Subscribe Us

Header Ads

Happy Deepavali Wishes In Tamil

HAPPY DEEPAVALI WISHES IN TAMIL






வணக்கம் நண்பர்களே,உலகில் மிக சிறப்பாய் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். நாம்  அணைவரும்  தீபாவளி பாண்டிகையின் போது  புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து, பிறகு வீட்டில் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். நாம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறி அவர்களை வீட்டிற்க்கு அழைத்து விருந்து உபசரித்து மகிழ்ச்சியாக இருப்போம். நீங்கள் இந்த இனிய நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைக் கூற தமிழில் எழுதிய Happy Deepavali Wishes-யை கொடுத்துள்ளோம். 



Happy Deepavali Wishes In Tamil


1. அழகிய புத்தாடை அணிந்து
மகிழ்ச்சி எங்கும் நிறைந்து
இந்த நல்ல நாளில்
துன்பங்கள் நீங்கட்டும்
இன்பங்கள் பெருகட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



2. வண்ண கோலங்களை
வாசலிலிட்டு
நல்ல எண்ணங்களை 
மனதில் நட்டு
மகிழ்ச்சி பொங்கும் மங்கள நாளில்
உங்கள் உள்ளம் எங்கும்
சந்தோசம் நிறைய
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



3. தீபங்கள் ஏற்றி
இறைவனை போற்றி
புத்தாடை அணிந்து
இன்பங்கள் நிறைந்து
அறுசுவை உண்டு
ஆனந்தம் கண்டு
மத்தாப்பு விளையாடி
உறவுகளோடு உரையாடி
ஊரெங்கும் மங்கள
ஒளி சூழ
உங்கள் உள்ளத்தில் 
சந்தோங்கள் சேர
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



4. தீப ஒளியால்
துன்பங்கள் விலக
இறைவன் அருளால்
இன்பங்கள் பிறக்க
வாசலில் வண்ண கோலங்களோடு
ஊரெங்கும் வானவெடியோடு
இல்லம் அகங்காரத்தோடு
எல்லோரும் அழகோடு
முகத்தில் புன்னகைகள் 
நிறைய மலர்ந்து
அகத்தில் அன்பு
மேலும் வளர்ந்து
சிறப்பாய் சிரிப்புடன் 
கொண்டாடுவோம் இந்நாளை
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



5. தீப ஒளியில்
வீடெங்கும் வெளிச்சம் சூழ
சிரிப்பு ஒலியில்
மனதெங்கும் மகிழ்ச்சி வாழ
சொந்தங்கள் இணைய
ஆனந்தம் நிறைய
இந்த தீப திருநாள்
தித்திக்கும் பெருநாளாய்
அமைய என் இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



6. அழகிய புத்தாடையோடு
அறுசுவை உணவோடு
இனிப்பு பலகாரத்தோடு
இல்லம் தீபஒளியோடு
உற்றார் உறவினர்களோடு
உள்ளம் நிம்மதியோடு
மத்தாப்பு வெளிச்சத்தோடு
மனமெங்கும் மகிழ்ச்சியோடு
பிறந்திருக்கும் இந்த இனிய நாளில்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் 
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



7. உள்ளம் மகிழ்ந்திட
உறவுகள் இணைந்திட
அச்சம் எல்லாம் விலகிட
வெளிச்சம் எங்கும் நிறைந்திட
இனிய திருநாளில்
இன்பங்கள் வரும்நாளில்
எல்லோருக்கும் 
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



8. தீமைகள் விலகி
நன்மைகள் வந்து
உடல் நலமாய்
உள்ளம் தெளிவாய்
எல்லாம் வளமாய்
எப்போதும் மகிழ்வாய்
வாழ்ந்திட 
என் உள்ளம் கனிந்த  
தீபாவளி வாழ்த்துக்கள்



9. மங்கள ஒளியில்
உங்கள் வாழ்வின் 
துன்பங்கள் எல்லாம் மறைந்து
இன்று போல் என்றும் நீங்கள்
நலமாய் வளமாய் வாழ 
என்னுடைய மனமார்ந்த 
தீபாவளி  வாழ்த்துக்கள்



10. இனிய திருநாளில்
நம்முடைய எல்லா ஆசைகளும்
இறைவனின் ஆசியோடு
நிறை வேற வேண்டும்
என இறைவனை பிரார்த்திப்போம்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள் 



11. அதிகாலையில் எண்ணெய் 
தேய்த்து குளித்து
அழகிய புத்தாடை உடுத்தி
பெரியோர்களின் 
ஆசிர்வாதம் பெற்று
பிரார்த்தனை செய்ய 
கோவிலுக்குச் சென்று
இனிப்பு பலங்காரத்தை சாப்பிட்டு
பட்டாசு சத்தம் கேட்டு
உறவுகள் ஒன்று கூடி
எல்லோரும் ஆடி பாடி
ஆனந்தமாய் கொண்டாடும்
இனிய நாளாய்
இந்நாள் அமைந்திட
என்னுடைய இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



12. முகத்தில் புன்னகைகள் மலர
அகத்தில் அன்பு வளர
அனைவரும் மகிழ்த்திடும் நாளாய்
அமைதி பிறந்திடும் புதிய நாளாய்
இந்த தீபாவளி அமைந்திட
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



13. உங்கள் வாழ்வில்
இருள் நீங்கி ஒளி வீச
கனவுகளும் ஆசைகளும்
நிறை வேற
இனிய தீபாவளியில்
உங்கள் வாழ்க்கை மேலும் 
அழகாக என்னுடைய 
தீபாவளி வாழ்த்துக்கள்



14. உங்கள்
அன்பு
உள்ளங்களிலும்
இன்ப
இல்லங்களிலும்
தீப ஒளியால் 
தீமைகள் விலகட்டும்
இறைவன் அருளால்
நன்மைகள் நிறையட்டும்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



15. வண்ண வண்ண விளக்கேற்றி
இன்னல்களின் இருளை விலக்கி
இறைவனின் அருளை சேர்த்து
உறவுகளின் அன்பை கோர்த்து
உள்ளத்தின் உல்லாசத்தில் மகிழ்ந்து
இனிய தீப திருநாளை ஆனந்தமாக
வருக வருகவென வரவேற்றபோம்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 



16. தீபங்களின் ஒளியில்
பட்டாசுகளின் ஒலியில்
மத்தாப்புகளின் சிரிப்பில்
இனிப்புகளைப் பரிமாறி
இனிய வாழ்த்துக்களைக் கூறி
தித்திக்கும் தீபாவளியை
அனைவரும் ஆனந்தமாய் 
கொண்டாட என் இனிய 
தீபாவளி வாழ்த்துக்கள்



17. இல்லம் விளக்கு போல் ஜொலிக்க
உள்ளம் மத்தாப்பு போல் இருக்க
உங்கள் வாழ்க்கையில்
அன்பு ஒளி வீசட்டும்
சிரிப்பு ஒலி கூடட்டும்
இனி வரும் எந்நாளும்
இந்த மங்கள நாள் போல்
இருக்க என் மனமார்ந்த 
தீபாவளி வாழ்த்துக்கள்



18. புத்தாடை போல் புதுமையாய்
இனிப்பு போல் இனிமையாய்
என்றும் உங்கள்
வாழ்விலும் உள்ளத்திலும் 
மகிழ்ச்சி நிரம்ப
உங்கள் இல்லத்தில் 
இன்பம் பொங்க
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



19. தீபங்களால் ஊரெங்கும் ஜொலிக்க
நம் துன்பங்களும் விலக
பட்டாசு சத்தம் ஒலிக்க
நம் கஷ்டங்களும் நீங்க
மலர்ந்திருக்கும் மங்கள நாள்
தித்திக்கும் திருநாள்
இந்த இனிய தீபாவளி
அனைவரும் கொண்டாடும் 
ஆனந்த பெருநாள்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



20. நல்ல எண்ணங்களோடும்
நல்ல சிந்தனைகளோடும்
நல்ல உறவுகளோடும்
பிறந்திருக்கும் இந்த நன்னாள்
உங்கள் வாழ்க்கையில்
நன்மைகளளைச் சேர்க்கும்
இன்ப நாளாய்
இனிய நாளாய் 
அமைய என்இனிய 
தீபாவளி வாழ்த்துக்கள்



21. தீபாவளி பிறந்தது
தீமையும் ஒழிந்தது
நாளும் வண்ணமாகியது
நன்மையையும் வந்து சேர்ந்தது
பட்டாசு பறந்தது
பாசமும் நிறைந்தது
இன்னல்கள் குறைந்தது
இன்பங்கள் நிறைந்தது
எல்லோரும் 
சுகமாய் மகிழ்வாய் ஒன்றாய்
கொண்டாட என் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்



22. எங்கும் தீபங்கள் ஏற்ற 
உங்கள் வாழ்க்கை 
வளங்கள் உயர
இந்நாளில் 
புதுமைகள் சேர
உங்களின் புது 
முயற்சிகள் தொடர
என் இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



23. பட்டாசு சத்தத்தில்
மனதில் இருக்கும் 
சோகங்களும் மறையட்டும்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



24. அன்பு உள்ளங்கள்
உங்களை மனதார 
வாழ்த்தட்டும்
உங்களது ஆசை கனவுகள் 
எல்லாம் நிறைவேறட்டும்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



25. துன்பங்கள் கரைந்து போக
இன்பங்கள் மலர்ந்து பெருக
தீபாவளி திருநாள்
தீமைகளைப் புதைத்து 
நன்மைகளைச் சேர்க்கும் 
இனிய நாளாக அமையட்டும்
அமைதி எங்கும் நிலைக்கட்டும்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



26. தீப ஒளியில் 
தீபாவளியும் பிறக்க
மகிழ்ச்சி மழையில் 
மனமும் நனைய
இந்நாளை சிறப்பாக 
கொண்டாடுவோம்
ஒன்றாக கூடி வாழ்வோம்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



27. தீப ஒளியால் 
உங்கள் வாழ்க்கையில் 
உள்ள தீமைகள் விலகி
புதுமைகளும் நன்மைகளும் 
நிறையட்டும்
இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்



28. நட்பின் அர்த்தத்தை 
உணர்த்திய என் 
நண்பர்களுக்கு
என் இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



29. உறவின் அளவற்ற அன்பை
எனக்கு கொடுத்த 
என் அன்பு உறவினர்களுக்கு 
என் இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



30. செல்வ செழிப்புடன்
மன மகிழ்ச்சியுடன்
இனி உங்கள் வாழ்க்கையில்
புது நல்ல நிகழ்வுகள்
நிகழட்டும்
என் இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



31. தீபங்கள் ஏற்றி 
தீபாவளியை வரவேற்போம்
மகிழ்ச்சியையும் 
சந்தோஷங்களையும் 
இந்நாள் நமக்கு வழங்கட்டும்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்



32. தீப ஒளியால் 
தீய எண்ணங்கள் 
மனதை விட்டு விலகி 
நல்ல எண்ணங்கள் 
தீப ஒளியைப் போல் 
மனமெங்கும் 
பிரகாசிக்கட்டும்
இனிய தீபாவளி 
நல்வாழ்த்துக்கள்


Post a Comment

1 Comments