Subscribe Us

Header Ads

Husband and Wife Quotes In Tamil

HUSBAND AND WIFE QUOTES IN TAMIL



Husband and Wife Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, கணவன் மனைவி உறவு என்பது  மிகவும் அற்புதமான உறவாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு, பாசம், புரிந்துணர்வு, அக்கறை போன்ற எல்லா நல்ல விஷயங்களும் இருந்தால், அவர்கள் வாழ்க்கையை  மகிழ்ச்சியாக வாழலாம். ஒவ்வொரு கணவன் மனைவியும் கடைசி வரை இணைந்து வாழ வேண்டும் என்றே  ஆசைப்படுகிறார்கள். ஒருவர்க்கொருவர் அன்பை வெளிப்படுத்தி,விட்டு கொடுத்து வாழ்வது சிறப்பாகும்.நீங்களும் உங்கள் கணவன் அல்லது மனைவிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த இந்த பதிவில் Husband and Wife Quotes-யை பதிவிட்டுள்ளோம்.


Husband and Wife Quotes In Tamil


1. என் வாழ்க்கையில் 
என் மனைவியாக வந்தாய்
என் மனது முழுவதும்
நீயே இருக்கிறாய்
என் வாழ்வு முடியும் வரை 
நான் உனக்காகவே 
வாழ வேண்டும்



2. சில நேரங்களில் 
தாயாகி 
என்னை அரவணைக்கிராய்
சில நேரங்களில் குழந்தையாகி
என் மடியில் தவழ்கிறாய்
பெண்ணே
உன் கணவனாக நான் வாழ 
நான் என்ன 
புண்ணியம் செய்தேனோ



3. உன்னை விட்டு 
கொடுக்கவும் மாட்டேன்
உன்னை விட்டு 
செல்லவும் மாட்டேன்
என்றும்
உன் அன்பு 
கணவனாக இருப்பேன்
உன்னால்  நான் 
அரசனாக வாழ்வேன்



4. என் பிடிவாதத்தை 
அனுரசித்து போகிறாள்
என் கோபத்தைப் 
புரிந்து கொள்கிறாள்
எல்லா சூழ்நிலையிலும் 
என்னுடனே இருக்கிறாள்
என் வாழ்க்கைக்குத்
தீப ஒளி ஏற்ற வந்த
என் மனைவி



5. உன்னை கடைசி வரை 
கண்கலங்காமல் 
பார்த்து கொள்வேன்
நீ கண் கலங்கினாலும்
அது ஆனந்த 
கண்ணீராக தான் இருக்கும்



6. உன்னையும் என்னையும் 
கணவன் மனைவியாக 
வாழ வைத்ததே நம் காதல் தான்
இறுதி வரை 
நம்முடைய  காதல் 
நம் மனதில் வாழட்டும்



7. தன் கணவனின் 
துன்பங்களையும் கஷ்டங்களையும்
புரிந்து கொண்டு
அவனுடன் சேர்ந்து 
வாழ்க்கையில் 
எல்லாவற்றையும் சமாளித்து 
சந்தோசமாக வாழும் மனைவியே
என்றும் சிறந்த மனைவியாவாள்



8. மனைவியை 
அடிமையாக நடத்தாமல் 
அவளுடைய உணர்வுகளையும் 
கனவுகளையும் புரிந்து கொண்டு 
அவளின் இலட்சியத்தை 
நிறைவேற்ற 
அவளுக்கு 
உறுதுணையாக இருக்கும்
கணவன் கிடைத்தால் 
வாழ்கை அழகாகும்



9. திருமணமான நாள் முதல்
மனைவிக்குத் தெரிந்த 
ஒரே சொந்தம் 
தன்னுடைய கணவன் மட்டுமே



10. வாழ்க்கை முழுவதும்
நீ அவளுக்காக இருப்பாய் 
என நம்பி தான்
உன் கைகளைப் பிடித்து 
உன்னுடன் வருகிறாள்
உன் மனைவி
கடைசி வரை 
அவளை கைவிட்டு விடாதே



11. எந்த வொரு சொந்தமும் 
நம்மை எளிதாக 
தூக்கி எரிந்து 
விட்டு போய் விடலாம்
ஆனால் கணவன் மனைவி 
உறவு மட்டுமே
எவ்வளவு பிரச்சனைகளைச் 
சந்தித்தாலும்
எளிதில் பிரிந்து 
போகாமல் இருக்கும்



12. கணவனிடம் பணத்தை மட்டும் 
எதிர்பார்க்காமல் பாசத்தை எதிர்பார்க்கும் 
மனைவிகளும் இருக்கிறார்கள்
இது போன்ற மனைவிகள் 
கிடைத்தால் வாழ்க்கையும் இன்பமே



13. தன் கணவன் வாழ்கையில் 
எப்படியாவது வெற்றி 
பெற வேண்டும் என நினைத்து
பல தியாகங்களைச் செய்யும் 
மனைவிகளின் 
தன்னலமற்ற குணத்தை விட 
இந்த உலகில் 
விலையுயர்ந்தது வேறுதுவுமில்லை



14. சில கணவன் மனைவிக்கிடையே
சின்ன சின்ன 
சண்டைகள் வந்தாலும்
அடுத்த கணமே 
செல்லமாக பேசி கொள்வார்கள்
ஒருவர்க்கொருவர் 
அன்பு செலுத்தி வாழ்வார்கள்



15. நான் வெளியில் 
எவ்வளவு 
கஷ்டங்களைச் சந்தித்தாலும்
வீட்டில் எனக்காக நீ  இருக்கிறாய்
என நினைத்ததும் 
என் கவலைகள் எல்லாம் 
காணாமல் போனது



16. உடல் களைத்து போய்
வீடு திரும்பிய என்னை
உன் அழகிய 
புன்னகையால் வறவேற்று
அறுசுவை உணவுகளை 
அன்புடன் பரிமாறி
நாளும் உன் அன்பால் 
அரசனை போல
என்னை வாழ வைக்கிறாய்

    

17. உன்னை மகிழ்ச்சி படுத்த 
நான் எதையும் செய்வேன்
உன் துணையோடு 
இந்த வாழ்க்கையைச்  
சிறப்பாக வாழ்ந்து முடிப்பேன்



18. நீ என் அருகில் இல்லாமல்
என்னால் ஒரு நாளை கூட
தனியாக கடக்க முடியவில்லை
சீக்கிரம் திரும்பி வந்து விடு
என்னை கட்டி அணைத்து விடு
என் கன்னத்தில் 
முத்தம் ஒன்றை கொடுத்திடு



19. உன் கரம் பிடித்த நாளிலிருந்து
என் உலகமே நீதான்
உன்னக்காக தான் 
என் இதயமும் துடிக்கிறது
இந்த பிறவியில் நான்
உனக்கு மட்டுமே சொந்தம்



20. உன்னோடு சண்டை போட்டு 
நான் தோற்று போவதில் கூட
எனக்கு ஒரு சுகம் தான்



21. காலையில் கண்விழித்ததும் 
உன் முகத்தைப் 
பார்க்க வேண்டும்
உன் கையால் உணவு
உண்ண வேண்டும்
மாலை பொழுதின் அழகை 
உன்னோடு ரசிக்க வேண்டும்
மனதுக்கு இதமான பாடல்களைச் 
சேர்ந்து கேட்க வேண்டும்
இரவில் நிலவின் ஒளியில்
நம் இமைகள் மூடும் வரை
நாம் இருவரும் கதை பேச வேண்டும்



22. நீ கொடுக்கும் 
ஒரு ரோஜா மலர் கூட 
விலைமதிப்பில்லாத
பரிசு தான் 
எனக்கு



23. நீ வேறு நான் வேறு 
என்று நினைக்காத ஒரே உறவு 
கணவன் மனைவி உறவே



24. ஒவ்வொரு நாளையும் 
உன்னோடு 
கடக்கும்  போது தான் புரிகிறது 
என் வாழ்க்கைக்குக் கிடைத்த 
கடவுளின் மிகப்பெரிய
வரம் நீயென்று



25. கணவன் மனைவி உறவுவிக்கிடையே
ஒருவர் மற்றொருவரின் 
குறைகளைச் சுட்டி காட்டுவதைக்
குறைத்து விட்டு
அவர்களின் நிறைகளைக் கண்டறிந்து 
அவர்களை பாராட்டுவதே சிறப்பு



26. உன் வருகையால் 
என் வாழ்க்கையே அழகானது
இப்பொழுது தான்
இந்த வாழ்க்கையை வாழவே 
எனக்கு பிடிக்கிறது



27. நம் இலட்சியத்தை அடைந்து 
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு
ஆதரவையும் ஊக்குவிப்பையும் 
கொடுக்கும் கணவன் அல்லது மனைவி 
கிடைத்தால்
நாம் வாழ்க்கையில் 
அனைத்தையும் சாதித்து விடலாம்



28. கணவன் மனைவி 
உறவு உறுதியாக இருந்தால் தான் 
இல்லறம் செழிக்கும்
வாழ்க்கையில்
இன்பங்களும் கூடும்



29. நீ என்னை நேசிப்பது போல
வேறு யாரும்
என்னை நேசித்ததில்லை
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
அத்தனையிலும் உன் கணவனாக 
வாழ ஆசைப்படுகிறேன்



30. என் ஆயுள் முழுவதும்
நான் 
உன் அருகிலே 
இருக்க வேண்டும்
உன் அன்பிலே 
வாழ வேண்டும்



31. நீ பேசும் 
அழகை ரசித்தேன்
நீ சமைத்த உணவை 
ருசித்து உண்டேன்
நீ என்ன தேவதையா 
என யோசித்தேன்
உன்னை என் நெஞ்சில் 
வைத்து நேசித்தேன்
உன்னை என் இதயத்தில்
வைத்து பாதுகாத்தேன்



32. நீ மட்டுமே 
என்னை நன்கு புரிந்து கொள்வாய்
என தெரிந்து தான் 
என் மனதில் இருப்பதை 
எல்லாம் உன்னிடம் மட்டுமே 
மனம் விட்டு பேசுகிறேன்



33. என் மௌனத்தைக் கூட 
புரிந்து கொள்கிறாய்
என் கண்ணீரை எல்லாம் 
துடைத்து விடுகிறாய்
எனக்காக வாழ்கிறாய்
என் உயிராய் இருக்கிறாய்



34. என் கடந்த கால வாழ்க்கையைத் 
தெரிந்து கொண்டாய்
என் குறை நிறைகளை 
அறிந்து கொண்டாய்
இன்று நான் வாழும் 
இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்
காரணமாக இருக்கிறாய்
இன்பத்திலும் துன்பத்திலும்
சிறந்த துணையாக 
என் அருகில் இருக்கிறாய்



35. உன்னை போன்ற 
ஒரு நல்லவரை 
கணவனாக  நான் அடைந்ததற்கு
அந்த இறைவனுக்குக் 
கோடி நன்றிகள் கூறினாலும் போதாது



36. கணவன் மனைவி உறவு 
மட்டும் சரியாக 
அமைந்து விட்டால் 
வாழ்க்கையில் மற்றவை 
அனைத்தும் சரியாக 
அமைந்து விடும்



37. கணவனின் குறும்பை 
ரசிப்பது மனைவி தான்
தன் மனைவியை
குழந்தையாக நினைப்பது 
ணவன் தான்



38. மனைவியை அடிக்கடி குறை 
சொல்லும் கணவனுக்கு 
புரிவதில்லை மனைவி தான் 
அவனுக்கு கிடைத்த 
மிகப்பெரிய பொக்கிஷம் என்று



39. உடலுக்கு உயிர் முக்கியம்
எனக்கு நீ முக்கியம்



40. அன்பை அடிக்கடி 
வெளிப்படுத்தாமல் 
இருப்பது கணவன்
சின்ன சின்ன விஷயத்திலும் அ
ன்பை எதிர்பார்ப்பவள் மனைவி



41. ஒரு பெண்ணிற்கு 
கிடைக்கும் மிக பெரிய 
சந்தோசம் அவளின் 
கணவனின் அன்பு தான்



42. கணவன் மனைவி 
உறவுக்கிடையே 
நீயா நானா என போட்டி போட்டு 
ண்டை போடுவதை தவிர்த்து
நீயும் நானும் இணைந்து வாழும் 
வாழ்க்கை இது என்று
ஒற்றுமையாக வாழ வேண்டும்



43. எவ்வளவு கோபம் வந்தாலும்
தன் மனைவியிடம் 
கசப்பான வார்த்தைகளால் 
பேச கூடாது



44. பாசமான கணவன்
நல்ல குழந்தைகள்
வசிக்க சிறு வீடு
நிறைய சந்தோசம்
இது தான் 
பல பெண்களின் 
கனவு வாழ்க்கை



45. கருத்து வேறுபாடுகள் 
இருந்தாலும்
காதலால் இணைந்ததே
கணவன் மனைவி உறவு



46. கணவன் மனைவி 
உறவுக்கிடையே
ஒருவர்க்கொருவர் மரியாதை 
செலுத்துவது மிகவும் முக்கியம்



47. ஒரு ஆண் தன்னுடைய 
சோகங்களைப் பகிர்வதும்
அதிக அன்பு காட்டுவதும்
தான் அதிகம் நேசிக்கும்
 மனைவியிடம் தான்



48. தன்னுடைய வாழ்க்கை 
துணையின் உணர்வுகளையும் 
சோகங்களையும் நன்கு 
புரிந்து கொண்டு 
அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்



49. எந்தவொரு 
எதிர்பார்ப்புகளும் இல்லாமல்
ஒருவர்க்கொருவர் 
அன்பை பரிமாறி 
ஆனந்தமாக வாழ்வது 
கணவன் மனைவி உறவு தான் 

Post a Comment

1 Comments