Subscribe Us

Header Ads

Lonely Quotes In Tamil

LONELY QUOTES IN TAMIL



Lonely Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே.நாம் சில சமயங்களில் தனிமையில் இருப்பதை விரும்புவோம்.நாம் அனைவரும் தனிமையில் இருக்கும் போது தான் நம் மனதோடு பேசி  கொள்கிறோம். சிலருக்கு தனிமையில் இருப்பது கஷ்டமாக இருக்கும். யாருமில்லை என உணருவார்கள். நீங்கள் தனிமையை விரும்புவரா இல்லை வெறுப்பவரா? இந்த பதிவில் உங்களுக்காக தமிழில் எழுதிய Lonely Quotes-யை  கொடுத்துள்ளோம். 



Lonely Quotes In Tamil



1. உன் உதடுகள் சொல்லும்
உணர்வுகள் சிலருக்கு புலம்பல்
உன் கரங்கள் எழுதும் கவிதைகள் 
பலருக்கு புத்துணர்ச்சி
உன் கண்கள் சிந்தும் 
கண்ணீர் சிலருக்கு சிரிப்பு
உன் இதயம் இயற்றும் கவிதைகள் 
பலருக்கு சிந்தனைகள்



2. இதழ்களின் உள்ள புன்னகைகளைக் 
காணும் பல கண்கள்
இதயத்தின் உள்ள புண்களைக் 
காணும் சில உயிர்கள்



3. நம் உணர்வின் பாடல்களில்
நம் உள்ளத்தின் தேடல்களில்
நாம் உறைந்து உறங்குவோம்



4. முதலில் தனிமையில் இருப்பது 
நமக்கு வலி தான்
என்று அழுவோம்
முடிவில் தனிமையில் இருப்பதே 
நம்முடைய வலிமை தான் 
என்று அறிவோம்



5. என் கவலைகள் எல்லாம்
கரங்களில் கதையாகிறது
என் எண்ணங்கள் எல்லாம்
எழுத்துகளில் உறவாடுகிறது
என் வருத்தங்கள் எல்லாம்
வரிகளில் வருந்துகிறது
என் கண்ணீர் எல்லாம்
கவிதையில் கலங்குகிறது



6. தனிமையான தருணத்தில்
எண்ணங்களின் உணர்வில்
எழுத்துக்களின் வடிவில்
பிறந்த ஒரு பிறப்பு
கவிதை



7. பாடல்களும் நினைவுகளும் 
தனிமையை இனிமையாக்கிறது



8. தனிமையும் ஒரு தாய்மடி தான்
நம் துயரத்தில் அ
ணைக்கிறது
நம் துன்பத்தில் ஆறுதலாகிறது



9. வாழ்க்கையை 
கடந்து வாழ முடியும்
காயங்களை 
மறைத்து வாழ முடியாது



10. இருளின் மௌனத்தில் 
நிலா அங்கு வானில்
இதயம் உரையாடலில் 
நானும் இங்கு கண்ணீரில்



11. என் கண்களும் கவிதை
எழுதுகிறது கண்ணீரில்



12. பொய்யாய் என்
உதடுகள் சிரிக்கிறது
மெய்யாய் என்
உள்ளம் அழுகிறது



13. நான் வார்த்தைகளால் 
பேசுவதை விட
என் மௌனத்தினால் 
பேசுகிறேன்



14. மௌனத்தின் மொழியில்
பேசிகொள்கிறார்கள்
உள்ளம் ஊமையான போது



15. இதயம் துன்பத்திலும்
துயரத்திலும் இருந்த போது
கண்ணீர் மட்டுமே தோ
ள் கொடுக்கும் 
நண்பனை போல் ஆறுதல் சொல்கிறது



16. என்னுள் இருக்கும் சந்தோசத்தை 
உலகெங்கும் தேடி கிடைக்கவில்லை 
எ ன்னுள் இருக்கும் சோகத்தை
உலகுக்கு கூறி புரியவில்லை



17. தொடக்கமும் முடிவும்
உறவுக்கு ஒன்றும் புதுசல்ல
வலிகளும் காயங்களும்
இதயத்துக்கு ஒன்றும்
பெரிதல்ல



18. தனிமை என்பது
மிகவும் வித்தியாசமானதே
தனிமையை 
நீயாக விருப்பமாக  
ஏற்று கொண்டால்
அது இன்பமாகும்  
அதனை பிறர் நமக்கு  தந்தால் 
அது துன்பமாகும் 



19. எந்த உறவாலும் 
கொடுக்க முடியாத 
ஆறுதலை தனிமை கொடுக்கிறது



20. நம்முடைய 
மன வேதனைகளும்
மன குழப்பங்களும் 
தீரும் வரை 
நாம் தனிமையில் இருக்கலாம்



21. தனிமையில் 
இருக்கும் போது தான் 
உன் வாழ்க்கையில் 
என்ன நடக்கிறது 
என்பதை நீ உணர்வாய்
உன் வாழ்க்கையை 
நீ சரியாக மாற்ற வேண்டும் 
என்று யோசிப்பாய்



22. தனிமையில் இருப்பது தவறில்லை
ஆனால் தனிமையில் 
தவறாக யோசித்து 
தவறான முடிவுகளை
எடுப்பது தான் ஆபத்து



23. தனியாக இருப்பவர்கள்
எல்லாம் தனிமையில் 
இருப்பவர்கள் அல்ல
தனிமையிலும் உள்ளத்தில் 
இருக்கும் உறவுகளோடு
உரையாடி கொண்டிருப்பார்கள்
இவர்கள் 
நினைவில்
இருக்கும் நினைவுகளோடு
நிம்மதியாய் வாழ்வார்கள்



24. உன் நினைவுகள் 
எனக்கு துணியாக இருக்க 
நான் தனிமையிலும்
மகிழ்ச்சியாக வாழ்கிறேன் 



25. மனம் விட்டு பேச 
எனக்கு யாருமில்லை
நான் தனிமையின் மடியில்
தலை சாய்த்தேன் 



26. புது எண்ணங்களோடும்
இனிய பாடல்களோடும்
என் தனிமை கூட 
இப்போது இனிமையாகிறது
என் கண் 
இமைகளும் 
மெல்ல  மூடியது



27. எல்லோரையும் 
நான் சிரிக்க வைக்கிறேன்
ஆனால் என் தனிமையில் 
நான் அழுகிறேன்



28. நம் உதடுகள் புன்னகை 
என்னும் பொய்யை 
அணிந்து கொள்கிறது
நம் உள்ளம் உணர்வுகள் 
என்னும்  உண்மையை
மறைத்து வைக்கிறது
நம் கண்கள் 
இதற்கு இடையில்
உள்ள காரணங்களைத் 
தேடி அலைந்து போகிறது



29. உண்மை தெரிந்த
இதயம் ஊமையாகிறது
பொய்கள் அறிந்த கண்கள்
கலங்குகிறது



30. என் இதயத்தின் கவலை எல்லாம்
இனிமையான கவிதையாய்
மாற்றும் கலையை 
என் கரங்களும் கண்ணீரும்
கற்றுக்கொண்டது



31. என் இதயம் சொல்வதை 
எல்லாம் நான் ஏற்று கொள்கிறேன்
நான் சொல்வதை ஏனோ
ஏற்க மறுகின்றது என் இதயம்



32. சிரிப்பை உதட்டில் வைத்து
சிரமங்களை உள்ளத்தில் வைத்து
சிறைக்குள் வாழும் உலகம் இது



33. என் மனதில் 
பல சோகங்கள் தோன்றும் 
நேரமெல்லாம்
நான் தனிமையில் 
இருக்க விரும்புவேன்



34. பல வருடங்களாக  
நான் தனிமையில் வாழ்ந்தேன்
என் கடந்த காலத்தின்
துயரங்களை மறந்தேன்
நான் என்னை 
நேசித்திட பழகினேன்
என் வாழ்கையைப் 
புதிதாய் வாழ தொடங்கினேன்



35. தனிமையை
நீ சரியாக பயன்படுத்தி கொண்டால் 
நீ யார் என்று அது 
உனக்கு புரிய வைக்கும்
நீ தவறாக பயன்படுத்தி கொண்டால் 
நீ யார் என்பதை அது 
உன்னை மறந்திட செய்யும்



36. தனிமையில் இருக்கிறோம் 
என்று கவலை கொள்ளாதீர்கள்
இந்த பிரபஞ்சமே 
உங்கள் உள்ளே இருக்கிறது 
என்பதை  மறவாதீர்கள் 



37. மற்ற உறவுகளோடு 
போலியாக வாழ்வதை விட
நேர்மையாக தனியாக 
வாழ்வது சிறந்தது



38. தனிமையில் இருந்தால் தான் 
நம்மை பற்றி நமக்கு தெரியாத 
பல விஷயங்களை நாம் 
உணர்ந்து கொள்ள முடியும்



39. நமக்கு எப்போதும் 
உற்ற நண்பனாக இருப்பது 
நம்முடைய தனிமையே



40. வாழ்க்கையில் 
தனியாக வாழ்வது கூட 
ஒரு துணிச்சலான செயலே



41. நம்மை உதாசீனம் படுத்தி 
தாழ்வாக நினைக்கும் 
உறவுகளோடு 
வாழ்வதை காட்டிலும் 
தனியாக இருப்பதே சிறந்தது



42. தனிமையில் 
இருக்கும் போது தான் 
நல்ல சிந்தனைகள் பிறக்கிறது 
மன நிம்மதி கிடைக்கிறது



43. தனியாக வாழ பழகி விட்டால் 
வாழ்க்கையில் 
எந்த துன்பத்தைச் 
சந்தித்தாலும் 
நம் மனம் எளிதில் 
உடைந்து போகாது



44. தினமும் சிறிது நேரம் 
நாம் தனிமையில் இருப்பது 
நம்முடைய மன நலத்திற்கு 
நல்லது



45. தனிமையில் இருந்தாலும் 
சிலர் மகிழ்ச்சியாக தான் 
வாழ்கிறார்கள் 
பல உறவுகளோடு வாழ்ந்தாலும் 
சிலர் துயரங்களோடு தான் 
வாழ்கிறார்கள் 



46. கண்ணீரும் தனிமையும் 
கொடுக்கும் ஆறுதல் போல 
வேறு யார் கொடுத்தாலும் 
நம் மனம் ஏற்க்காது



47. எல்லோரும் விட்டு 
சென்ற பின்பு 
உனக்காக என்றும் 
நான் இருக்கிறேன் என்று 
நம்மை அரவணைக்கும் 
தாய்மடி தான் தனிமை



48. நாம் தனிமையை முறையாக 
பயன்படுத்தி கொண்டால் 
அது நம்மை 
புதிய மனிதராய் மாற்றும் 
நம் வாழ்க்கையை 
அடுத்த கட்டத்திற்க்கு 
நகர்த்த உதவும்



49. நான் மறக்க நினைக்கும்
நினைவுகளை மீண்டும் 
என் மனதில் 
தோன்ற வைக்கிறது 
என்னுடைய தனிமை



50. தனியாக இருக்க 
எனக்கு பயமில்லை 
ஆனால் தனிமையில் 
இருக்கும் போது 
நான் கண்ணீர் சிந்துவதை 
என்னால் நிறுத்த 
முடியவில்லை



51. என்னுடைய தனிமையில் 
நான் என்னை விட்டு சென்ற 
உறவுகளை 
நினைத்து பார்க்கும் போது 
என் விழிகளில் ஓரம் 
கண்ணீர் மழை பொழிகிறது



52. காரணம் தெரியாமலே 
கலங்கி நிற்கிறேன் 
இந்த தனிமையில்
காலம் என் காயங்களை ஆற்றும் 
என்ற நம்பிக்கையில் 
தனியாக வாழ 
நான் கற்று கொள்கிறேன்



53. என் மனதின் சோகங்களைக் 
கொஞ்ச நேரம்
மறப்பதற்காக 
நான் தனிமையைத் 
தேடி போகிறேன்



54. தனியாக இருப்பது 
எனக்கு ஒன்றும் புதிதல்ல
இது வரை 
ஒவ்வொரு உறவின்
பிரிதலுக்கு பிறகு 
எனக்கு ஆறுதல் கூறி எ
ன்னை உற்சாக படுத்தியது 
என் தனிமை தான்



55. எனக்கு ஆறுதல் சொல்ல 
யாரும்  இல்லாதலால்
எனக்கு நானே 
ஆறுதல் சொல்லி கொள்கிறேன்

Post a Comment

0 Comments