Subscribe Us

Header Ads

Love Quotes In Tamil

LOVE QUOTES IN TAMIL


Love Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, காதல் கதைகள்,
காதல் பாடல்கள் மற்றும் காதல் படங்கள் என அனைவருக்கும் காதல் என்று சொன்னாலே மிகவும் பிடிக்கும். இருப்பினும், சிலருக்கு அந்த காதல் வாழ்க்கையில் பல இன்பங்களைத்  தருகிறது சிலருக்கு துன்பங்களையும் கொடுக்கிறது.எதுவாக இருந்தாலும், இந்த மண்ணில் காதல் என்றும் காலத்தால் அழியாத காவியமாக இருந்து நம் இதயத்தில்  என்றென்றும் வாழ்கிறது . நீங்களும் காதலிக்கிறீர்களா? உங்களுக்காக தமிழில் எழுதிய Love Quotes.



Love Quotes In Tamil



1. சிலருக்கு
காதல் கல்யாணத்தில் முடிகிறது
சிலருக்கு  
காதல் கல்லறையில் முடிகிறது
சிலருக்கு
கடைசி வரை வருகிறது
சிலருக்கு
கண்ணீராய் தொடர்கிறது
சிலருக்கு
காவியமாய் மாறுகிறது
சிலருக்கு
கனவுகளில் வாழ்கிறது
சிலருக்கு 
கவிதையாய் பிறக்கின்றது
சிலருக்கு 
காயமாய் வலிக்கின்றது



2. கைத்தொலைபேசியில் கண்ணெதிரில்  
வாழ்கின்ற சில 
காதல் பிரிந்து விடுகிறது 
கடிதத்தில் கண் தொலைவில்
வாழ்கின்ற பல 
காதல் இணைந்து விடுகிறது 



3. தூரத்தில் நீ இருந்தும்
உன் இதய துடிப்பின் ஓசை
என்றும் என் செவியில்
கேட்கும் இசையே




4. ஓர் அழகிய கவிதை வேண்டும் 
என்று சொன்னது
என் இதயம்
என் கரங்கள் எழுதியது 
உன்னுடைய பெயரை



5. கேட்ட கேள்விக்கு
விடை சொல்கிறது
 
உன் மௌனம்
பார்த்த பார்வைக்கு
தடை தெரிவிக்க்கிறது 
உன் கண்ணீர்



6. உன்னுடன் வாழ்க்கையை
பகிர்ந்து கொள்ள விரும்பிய
என்னை விட்டு நீ பிரிந்து
விலகி போனது ஏன்?



7. உன் இதயத்தில் 
ஒரு இடம் வேண்டும் 
என கேட்க மாட்டேன்
உன் இதயமே நானாக இருக்க
வேண்டும் என்ன கெஞ்சிகிறேன்



8. காதலின் காயத்திற்க்கு
கண்ணீரும் கவிதையும்
ஆறுதலே



9. உன் எதிரில்
என் உணர்வுகளை
சொல்லும் போது
வார்த்தைகளும் வஞ்சகம் செய்தது
என் எண்ணங்களை
எழுதும் போது
எழுத்துக்களும் ஏமாற்றி விட்ட்து
என் காதலை
காட்சியாக்கிறேன்
என் கண்ணீர் துளிகளாய்



10. மழை மண்ணை எப்போதாவது 
சந்திப்பது தொலை தூர காதல்
அலை கரையின் மணலை
என்றும் தொடுவது
நெருங்கிய காதல்



11. நீயே என் வாழ்க்கை 
என இருக்கிறேன்
நித்தமும் 
உன் நினைப்பிலே 
வாழ்கிறேன்



12. என் வாழ்க்கை புத்தகத்தில்
நான் உன்னோடு இருக்கும் 
பக்கங்களே மிகவும்
அற்புதமானது 



13. உன்னுடைய  சிரித்த முகத்தைப்  
பார்த்து கொண்டே 
நான் சிலையாகி போய்  
நிக்கிறேன்



14. நம்முடைய 
வாழ்க்கை மாறலாம்
தோற்றம் மாறலாம்
ஆனால் நாம் நேசித்தவர்களோடு 
வாழ்ந்த தருணங்கள் 
என்றும் அழகிய நினைவுகளாக 
மனதில் மலர்ந்து கொண்டே இருக்கும்



15. விண் இருளை அழகாக்க
நிலா தேவை
என் இதயத்தை அமைதியாக்க
நீ தேவை



16. கவிதையாய் அவள் 
என் மனதில் எழுதினாள்
காதலை
என் இதயம் அதனை
இதயதுடிப்பால் வாசிக்கிறது



17. உன்னிடம் அடகு வைத்த 
என் இதயத்தை 
மீண்டும் என்னால்
மீட்க முடியவில்லை
இனி என் இதயம் உன்னுடையது



18. உன் அளவற்ற அன்பிற்கு 
ஈடாக நான் 
அன்பு செலுத்த முடியாமல்
உன்னிடம் தோற்று போகிறேன்
இருந்தும் முதல் முறையாக 
தோற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்



19. உறக்கம் கூட 
என்னை ஒதுக்கி விட்டது
நான் உன்னுடன் 
பேசாமல் இருந்ததால்



20. மழையும் மாலை பொழுதும்
கூட ஏனோ அதிசயமாகிறது
அவள் என் அருகில் இருக்கும் பொழுது



21. என் இதய துடிப்பின் இசையோடு
என் உள்ளமும் பாடியது
உன்னை பற்றி



22. காதல் வந்த பின்
காணும் யாவும் இங்கு
புதிதாய் இருந்தது



23. உன் மீது கோபம் என்றாலும்
மீண்டும் உன்னிடமே வந்து
உன்னை அணைத்து கொண்டு 
அழுகிறேன்
உன் அன்புக்காக 
ஏங்குகிறேன்



24. உன்னை விட்டு 
விலகிய போது தான் புரிகிறது 
இனி உன்னை 
விட்டு விட கூடாது என்று
நமக்கிடையே இருப்பது 
காதல் என்று



25. நம் இதயத்தில் 
காதல் 
வருவதும்  தெரியவில்லை 
நம் இதயத்தை விட்டும்  
காதல் செல்வதில்லை 
காலம் கடந்தும் மாறாமல்
மறக்க முடியாமல் வாழ்கிறது



26. உன்னை நான் 
வெறுத்ததும் இல்லை
ஒரு போதும் மறந்ததும் இல்லை
என்றும் என் கனவிலும் நினைவிலும் நீயே



27. உன்னை போல 
என் வாழ்வில் யாருமில்லை
உன்னை கண்ட பின்
என் வாழ்வில் துன்பமில்லை
நீயே  என் வாழ்வின் இன்ப வரம்



28. உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் 
என்றே நான் இறைவனை வேண்டுகிறேன்
அந்நாள் வரும் வரை 
நான் காத்திருக்கிறேன்
அதிகமாக உன்னை 
நான் காதலிக்கிறேன்



29. உன்னை வர்ணித்து 
கவிதை எழுதும் போதே 
என் உதட்டில் 
சிறு புன்னகை பூக்கின்றது



30. நீ சிறிது நேரம் என்னிடம் 
சண்டை போட்டால் கூட 
நான் உன் குரலை கேட்க முடியும்
என்ற மகிழ்ச்சியில் இருப்பேன்
ஆனால் நீயோ 
பல நாட்கள் 
என்னிடம்  பேசாமல் 
மௌனம் கொண்டு 
என்னை நாளும் 
அழ வைக்கிறாய்  



31. முதலில் காரணம் 
இன்றி தான்
காதல் வருகிறது
பிரிவில் காரணங்கள் 
சொல்லி தான் 
காதல் பிரிகிறது



32. என் உயிர் உள்ளவரை
உன்னை காதல் செய்வேன்
என் சுவாசமாக



33. என் கண்கள் மூடினாலும் 
என் இதய கதவுகள் 
என்றும் உன் காதலின் 
வருகைக்காக திறந்திருக்கும்



34. நீ என் வாழ்க்கைக்கு 
கிடைத்த பரிசு
உன்னை பாதுகாப்பாக 
பார்த்து கொள்வது 
என் பொறுப்பு



35. உன்னை காதலிக்க 
தொடங்கிய பின்பே 
என் வாழ்வும் 
வானவில்லாய் தோன்றியது



36. இந்த மண்ணை விட்டு 
நான் சென்றாலும் 
உன் மனதை விட்டு 
ஒரு போதும் நீங்க மாட்டேன்



37. கடலின் அலைகள் 
கரையைத் தொடுவது போல
உன் காதலும் அன்பும் 
என் இதயத்தில் 
சேர்ந்து கொண்டிருக்கிறது



38. உன் நினைவுகளே 
எனக்கு துணையாக 
இருக்கும் போது 
தனிமையை கூட 
நான் ஆசையாக 
ஏற்று கொள்கிறேன்



39. உன் அழகை ரசிக்கவே
என் இமைகள் மூடாமல்
இருக்கின்றன



40. உன் அன்பும் காதலும் 
என் இதயத்தைக் 
கொள்ளை அடித்தது
என்னை மகிழ்ச்சியாக
வாழ வைத்தது



41. உன் மீது நான் வைத்த 
அன்பை சொல்ல 
எனக்கு கிடைத்த 
வரமும் வாய்ப்பும் 
இந்த காதல்



42. உன் அன்பின் மாயம் 
என் இதயத்தின் 
காயங்களைக் குணமாக்கியது



43. நான் உன் அருகில் இருந்தால்
நான் உன்னிடம் 
சொல்ல நினைப்பதை மறக்கிறேன்
நான் உன் தொலைவில் இருந்தால்
உன்னை நினைத்து 
கவிதைகளாக எழுதுகிறேன்



44. நீ இவ்வாறு 
இருப்பதால் தான் 
உன்னை காதலிக்கிறேன் 
என்பது உண்மை காதல் அல்ல
நீ எப்படி இருந்தாலும் 
உன்னை மட்டுமே காதலிப்பேன்
என்பது தான் 
உண்மையான காதல்



45. இந்த ஒரு 
பிறவி மட்டும் போதாது 
நான் உன்னை காதலிக்க
இனி எத்தனை 
பிறவி எடுத்தாலும் 
நான் உன்னையே 
காதலிக்க வேண்டும்



46. புரிதல் உள்ள காதலில் 
என்றுமே பிரிதல் இல்லை
அன்பு மட்டுமே 
நிறைந்திருக்கும்



47. உன் அன்புக்கு 
அடிமையாகி இருக்கிறேன்
என் இதயத்தை 
அழகாக ஆட்சி செய்கிறாள் 
என் இதய மங்கை



48. காதல் கவிதைகளை 
எழுத எனக்கு தோன்றவில்லை 
நீ என் காதல் கவிதையாக
இருக்கும் போது



49. இருளான என் வாழ்க்கையில் 
உனது காதல் தீபத்தை ஏற்றி 
என் வாழ்க்கையைப் 
பிரகாசமாக மாற்றியவள் நீயடி

Post a Comment

0 Comments