருடந்தோறும் அன்னையர் தினம் மிக சிறப்பாகவும்  ஆனந்தமாகவும்  கொண்டாடப்பட்டு வருகிறது . அம்மாவின் அளவற்ற அன்பையும் அவர் நமக்காக செய்த தியாகங்களையும் நினைவில் கொண்டு, நாம் அம்மாவுக்கு நன்றி கூறும் வகையாக  அன்னையர் தினத்தைக்  கொண்டாடி வருகிறோம். அன்னையர் தினத்தன்று நாம் நம் அம்மாவுக்கு நிறைய  பரிசு பொருட்களை வழங்குவோம். அதோடு, அவர்களுக்கு இனிய  அன்னையர் தினம் வாழ்த்துகளையும் தெரிவித்து நம் அம்மாவை மகிழ்ச்சி படுத்துவோம். நீங்களும் உங்கள் அன்புள்ள அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களைக் கூற தமிழில் எழுதிய Happy Mother's Day Wishes-யை பதிவிட்டுள்ளோம்.



Happy Mother's Day Wishes In Tamil


1. பத்து மாதம் என்னை 
வயிற்றில் சுமந்து
பத்திரமாய் என்னை
இரவும் பகலும் அரவணைத்த
என் அம்மாக்கு என்னுடைய 
அன்னையர் தின வாழ்த்துக்கள்



2. தாலாட்டு பாடி
தலையணையாய் 
உன் மடி தந்து
அரவணைப்பும் 
ஆதரவும் கொடுத்து
அன்போடு என்னை வளர்த்த
என் அன்பு அம்மாக்கு 
என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்



3. உணவை மெல்ல ஊட்டி
நல்ல தாலாட்டு பாடி 
என்னோடு சேர்ந்து விளையாடி 
என் சோகத்தில் பங்கெடுத்து
என்னை வாழ்க்கையில் 
முன்னேற வைத்து
என் வெற்றிகளைக்
கண்டு மகிழ்ந்து
ஒரு போதும் மனம் தளராமல்
ஓய்வின்றி எனக்காக உழைக்கும்
என் அன்னைக்கு 
அன்னையர் தின வாழ்த்துக்கள்



4. உன் கருவறையில் என் வாழ்க்கை 
பயணம் தொடர
உன் அன்பால் என் 
முகம் மலர
உன் தாலாட்டால் என் கண்கள்
உறங்கியது
உன் தியாகத்தால் என் இலட்சியம் 
நிறைவேறியது
உன் உழைப்பால் என் கனவுகள்
உண்மையானது
உன் உறவால் வாழ்க்கை
அழகானது
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



5. அம்மாவின் ஆசிர்வாதத்தால் 
வாழ்க்கையில் ஆனந்தம் கூடலாம்
அம்மாவின் ஆதரவால் 
அகிலத்தையும் வென்று விடலாம்
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்



6. உலகில் ஆயிரம்
உறவுகள் இருந்தாலும்
அம்மாவை போல் இங்கு 
யாரும் இல்லை
அம்மாவின் அன்புக்கு 
ஈடுயில்லை
அம்மாவின் பாச முத்தத்தை விட 
விலையுயர்ந்தது எதுவுமில்லை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



7. நம்மை உலகுக்கு கொண்டு 
வந்த தேவதையாய்
இந்த உலகில் நம் கண் முன் 
வாழும் தெய்வமாய்
என்றும் நம்மை நேசிக்கும்
அன்பின் உருவமாக இருக்கும் 
அம்மாவுக்கு என்னுடைய 
அன்னையர் தின வாழ்த்துக்கள்



8. அம்மாவின் பாசத்தைப் 
போற்றுவோம்
அம்மாவின் சொற்களை 
மதிப்போம்
அம்மாவின் அறிவுரையை
க் 
கேட்போம்
அம்மாவின் தியாகத்தை
உணருவோம்
அம்மாவிடம் அன்பாய் 
பேசுவோம்
அம்மாவை என்றும் 
பாசத்துடன் பாதுகாப்போம்
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



9. நம் இன்பத்தில் நம்முடன் 
ஆயிரம் உறவுகள் இருக்கலாம்
நம்முடைய துன்பத்தில் நமக்கு
ஆறுதலாய் என்றும்
நம் பக்கத்தில் இருப்பவர்
அம்மா மட்டும் தான்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



10. உலகமே உன்னை எதிர்த்து
உன் மனம் உடைந்து போய்
நீ சோகத்தில் இருக்கும் தருணத்தில்
உன் பக்கம் நின்று
உன்னால் முடியும் என்று கூறி
உன் வெற்றிக்கு காரணமாக இருக்கும்
உன் அம்மாவை என்றும் நீ மறவாதே
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



11. நான் என்ன தவறு செய்தாலும்
என்னை வெறுக்காமல்
என்னை விட்டு விலகாமல்
மேலும் என் மேல்
அன்பு வைத்து
என் அருகில் இருந்து
ஒவ்வொரு நிமிடமும்
என்னை நேசிக்கும்
என் அன்னைக்கு 
அன்னையர் தின வாழ்த்துக்கள்



12. கருவறையில் நான் 
உருவான நாள் முதல்
இந்த காலம் வரை
உன் கண் இமைகளில் என்னை 
வைத்து பாதுகாக்கிறாய்
உன் சக்திக்கு மீறி 
எனக்காக உழைத்து
என்னை வாழ வைக்கிறாய்
இந்த உலகில் உனக்கு நிகராக 
யாரும் இல்லை அம்மா
என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்



13. கருவறையில் இருந்த 
என்னை சுமையாய்
நினைக்காமல் 
சுகமாய் எண்ணினாள்
குறும்புகள் நான் செய்த போதிலும் 
என் கோபம் கொள்ளாமல் 
என்னை கொஞ்சி
என் சிரிப்பை ரசித்தாள்
இனி எத்தனை பிறவி எடுத்தாலும் 
அத்தனையிலும் என்றும் உன் 
பிள்ளையாய் பிறக்க வேண்டும்
என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்



14. அன்பு கலந்து 
உணவை சமைத்து
அன்போடு உணவை 
பரிமாறும் பாசம்
அம்மாவிடம் மட்டுமே உண்டு
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



15. என்னை இந்த உலகுக்கு 
அறிமுகம் செய்து
அனுதினமும் 
அக்கறையாய் பாதுகாத்து
என்னக்காகவே வாழ்ந்து 
உன் வாழ்க்கையைத் 
தியாகம் செய்து
எனது ஆசையை எல்லாம் நிறைவேற்றி 
என்னை ஆனந்தமாய் வளர்த்த 
என் தாயின்
அன்பிற்கு ஈடாக 
நான் என்ன செய்வேனோ 
உன் பிள்ளையாய் பிறந்ததற்கு
என்ன புண்ணியம் செய்தேனோ
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



16. உன் மடியில் 
தூங்கிய போது 
கண்ணீரின்றி நான் தூங்கினேன் 
உன் கைகளைப் பிடித்து 
நடந்த போது 
அச்சமின்றி நான் நடேந்தேன் 
உன் அருகில் 
வாழ்ந்த போது 
வாழ்வில் துன்பமின்றி நான் இருந்தேன் 
என் அன்பு அம்மாவுக்கு 
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



17. என் முகம் தெரியாமலே 
என் மேல் பாசம் வைத்து
நான் அழுத போது
என்னை அரவணைத்து
என் பிள்ளை தான் எனக்கு உலகம் 
என்று ஆனந்தத்தோடு சொல்லி
அளவில்லா அன்பை 
என் மீது காட்டினாள் 
என் அன்பு அம்மா
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



18. உலகுக்கு நீ வரும் முன்னே 
உனக்காக வாழ்ந்தவள்
உன்னை விட உன் மேல் 
அக்கறை கொண்டவள்
உனக்கு ஒன்று என்றால்
துடித்து போய் அழுபவள் 
அம்மா என்ற அன்பின் வடிவமே
நம்மை பெற்றெடுத்த தெய்வமே
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



19. தன்னுடைய 
உடல் ஆரோக்கியத்தை நினைக்காமல்
ஒவ்வொரு பொழுதும் தன் 
குடும்பத்தைப் பற்றி நினைக்கும் அம்மாவுக்கு
தான் தியாகம்  
செய்த 
ஆசைகளை எண்ணி வருந்தாமல்
மற்றவர்களின் எல்லா ஆசைகளையும் 
நிறைவேற்றும் அம்மாவுக்கு
எத்தனை நன்றிகள் 
கூறினாலும் பற்றாது
கடைசி வரை 
அவர் கண் கலங்காமல்
மனம் நோகாமல் 
பாசத்துடன் பார்த்து கொள்வோம்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



20. நம் முகத்தில் புன்னகையை 
கூட்டுபவள் அம்மா
நம் கண்களின் கண்ணீரை 
துடைப்பவள் அம்மா
மடியில் சாய்த்து தாலாட்டு
பாடும்  அன்னையாய்
அருகில் அமர்ந்து படங்களைப் 
போதிக்கும் குருவாய்
தோளில் சாய்த்து ஆதரவு 
சொல்லும் நண்பனாய்
கன்னத்தில் முத்தமிட்டு ஆசிர்வாதம் 
செய்யும் இறைவனாய்
நமக்காக எல்லாவற்றையும் செய்து 
நம்மை மகிழ்ச்சி செய்கிறாள் அம்மா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



21. உனக்கு என்றும் நல்லதை 
மட்டும் செய்து 
நீ எப்போதும் நலமாய் 
வாழ வேண்டும் 
என நினைக்கும் 
ஒரே உறவு இவ்வுலகில்
உன் தாய் மட்டுமே
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



22. தான் உறங்காமல் 
இரவெல்லாம் கண் விழித்து
நமக்கு தாலாட்டு பாடி
தான் உண்ணாமல்
எப்பொழுதும் நமக்கும் சோறு ஊட்டி
தனக்கு பிடித்ததை வாங்காமல்
நமக்கு பிடித்ததை எல்லாம் 
ஆசையாய் வாங்கி கொடுத்து
தன் உடல் சோர்ந்தாலும்
நமக்கு என்றும் 
உறுதுணையாக இருந்து
நம்மை மகிழ்ச்சியாக
வாழ வைக்கிறாள் தாய்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்



23. நீ என்னை கோபமாக 
திட்டும் போது கூட 
நான் உன் கோபத்தை 
ரசிப்பேன் அம்மா
நீ என்னுடன் பேசாமல் 
இருக்கும் நேரத்தில் 
மனதின் வலிகளை 
உணர்கிறேன் அம்மா
என் அன்பு அம்மாவுக்கு 
என் இனிய அன்னையர் தின 
வாழ்த்துக்கள்



24. தன் வலியைப் பொறுத்து 
நீ என்னை பெற்றாய்
ஆனால் எனக்கொரு 
வலியென்றால் 
உன்னால் தாங்கி கொள்ள 
முடியவில்லை
என் இனிய அன்னையர் தின 
வாழ்த்துக்கள்



25. தெய்வத்தைக் காண கோவிலுக்கு 
செல்ல தேவையில்லை
ஒவ்வொரு வீட்டிலும் 
தெய்வம் இருக்கிறது 
அன்னையின் உருவில்
என் இனிய அன்னையர் தின 
வாழ்த்துக்கள்



26. கருவறையில் நான் கேட்ட 
முதல் இசை 
என் அம்மாவின் இதய துடிப்பு
ஆனால் அது துடிப்பதே 
எனக்காக தான் என்று 
அப்போது எனக்கு புரியவில்லை
என் இனிய அன்னையர் தின 
வாழ்த்துக்கள்



27. எனது ஒவ்வொரு தோல்வியிலும் 
என் மனம் 
உடைந்து போகாமல் இருக்க 
எனக்கு ஆறுதல் கூறும் 
என் அம்மாவுக்கு 
கோடி நன்றிகள் 
கூறினாலும் போதாது
என் இனிய அன்னையர் தின 
வாழ்த்துக்கள் 


Post a Comment

0 Comments