Subscribe Us

Header Ads

Friendship Quotes In Tamil

FRIENDSHIP QUOTES IN TAMIL


Friendship Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நம் வாழ்க்கையில் இருக்கின்ற  முக்கியமான  உறவுகளில் நட்பு என்ற அற்புத உறவும் அதில்  ஒன்றாகும் . நல்ல நண்பர்கள் நம் பக்கத்தில் இருந்தால் நாம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் எளிதாக சாதித்து விடலாம். இனம்,மதம்,சாதி வேறுபாடுன்றி பலரும் இவ்வுலகில் நண்பர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்பதைப்  பார்க்கும் போது நாம் நட்பின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது .நட்பு என்பது நம் வாழ்க்கையில் கிடைத்த இனிதான வரம்.உங்களின் நட்பும் தொடர்ந்து வளர இந்த பதிவில்  தமிழில் எழுதிய Friendship Quotes-யை பதிவிட்டுள்ளோம் 




Friendship Quotes In Tamil


1. அறிமுகம் இல்லாத என்னை
நன்கு அறிந்து கொண்டு
அரவணைத்து ஆறுதலாய்
இருந்த என் நண்பன் நீயடா



2. நட்பு என்ற உறவால்
என் திறமையை எனக்கு 
அறிய வைத்து 
உலகுக்கு என் அருமையைப் 
புரிய வைத்த 
என் நண்பன் நீயடா



3. ஆயிரம் நண்பர்களை 
வாழ்க்கையில் சம்பாதிப்பது 
முக்கியம் அல்ல
உண்மையான ஒரு நண்பன்
வாழ்க்கை முழுவதும்
உன்னுடன் நிற்பதே முக்கியம்



4. நண்பர்களின் உறவு
வாழ்க்கை முழுதும் வரும் 
தொடர்கதை போல
முடிவொன்று இல்லை
இந்த உறவுக்கு



5. வாழ்க்கையில் ஆயிரம்
நினைவுகள் இருந்தாலும்
நண்பர்களோடு இருந்த
நினைவுகள் எல்லாம் 
என்றும் மனதில் 
மலரும் இன்பங்கள்



6. நண்பனின் வெற்றியை 
தன் வெற்றியாகவும் 
நண்பனின் தோல்வியை 
தன்னுடைய தோல்வியாக நினைப்பது
நட்புக்கிடையே 
நீவேறு நான் வேறு இல்லை
என்ற ஒற்றுமையை 
உணர வைக்கிறது




7. வெற்றியில் ஆயிரம் சொந்தம் 
நம்முடன் இருக்கலாம்
தோல்வியில் இருக்கும் ஒரு உறவு
உண்மையான நண்பன் மட்டுமே



8. எவ்வளவு சண்டை 
நண்பர்களுக்குள் வரலாம்
ஆனால் அடுத்தவரிடம் தன் நண்பனை 
விட்டு கொடுக்க மாட்டார்கள்



9. நீ பேசியதை எல்லாம் 
தூக்கி போட்டு விட்டு
உன் ஆபத்தில் 
உன் அருகில் என்றும் 
நிற்பவன் உன் உண்மையான 
நண்பன் மட்டுமே



10. ஒரு கருவறையிலிருந்து 
பிறக்கவில்லை என்றாலும்
கல்லறை வரை நிலைக்கும்
சில நட்பு



11. பசியிலும் பகிர்ந்து 
சாப்பிடுவது
தூக்கத்திலும் நண்பன்
தோளில் தூங்குவது
பணமில்லாமல் 
பாசம் இருப்பது
துன்பத்திலும் 
இன்பமாய் வாழ்வது
எல்லாம் நட்பு நமக்கு 
கொடுக்கும் அழகிய தருணங்கள்



12. நீ வேறு நான் வேறு இல்லாமல் 
ஒற்றுமையாய் ஒரு அழகிய
உணர்வுக்குள் வாழ வைக்கிறாள்
நட்பு தாய்



13. தவமாய் தவமிருந்து கிடைத்த
என் நட்பு இப்போது தூரமாய்
என்னை விட்டு போகிறது
என் நெஞ்சமும் பாரமாய் அழுகிறது



14. இன்பமாய் மட்டுமே என் காலங்கள் 
எல்லாம் இருந்தது நீ என் 
அருகில் இருந்தபொழுது
துன்பமாய் மட்டுமே 
என் நிமிடங்கள் 
எல்லாம் இருக்கிறது நீ என் 
தொலைவில் இருக்கிறபொழுது



15. சொல்ல முடியாத சோகங்களைக் 
கூட உன்னை கண்டதும் 
சொல்லி விடுகிறேன்
உன் தோளில் அழுகிறேன் 
உன் மடியில் 
அன்பை உணருகிறேன்



16. நான் உதவி கேட்டும் 
உதவ மறுக்கும் 
உறவுகள் மத்தியில்
நான் உதவி 
கேட்காமல் இருந்தாலும்
தன் உயிரை கொடுத்தாவது 
உதவும் 
ஒரு உறவு நட்பு என்ற
உயர்ந்த உறவே



17. தோல்விகளும் 
உன்னை நெருங்காது
தோள் கொடுக்கும் நண்பன்
உன்னருகில் இருக்கும் வரை
எதிரிகளும் உன் எதிரில் 
நிற்க முடியாது
உயிர் கொடுக்கும் நண்பன்
உன்னோடு இருக்கும் வரை




18. எப்போதும் மறக்காமல் 
இருப்பது அல்ல நட்பு
என்ன நடந்தாலும் 
வெறுக்காமல் இருப்பது 
தான் உண்மையான நட்பு



19. நாள்தோறும் 
உன்னுடன் பேசாவிட்டாலும்
உன் ஞாபகம் இன்றி 
என் நாளும் இங்கு 
கடந்து போகாது
நம் நட்பின் உறவும் 
மறந்து போகாது



20. காலங்கள் இங்கே போகலாம்
தோற்றங்கள் இங்கே மாறலாம்
நம் நட்பின் பயணத்தில் கிடைத்த 
தருணங்கள் எல்லாம் 
மனதில் நிலைக்கும் நினைவுகள்



21. நட்பு என்ற உறவு வந்த பின் 
பல உறவுகள் 
என் வாழ்க்கையில் வந்தது 
ஆனால்
நட்பு என்ற ஒரு உறவுக்கு 
இங்கு இணை இல்லை 
எந்த உறவும்



22. நண்பனோடு பேசும் போது
கவலைகள் எல்லாம் 
மறைந்து போனது 
அகமும் அமைதியானது
மகிழ்ச்சி எல்லாம் 
மலர்ந்து போனது 
முகமும்  ஆனந்தமானது



23. காசு இல்லாமல் 
கவலை இல்லாமல் 
வாழ்ந்த காலம்
நண்பர்களோடு ஒரே தட்டில்
உணவை பகிர்ந்து
உள்ளத்தின் சோகத்தைப் 
பரிமாறிய காலம் தான்



24. கூட பிறக்கவில்லை என்றாலும்
குடும்பத்தில் ஒருவனாய் 
ஏற்று கொள்கிறான்
நட்பின் உறவால்
உள்ளத்தில் உயிராய் 
இணைத்து கொள்கிறான்



25. நல்ல நண்பர்கள் 
நம் அருகில் 
இருக்கும் போதே 
அவர்களை நன்கு 
கவனிக்க வேண்டும்
இல்லையென்றால் 
அவர்களை நாம் 
இழந்து விடுவோம்



26. உங்கள் நண்பர்களின் 
பெருமையை 
எல்லோரிடமும் பேசுங்கள் 
ஆனால் அவர்களின் குறையை 
அவர்களிடம் மட்டும் 
தனியாக அன்பாக சொல்லுங்கள்



27. துன்பத்தில் நம்முடன் 
இருப்பதும் நண்பனே
நமக்கு துன்பம் வராமல் 
நம்மை பாதுகாத்து கொள்வதும் 
நண்பனே



28. நம் வெற்றியைக்  கொண்டாட 
ஆயிரம் நண்பர்கள் வருவார்கள்
ஆனால் நம் தோல்வியில் 
கைகொடுக்க 
உண்மையான நண்பர்கள் 
மட்டுமே வருவார்கள்



29.நம் வாழ்க்கையில் 
துன்பங்களை 
யார் வேண்டுமானாலும் 
நமக்கு கொடுக்கலாம்
நல்ல நண்பர்கள் 
நமக்கு நல்ல நினைவுகளையும் 
நிறைய சந்தோஷங்களையும் 
மட்டுமே கொடுப்பார்கள்



30. பல துரோகிகள் 
நம்மை வீழ்த்தினாலும் 
நல்ல நண்பன் 
நம்மை எப்படியாவது 
உயர்த்துவான்



31. நட்பு நம் மனதில் 
ஏற்படும் பல காயங்களை 
எளிதாக குணமாக்கும்



32. நாம் செய்யும் 
தவறை நம்மிடம் சொல்லி
நாம் அதனை 
திருத்தி கொள்ள 
நமக்கு வழிகாட்டுபவன் 
நமது நண்பனே



33. நம்முடைய சோகங்களைக் கூட 
தன்னுடைய சோகங்களாக ஏற்று 
அதனை சரி செய்ய உதவும் 
நல்ல நண்பர்கள் 
நம் வாழ்க்கைக்கு 
மிகவும் முக்கியம்



34. ஆயிரம் உறவுகள் 
வாழ்க்கையில் இருந்தாலும் 
சோகத்தில் மனம் 
நண்பர்களையே தேடுகிறது



35. நண்பன் இறந்த பிறகு
நாளும் வந்து போகும் 
அவனது நினைவுகளுக்கு 
மரணமே இல்லை



36. ஒரு மனிதனிடம் 
நண்பனாக இரு
இல்லையென்றால் 
எதிரியாக இரு
ஆனால் ஒருபோதும் 
துரோகம் செய்யும் 
நண்பனாக மட்டும் 
இருக்காதே



37. நட்பு பிரிந்தாலும் 
தன் நண்பனுடைய 
ரகசியத்தைக் கடைசி வரை 
யாரிடமும் சொல்லாமல் 
பாதுகாப்பவனே 
சிறந்த நண்பன்



38. நாம் செய்யும் 
தவறை சுட்டிக்காட்டும் நண்பன் 
நாம் வாழ்க்கையில் 
நன்றாக வாழ வேண்டும் 
என்று நினைப்பான்



39. நண்பர்களோடு ஆயிரம் 
சண்டைகள் போட்டாலும் 
மனதில் துன்பம் வராது
ஆனால் நண்பர்களிடம் 
பேசவில்லை என்றால் 
மனதில் பல வலிகள் 
நிறைந்து விடும்



40. கடவுளின் உருவமாக 
நம் கைகளைப் பிடித்து 
நமக்கு துணையாக 
இருப்பவனே நண்பன்



41. பல உறவுகள் 
நம் வாழ்க்கையில் 
வந்து போனாலும்
நல்ல நட்பை 
நம் உள்ளம் 
என்றும் மறக்காது



42. நட்பு என்பது வெறும் 
உறவு மட்டும் அல்ல
அது நம் உள்ளத்தின் 
உணர்வுகளில் கலந்து 
நம் உயிரில் வாழும் 
ஒரு அற்புதமான அன்பு



43. நண்பர்களோடு 
இருந்த நினைவுகள் 
அனைத்தும் மிகவும் 
சுவாரஸ்யமாகவும் 
அழகாவும் இருக்கும்



44. நண்பனின் வெற்றியில் 
நீ அவன் அருகில் 
இருப்பதை காட்டிலும் 
அவன் தோல்வியில் 
அவன் அருகில் 
அவனுக்கு துணையாக இருப்பதே 
மிக முக்கியம்



45 உண்மையான ஒரு நண்பன் 
நம் வாழ்க்கையில் 
இருந்தால் போதும் 
உலகத்தை வென்று விடலாம்



46. எந்தவொரு எதிர்பார்ப்புகள் 
இல்லாமல் 
நட்பில் உண்மையாக 
இருந்தால் மட்டுமே 
கடைசி வரை 
அந்த நட்பு நீடிக்கும்



47. நாம் சொல்லாமலே 
நம் மௌனத்தில் 
உள்ள சோகத்தையும் 
காரணத்தையும் 
நன்கு புரிந்து கொள்பவன் 
நண்பன்



48. நண்பனுக்கு 
உதவி செய்யாவிட்டாலும் 
பரவாயில்லை 
ஆனால் அவனை 
தவறான வழிக்கு 
கொண்டு செல்லாதே



Post a Comment

1 Comments